கொள்ளு ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளு ஊற வைத்து சாப் பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள் ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த நீர்க்கோர்வை குணமா கும்.
உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக் கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும்.
பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.
குதிரைகள் பலமைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந் ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். கொள்ளு உட லில் இருக்கும் கொழுப்பு ஊளைச்சதை யைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. குழந்தை களுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போய்விடும்.
அப்படி ஒரு அருமையான மருத்துவகுணம் இந்த கொள்ளுக்கு உண்டு. வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதா னவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். குளிர்காலத்தில்தான் அதிகம் சளிபிடிக்கும். அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது. சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடை யைக் குறைக்கும். அதைவிட ராத்திரி ஒரு கைப் பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார் கள். கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
கொள்ளுவை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமை யாக இருக்கும். இப்படி செய்ய முடியாத வர்கள் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.
-விடுதலை,18.7.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக