திங்கள், 10 அக்டோபர், 2016

அவரையின் மருத்துவ குணங்கள்


ஒரு கப் அவரையில் நாள் ஒன்றுக்கு நமக்குத் தேவையான  எனும் Folate வைட்டமின்சத்து 44% உள்ளது. இந்த Folate   சத்துதான் மரபணுக்களின் உற்பத்திக்கும், செல்களின் வளர்ச் சிக்கும், அமினோ அமிலங்களின் தயாரிப்புக்கும் உதவுகிறது. கருவில் வளர்கிற குழந்தைகளுக்கும் ஊட்டச் சத்தினை தருவதற்கு Folate அவசியம்  என்பதை மருத்துவர்கள் அறிவார்கள்.
இதனால் கரு உருவாவதற்கு முன்போ, கருவுற்ற பின்போ தாய்மார்கள் அவரைப்  பிஞ்சினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும். குறைப் பிரசவம், குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள், முதுகுத்தண்டு வளர்ச்சியில் ஏற்படும்  குறைபாடுகள் போன்ற வற்றை இதனால் வராமல் தடுக்க முடியும்.
கருவிலிருக்கும் குழந்தைக்கும் ஆரோக்கியம் தரும்  உணவு அவரை என் பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.  Folate  சத்து நிறைந் திருப்பதைப் போலவே, நாள்  ஒன்றுக்கு நமக்குத் தேவைப் படும் இரும்புச்சத்திலும் 33% அளவு ஒரு கப் அவரையில் இருக்கிறது. இதனுடன் உடல் முழுவதும் பிராண வாயுவைக் கொண்டு செல்லும் பணிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி தரவும், உடல்  உஷ்ணம் பெருக்கவும்,
மூளையினின்று செல்லும் மின் சமிக்ஞைகளை சீராகச் செலுத்தவும் அவரை முக்கிய காரணியாக  விளங்குகிறது என்று கூறினால் அது மிகையில்லை. மேலும், அவரையில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்த சிவப்பு  அணுக்கள் உருவாகவும் பெரும் உதவி செய்கிறது. பாக்டீரியா எனும் நோய் செய்யும் நுண் கிருமிகளை அழிக்கும் பணிக்கு உதவும் ரத்த வெள்ளை அணுக்களுக்குப்  புத்துணர்வு தருவதாகவும் இரும்புச்சத்து விளங்குகிறது என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.
உடல் சீராக  இயங்குவதற்குத் தேவையான என்ஸைம் எனும் மருத்துவ வேதிப் பொருட்கள் துத்தநாகச்சத்தை அடிப் படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. இதனால்தான் சீரான வளர்ச்சி பெறுவதுடன், உடல் ஊனம் மற்றும் நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் வராமல்  காப்பதற்குத் துத்தநாகச் சத்து உதவுகிறது.
அந்த துத்தநாகம் அவரையில் மிகுந்து உள்ளது. இறுதியாகச் சொல்ல வேண்டும்  என்றால் ஒரு கப் அவரையில் ஒரு மனிதனுக்குத் தேவையான 15% சத்தினை பெறலாம் என்பது ஆய்வுகளின் முடிவு. ஒரு கப் அவரையில் 36 கிராம் நார்ச்சத்து உள்ளது எனத் தெரிய வருகிறது.
இந்த நார்ச்சத்து  உறுப்புகளைச் சீராக இயங்க வைக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதோடு, உடலில் தன்னிச்சையாகச் செயல்பட்டு நாளடைவில் புற்று நோயாக  உருவாகும் மாசுக்கள் உடலில் தங்காத வண்ணம் வெளியேற்ற உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கே உரித்தான  மலச்சிக்கல் தீரவும் அவரை அருமருந்தாகிறது.அவரையில் பொதித்துள்ள புரதச்சத்தும், நார்ச்சத்தும் ஒருங்கே சேர்ந்து  உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. இது உடலில் சேர்ந்த கொழுப்புச்சத்தை வெளியேற்றவும் உதவுகிறது. இதனால்  இதய நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் இதயம் சீராகச் செயல்படுவதற்கும் ஏதுவாகிறது.
அவரை மருந்தாகும் விதம்
* அவரை இலையைச் சாறு எடுத்து அதை ஒரு துணியில் நனைத்து நெற்றிப் பற்றாகப் போட்டு வைத்திருக்க சிறிது  நேரத்தில் தலைவலி தணிந்து போகும்.
* அவரை இலையை அரைத்துப் பசையாக்கி நாட்பட்ட ஆறாப் புண்களின் மேல் பற்றாகப் போட்டு வைத்தாலோ அல்லது  அவரை இலையைச் சாறு பிழிந்து புண்களைக் கழுவி வந்தாலோ புண்கள் விரைவில் ஆறிப் போகும். * அவரை இலைச்சாற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து நன்றாகக் கலந்து அதனோடு போதிய விளக்கெண்ணெய்  சேர்த்துக் குழைத்து புண்கள், அடிபட்ட காயங்கள், வீக்கங்கள் இவற்றின் மேல் பூசி வைக்க விரைவில் வந்த வடு  தெரியாமல் காயங்கள் மறைந்து போகும்.
* அவரை இலையைச் சாறு பிழிந்து அதனுடன் கற்கண்டு சேர்த்து இனிப்பாக்கி 10 முதல் 15 கிராம் அளவுக்கு உள்ளுக்கு  அந்தி சந்தி என இருவேளை சாப்பிட்டுவர ஓரிரு நாட்களில் சீதபேதி, நாட்பட்ட வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு  ஆகியன குணமாகும்.
* அவரை இலையை நசுக்கிச் சாறு பிழிந்து அதனோடு சிறிது மஞ்சள் சேர்த்துக் குழைத்துப் பூசி வைக்க நமைச்சல், எரிச்சல், சிவந்த நிறம் போன்ற தொல்லைகள் தருகிற சரும நோய்கள் பலவும் குணமாகும். வேர்க்குரு போன்ற  துன்பங்கள் கூட விலகி ஓடும்.
* அவரைக்காயைச் சமைத்தோ அல்லது சூப்பாகவோ செய்து வளரும் இளஞ்சிறார்களுக்குக் கொடுத்து வர நல்ல  ஞாபகசக்தியும் உடல் ஆரோக்கியமும் பெற்று வளர் வார்கள்.நம் வீட்டுத் தோட்டத்தில் சாதாரணமாக செழித்து வளரும்  அவரைக்கு இத்தனை சக்தியா என்று ஆச்சரியம் எழுகிறதுதானே?!

உடல் வலியை போக்கும் மஞ்சள்பொடி
உடல் சோர்வு அடையும்போது, வலி ஏற்படும். நீர் வற்றாமல் பார்த்துக் கொண்டால் உடல் வலியை போக்கலாம். ஓய்வில்லாத உழைப்பு, கிருமிகள் தொற்றால் வரும் காய்ச்சல் போன்றவற்றால் உடல் வலி ஏற்படும்.
மேலும், தசைகளுக்கு அதிக வேலை கொடுப்பதாலும், ஊட்டச்சத்து இல்லாததாலும் உடல் வலி ஏற்படுகிறது. மஞ்சள் பொடியை பயன்படுத்தி உடல் வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் மஞ்சள் பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து இரவு நேரத்தில் குடித்துவர நல்ல உறக்கம் ஏற்படும். உடல் வலி சரியாகும்.
மஞ்சள் மகத்தான மருத்துவ குணங்களை பெற்றது. புத்துணர்வு தர கூடியது. மஞ்சள் பொடி வலி நிவாரணியாக விளங்குகிறது.
-விடுதலை,11.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக