அல்சரை குணப்படுத்த கூடியதும், பார்வை திறனை அதிகரிக்கவல்லதும், புற்றுநோய் வராமல் தடுக்க கூடிய தன்மை கொண்டது. அன்றாடம் ஒரு கேரட் சாப்பிட்டு வருவது நல்லது. பல்வேறு சத்துக்களை கொண்ட கேரட் கேன்சரை தடுக்கவல்லது. இதில், மருத்துவ வேதிப் பொருட்கள் அதிகம் உள்ளன. கேரட்டை பயன் படுத்தி பார்வை திறனை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம்.
கேரட்டை சுத்தப்படுத்தி, அதன் தோலை சீவிவிட்டு நீர் அதிகம் சேர்க்காமல் சாறு எடுக்கவும். 50 மில்லி கேரட் சாறுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து குடிக்கவும்.
கேரட்டை சுத்தப்படுத்தி, அதன் தோலை சீவிவிட்டு நீர் அதிகம் சேர்க்காமல் சாறு எடுக்கவும். 50 மில்லி கேரட் சாறுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து குடிக்கவும்.
பார்வை கோளாறு உள்ளவர்கள் கண்களை பலப்படுத்த இந்த சாறை குடித்துவந்தால் கண் நரம் புகள் பலப்படும். கண் பார்வை தெளிவாக இருக்கும். ரத் தத்தை சுத்திகரிக்கும். கேரட்டில் உள்ள கெரோட் டின் என்ற வேதிப் பொருள் கண், தோல், எலும்புகளுக்கு பலம் தருகிறது. கேரட்டை பயன் படுத்தி வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். முட்டை கோசை நீர்விடாமல் அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் கேரட் சாறு சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வயிறு உப்புசம் சரியாகும். அல்சர் குணமாகும்.
கேரட் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நச்சுக்களை வெளியேற்றி கேன்சர் வராமல் தடுக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கேரட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.
குழந்தைகளுக்கு கேரட் சாறு கொடுக்கும்போது ஏலக்காய், பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் பச்சை வாடை இல்லாமல் இருக்கும். குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.
-விடுதலை,8.816
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக