வியாழன், 27 ஏப்ரல், 2023

காய்கறிகளும் - உடல் உறுப்புகளும்

 

13

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களும் காய்கறி களும் ஒரே மாதிரி இருக்கும். அவை தொடர்பாக சில சுவையான தகவல்களோடு  அவைகளை சாப்பிடுவது குறிப்பிட்ட அந்த உடல் உறுப்புகளின் ஆரோக்கியத் திற்கு மேலும் நன்மை பயக்கும்.  

 1. கண்

வட்ட வடிவத்தில் சிறு துண்டுகளாக வெட்டப் பட்டிருக்கும் கேரட், மனிதனின் கண் போல் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? கூர்ந்து பார்த்தால் கேரட், கண்களின் உள் அடுக்குகளை ஒத்திருப்பது தெளிவாக தெரியும். கேரட், அதில் இருக்கும் பீட்டா கரோட்டின் என்ற தாவர இரசாயனத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்தை பெறுகிறது. இந்த பீட்டா கரோட்டின் என்பது கண்புரை உருவாகும் அபாயத்தை குறைக்கிறது. தெளிவான கண் பார்வையை பராமரிக்கவும் உதவுகிறது. 

2. இதயம்

தக்காளி இதயத்தை போல் சிவப்பு நிறம் கொண்டது. தக்காளி, இதயத்தின் உள் அமைப்பை போலவே நான்கு அறைகளை கொண்டது. தக்காளியில் இருக்கும் லைகோபின், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் சி, தக்காளியில் நிறைந்திருக்கிறது. உயர் குருதி அழுத்த பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள் தக்காளி சாப்பிடலாம். 

3. நுரையீரல் காற்றறைகள்

நுரையீரலின் கட்டமைப்பு சிறிய காற்றுப்பாதைகளை கொண்ட கிளைகளை உள்ளடக்கியது. அவை அல்வி யோலி எனப்படும் திசுக்களால் ஆனவை. இது பார்ப் பதற்கு திராட்சைக் கொத்து போல காட்சியளிக்கும். இந்த கட்டமைப்புதான் நுரையீரலில் இருந்து ஆக்சி ஜனை குருதி ஓட்டத்திற்கு எடுத்து செல்ல அனுமதிக் கின்றன. திராட்சை பழம் அதிகம் சாப்பிடுவது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். திராட்சை விதை களில் புரோஆந்தோசையானிதின் என்ற வேதிப்பொரு ளும் உள்ளது. இது ஒவ்வாமை காரணமாக ஏற்படும் ஆஸ்துமா பிரச்சினையை குறைக்க உதவும்.

4. சிறுநீரகம்

கிட்னி பீன்சின் பெயர் முதல், வடிவம் வரை அனைத்தும் சிறுநீரகங்களை ஒத்திருக்கும். சிறுநீரக கற்களைத் தடுப்பதற்கு கிட்னி பீன்ஸ் சிறந்த உண வாக கருதப்படுகிறது. சிறு நீரகங்களின் சீரான செயல் பாட்டுக்கும் துணைபுரியும். மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வும், மலச்சிக்கலை தடுக்க வும் உதவும். 

5. கருப்பை

கருப்பையின் வடி வத்தை போலவே அவ கொடா பழத்தின் உள் பகு தியும், விதையும் அமைந்தி ருக்கும். கருப்பை மற்றும் கருப்பை வாய்ப் பகுதியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவகொடா உதவும். வாரம் ஒருமுறை அவ கொடா சாப்பிடுவது பிறப்பு ஹார்மோன்களை சம நிலைப்படுத்த உதவும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்கவும் துணைபுரியும். 

6. மூளை

வால்நட்டின் உள்பகுதி பார்ப்பதற்கு மூளை போலவே காட்சியளிக்கும். பெருமூளை மற்றும் சிறுமூ ளையில் காணப்படும் சுருக்கங்கள், மடிப்புகளையும் ஒத்திருக்கும். மூளைக்குள் மூன்று டஜன் நியூரான்-டிரான்ஸ்மிட்டர்களை உருவாக்க வால்நட் உதவும். மேலும் வால்நட்டில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத் தவும் செய்யும். 

7. கணையம்

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும். இது கணையம் உள்பட உடலில் உள்ள அனைத்து திசுக்களையும் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. 

8. வயிறு

இஞ்சியின் வடிவம் வயிற்றின் குடல் பகுதியை ஒத்திருக்கும். பெருங்குடல் பாதிப்பு, வயிற்றுபோக்கு, வாயு பிரச்சினை, குமட்டல், பசியின்மை உள்பட பல் வேறு வகையான வயிற்று பிரச்சினைகளுக்கு இஞ்சி நிவாரணம் தரும். செரிமானத்திற்கு உதவுவதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியர்களும், சீனர்களும் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக வயிறு சார்ந்த பிரச்சி னைகளுக்கு இஞ்சியை அருமருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

கசப்பான பாகற்காயின் இனிப்பான தகவல்கள்!

 


2022 ஜூன் 16-30 2022

சமையலில் பயன்படுத்தும் பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்கள் விரும்பும் படி அதை எவ்வாறு சமைக்கலாம் மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
பாகற்காயில் மிதிபாகல், கொடிப் பாகல் என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டும் ஒரே மாதிரி பலன்கள் தருகின்றன. பாகற்காய் வயிற்றில் உருவாகும் பூச்சிகளை அழித்துவிடும். குடல் புழுக்களை நீங்க வைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
கல்லீரல், கண்நோய், பக்கவாதம் ஆகிய நோய்களைக் கட்டுக்குள் வைக்கும். தினமும் பாகற்காய் சாற்றோடு, சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தி வர, ரத்தம் சுத்தமாகும். சொறி, சிரங்கு இருந்தால் ஆறிவிடும்.
பாகற்காய் சாறு, தேன் சிறிது கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, ரத்த சோகை, காச நோய் கட்டுக்குள் வரும். நிவாரணம் கிடைக்கும்.
பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள் பொடிபோட்டுப் பிசறி சிறிதுநேரம் கழித்து எடுத்துப் பிழிந்தால் கசப்புச் சுவை போய்விடும். பிறகு சமைக்கலாம்.
நறுக்கி, மோரில் உப்பு சேர்த்து ஊற வைத்து, காய வைத்தால் சுவையான பாகற்காய் வற்றல் தயார். சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது கடலை மாவு, அரிசி மாவு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்துப் பிசைந்து, போண்டாவோ, பக்கோடாவோ செய்யலாம்.
மற்ற ஊறுகாய்கள் செய்வது போன்றே, பாகற்காயிலும் ஊறுகாய் செய்யலாம். பல மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காயை விதவிதமாகச் சமைத்து சாப்பிட்டால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

முருங்கையின் பயன்கள்!

 

உணவே மருந்து! : முருங்கையின் பயன்கள்!

2022 மருத்துவம் ஜூன் 1-15 2022

முருங்கைக்காய்
முருங்கையில் கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் நார்ச்சத்து, புரதச் சத்து ஆகியவை உள்ளன.
பெண்கள் வாரம் ஒருமுறை முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் அடி வயிற்றுவலி, மேகநோய், ரத்தச்சோகை சரியாகும். மலச்சிக்கலைக் குணமாக்கும் ஆற்றல் முருங்கைக்காய்க்கு உண்டு. உடல் சூட்டைக் குறைக்கும். மூலநோய் உள்ளவர்கள், முருங்கைக்காயை நெய் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.
முருங்கைக்காயில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு, பல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். பித்தப்பை சீராகச் செயல்பட உதவும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. சளி, ஆஸ்துமா, இழுப்பு மற்றும் சுவாசம் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த நிவாரணியாகச் செயல்படும்.
முருங்கை கீரையின் பயன்கள் கோடி..!
முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் விலகியே இருக்கும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், மூட்டு வலிகள், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், செரிமானக் கோளாறு உள்ளிட்ட-வற்றைக் குணப்படுத்தும்.
கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி ஆகியவை நிறைந்திருக்கின்றன. முருங்கைக் காய், இலை, பூ மட்டுமன்றி, பட்டை, வேர், விதை, பிசின் ஆகியவை நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்ப காலத்தி-லேயே நீரிழிவு நோய் அறிகுறிகளில் இருந்து முற்றிலும் காப்பாற்றும். முருங்கை இலை, விதை, வேர் இவற்றில் காயங்களை ஆற்றும் தன்மைகள் உள்ளன. காயங்களில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது. முருங்கை இலையைப் பொடி செய்து உண்டு வந்தால், அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்கள் செல்களில் சேதத்தை தடுக்கிறது. மன அழுத்தம், வீக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது – உயிர் அணுக்கள் சேதமா-வதைத் தடுக்கவும் உதவுகிறது. முருங்கை இலைப் பொடியில் பல்வேறு வகையான அழற்சி எதிர்ப்பு மூலக்கூறுகள் இருப்பதால் இதய நோய்கள் ஈ ஆர்த்தரிட்டிஸ், எடை அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்குத் தீர்வாக உள்ளது.முருங்கை இலைப் பொடி மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
முருங்கைப் ‘பூ’வின் மருத்துவப் பயன்கள்
முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இரு வேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும். அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்புத் தளர்ச்சி உண்டாகும். முருங்கைப் பூ கொதிநீர் வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
முருங்கைப் பிசின்
உடலை வலுப்படுத்த, உடலை இறுக்க, உடலை நல்ல ஒரு கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இந்த முருங்கை பிசின் மிகவும் நல்லது. முருங்கைப் பிசினை ஒன்றிரண்டாகப் பொடித்து, நெய்யில் வறுத்து தூள் செய்வது மிக எளிது. இந்தத் தூளை இரவு நேரத்தில் கொதிக்கின்ற நீரில் போட்டு அப்படியே வைத்திருந்து அதிகாலையில் வடித்து சாப்பிட்டால், உடல் வலுப்பெறும்.
நாம் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று உடலைத் தேற்றக்கூடிய ஒரு சூழல் உண்டு. இது எதுவுமே செய்யத் தேவையில்லை அதிகாலை ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி செய்து இந்த முருங்கைப் பிசினை ஊறவைத்து அப்படியே சாப்பிட்டுவிட்டு, பழ உணவை காலை உணவாக எடுத்து வந்தீர்கள் என்றால் அற்புதமான உடற்கட்டு, உடல்வாகு கிடைக்கும்.ஸீ

சனி, 15 ஏப்ரல், 2023

புளிச்சக்கீரையின் பயன்கள்!

 

உணவே மருந்து

மே 1-15,2022

புளிச்சக்கீரையின் பயன்கள்!

தென்னிந்தியாவில் அதிலும் பயன்படுத்தப் படும் கீரைகளில் புளிச்சக்கீரையும் ஒன்று. குறிப்பாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டு மக்கள் புளிச்சக்கீரையை அதிகம் தங்கள் உணவில் விரும்பிச் சேர்க்கிறார்கள்.

புளிப்புச் சுவை அதிகமாக இருப்பதால் புளிச்சக் கீரை என்று அழைக்கப்படும் இக்கீரையின் புளிப்புத்தன்மை நம் உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. நம் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும், உடல் வளர்ச்சிக்கும் இந்த புளிப்புச் சுவை மிகவும் அவசியம்.

புளிச்சக்கீரையில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுச் சத்துகளும் உள்ளன. குறிப்பாக வைட்டமின் ‘சி’, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன. அது மட்டுமல்லாமல் ஆன்டி ஆக்ஸிடென்ட் என்று சொல்லக்கூடிய Flavonoids, Anthocyanin   மற்றும் Poly Phenolic acid போன்றவை இருப்பதால் பல நோய்களைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது. தினந்தோறும் நமது சுற்றுச்சூழலில் உருவாக்கப்படும் தூசுகள், கழிவுகள் போன்ற மாசுபாடுகளால், நம் உடல் செல் அணுக்களில் மாற்றம் ஏற்பட்டு புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தக் கீரையை உட்கொள்வதால் இந்த நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

இந்தக் கீரையில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இச்சத்து செரிமான ஆற்றலை அதிகரித்து மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிறு கோளாறுகள் வராமல் தடுக்க உதவுகின்றன. அது மட்டுமின்றி, குடலின் ஆரோக்கியத்தையும் அதில் சுரக்கப்படும் சுரப்பின் அளவையும் அதிகரிப்பதால் உடல்  ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்தக் கீரையில் அதிகளவு உள்ள இரும்புச்சத்து நம் ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகையால் ஏற்படும் அசதி, படபடப்பு, உடல்சோர்வு, மூச்சு வாங்குதல் போன்ற கோளாறுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இந்தக் கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது உடலில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாடோடு வைத்திருக்க உதவியாக இருக்கிறது. இந்தக் கீரையில் அதிகளவு உள்ள பொட்டாசியம் ரத்தக் குழாய்களுக்குத் தேவையான ஓய்வினைக் கொடுத்து, உயர் ரத்த அழுத்தத்தையும், மன அழுத்தத்தையும் குறைப்பதால் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. இந்தக் கீரையில் கொழுப்புச் சத்தும் கலோரியும் குறைவாகவும்,  நார்சத்து அதிகமாகவும் இருப்பதால் அதிக நேரம் பசியில்லாமல் இருப்பதோடு, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்தக் கீரையில் அதிகளவு உள்ள வைட்டமின் ‘ஏ’ கண்பார்வை அதிகரிக்கச் செய்வதுடன், கண்புரை ஏற்படாமலும்  தடுக்கிறது. இந்தக் கீரையிலுள்ள புளிப்புச் சுவை, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் தோலில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கவும், அரிப்பு, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கும் நல்ல தீர்வாக உள்ளது. அது மட்டுமின்றி இதிலுள்ள வைட்டமின் மற்றும் தாது உப்புக்களால் கூந்தலின் பொலிவு அதிகரிப்பதுடன் முடி உதிர்வதும் தடுக்கப்படுகிறது. இதிலுள்ள வைட்டமின் ‘சி’ பல் ஈறுகளின் ரத்தக் கசிவைத் தடுப்பதோடு, எலும்பை வலுவாக்கவும்,   உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்து, நோய் வராமல் தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது’.’ ஸீ