1. ரத்தக்கொழுப்பை குறைக்கிறது
கொழுப்பைக் குறைப்பதில் வெந்தயக் கீரைக்கு வேறு எந்தக் கீரையும் நிகராவதில்லை என்கின்றன ஆய்வுகள். குறிப்பாக எல்டிஎல் எனப்படுகிற கெட்ட கொழுப்பை குறைக்கும் குணம் இதற்கு உண்டு. உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு வகை கொழுப்புகளை உடல் உறிஞ்சிக் கொள்வதைத் தடுக்கும் சக்தி அதிகம் கொண்டது இந்தக் கீரை.
2.இதய நோய் பாதிப்புகளை குறைக்கிறது
வெந்தயக் கீரையில் உள்ள இயற்கையான கரையும் தன்மையுடைய நார்ச்சத்தான கேலக்டோமன்னன் இதய ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள அதிக அளவிலான பொட்டாசியம், ரத்த அழுத்தத் துக்கும் இதயக் கோளாறுகளுக்கும் காரணமாகிற சோடியத் தின் விளைவுகளைத் தவிர்த்து இதய நலம் காக்க உதவுகிறது.
3. ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது
நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயமாகவோ, வெந்தயக் கீரை யாகவோ உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தில் உள்ள கேலக்டோமன்னன் ரத்தத்தில் சர்க்கரை அளவு சேரும் வேகத்தைக் குறைக்கிறது. வெந்தயக் கீரையில் உள்ள அமினோ அமிலமானது இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது.
4. செரிமானத்தை சீராக்குகிறது
நார்ச்சத்தையும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளையும் அதிக அளவில் கொண்டதால் நச்சுகளையும் கழிவுகளையும் வெளியே தள்ளி, செரிமானத்தை சீராக்கச் செய்கிறது வெந் தயக் கீரை. அஜீரணத்துக்கும் வயிற்றுவலிக்கும் வெந்தயம் சேர்த்த டீயை மருந்தாகக் கொடுப்பதுண்டு. மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் வெந்தயக் கஷாயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மருந்தாக எடுத்துக் கொண்டால் நிவாரணம் பெறலாம்.
5. நெஞ்செரிச்சலைத் தவிர்க்கிறது
தினமும் உணவில் 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உணவு எதுக்களித்துக் கொண்டு வருகிற பிரச்னையும் நெஞ்செரிச்சலும் குணமாகும். வெந்தயத்தில் உள்ள கொழகொழப்புத் தன்மையானது வயிறு மற்றும் சிறுகுடல் பகுதியை மூடி, வயிற்று எரிச்சல் மற்றும் உபாதை களை விரட்டச் செய்கிறது. வெந்தயத்தின் கொழகொழப்புத் தன்மையை முழுமையாகப் பெற அதைத் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து உண்பது சிறந்தது.
6. எடைக்குறைப்புக்கு உதவுகிறது
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்தை மென்று தின்பதன் மூலம் அதிகப்படியான எடை குறையும். வெந்தயத்தின் நார்ச்சத்தும், ஜெல் போன்ற அதன் சிறப்புத் தன்மையும் வயிற்றை நிறைத்து அதீதப் பசியைக் குறைத்து, குறைந்த அளவே சாப்பிட்டதும் வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தும். அதன் விளைவாக எடை குறையும்.
7. காய்ச்சலுக்கும் தொண்டைக் கரகரப்புக்கும்:
ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, அதில் வெந்தயப் பொடி சேர்த்து சாப்பிடுவதன் மூலம் காய்ச்சல் தணியும். தொண்டைக் கரகரப்பும் இருமலும்கூட குணமாகும்.
8. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கட்டாய உணவு வெந்தயம். அதிலுள்ள தாய்ப்பால் சுரப்பைத் தூண்டி அதி கரிக்கச் செய்யக்கூடியது.
9. சுகப்பிரசவத்துக்கு உதவுகிறது
பிறப்புறுப்புப் பகுதிகளைத் தளரச் செய்து சுகப்பிரசவம் நடக்க உதவும் தன்மைகளைக் கொண்டது வெந்தயம். பிரசவ வலியைக் குறைக்கக்கூடியது. ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்றி அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக்கொண்டால் அது கரு கலையவோ, குறைப்பிரசவம் நிகழவோ காரணமாகி விடும்.
10.மாதவிடாய் கோளாறுகளை சரியாக்குகிறது
பி.எம்.எஸ். எனப்படுகிற மாதவிலக்குக்கு முன்பான உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகளை விரட்டக் கூடியது வெந்தயம். மெனோபாஸ் காலத்தில் பெண்கள் சந்திக்கிற உடல் சூடாவது, மனநிலைத் தடுமாற்றங்கள் போன்ற வற்றையும் இது விரட்டக்கூடியது. மாதவிடாய், கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் காலங்களில் பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். வெந்தயக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
வெந்தயக்கீரையை சமைக்கும் போது கூடவே தக்காளி சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச்சத்தானது முழுமையாகக் கிடைக்கச் செய்ய முடியும்.
11. பெருங்குடல் புற்றுநோய் வராமல் காக்கிறது
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் அதன் வழ வழப்புத் தன்மை உடலின் நச்சுகளை வெளித்தள்ளி விடுவ தால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.
12.சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள் சருமத்தில் ஏற்படுகிற கொப்புளங்கள், எக்சீமா எனப்படுகிற சரும நோய் போன்றவற்றை சரியாக்கு கின்றன. சருமத்தில் உள்ள தழும்புகளையும் போக்குகிறது.
14. கூந்தல் பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது
வெந்தயத்தை முறையாக உணவில் சேர்த்துக்கொள்வது கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உதவும். தேங்காய் எண்ணெய் யில் வெந்தயத்தை ஊற வைத்து, தினமும் இரவில் அந்த எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்து காலையில் குளித்து வந்தால் கூந்தல் உதிர்வது கட்டுப்படும். பொடுகையும் விரட்டும்.
-விடுதலை,4.7.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக