ஞாயிறு, 13 டிசம்பர், 2015

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்


நெல்லிக்காய் லேகியம்: 150 கிராம் பனை வெல்லத்துடன் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் கரைந்தவுடன் இறக்கி இதனை மேலாக இறுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட வேண்டும்.
பின்னர் அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஆழாக்கு அளவு சுத்தமான பசும்பால் விட்டு நன்றாக கொதித்து வரும் சமயம், இடித்து சலித்த நெல்லிக்காய் வற்றல் தூளில் ஆழாக்கு அளவு இதில் போட்டு பாகுபதம் வரும்போது, அரை ஆழாக்கு தேன், அரைஆழாக்கு சுத்தமான பசு நெய்யினை விட்டுக் கிளறி லேகியபதம் வந்தவுடன் இறக்கவேண்டும்.
ஆறிய பின்னர் வாயகன்ற பாட்டிலில் இட்டு மூடி வைத்து தினசரி காலை மற்றும் மாலையில் தேக்கரண்டி சாப்பிடலாம்.
இந்த லேகியம் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமன் செய்யும். உடலுக்குப் பலத்தை தருவதுடன், பித்தம் காரணமாக ஏற்படும் கிறுகிறுப்பு, வாந்தி, அரோசிகம் மாறும். ரத்தம் சுத்தமாகும்.
பெருங்குடல், சிறுகுடல், இரைப்பைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். சொறி, சிரங்கு நமைச்சல் குணமாகும். கருவுற்ற நிலையில் 21 நாள்கள் சாப்பிட சுகப்பிரசவம் ஏற்படும். கருப்பை கோளாறுகளைக் குணப்படுத்தும். காய கல்ப மாக செயல்படும் இந்த லேகியம் 3 மாதம் வரை கெடாது.
நெல்லிக்காய் வடாம்: ஒரு படி நெல்லிக்காயை கொஞ்சம் கொஞ்சமாக உரலில் போட்டு இடித்தால் மசித்து அதன் வித்துக்கள் வெளியேறும். நைந்தபின் வித்துக்களை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
எல்லாக் காய்களையும் இடித்த பின் பெரிய பச்சை மிளகாயில் 10-ம், இரண்டு கொட்டை பாக்களவு தோல் சீவிய இஞ்சி, கைப்பிடியளவு கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு ஆகியன சேர்த்து மறுபடியும் உரலில் போட்டு மைபோல் இடிக்கவேண்டும்.
பின்னர் அதனை எடுத்து உளுந்து வடை அளவிற்கு அடையாகத் தட்டி சுத்தமான பாயில் வைத்து, வெயிலில் உலர்த்தவேண்டும்.
நீர் சுண்டி சருகுபோல காய்ந்த பின் எடுத்து ஜாடியில் அடுக்கி மூடி வைத்துவிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவேண்டும். இது வெகுநாட்கள் கெடாது.
நெல்லிக்காய் சஞ்சீவி லேகியம்: நன்றாக பழுத்த நெல்லிப்பழங்களின் விதைகளை நீக்கி வெயிலில் சருகாக உலரவிட வேண்டும். பின்னர் அதனை உரலில் இடித்து சலித்துக் கொள்ள வேண்டும்.
சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 5 கிராம் எடுத்து இடித்து சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இரண் டாழாக்கு பசுவின் பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் 200 கிராம் பனைவெல்லத்தை போட்டு பாகு பதம் வரும் சமயம், அரை ஆழாக்கு சுத்தமான தேனை விட்டு சுக்கு, மிளகு, திப்பிலி தூளையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி தேக்கரண்டி காலையில் மட்டும் சாப்பிட்டு வர 40 நாளில் ரத்தம் சுத்தமாகும்.
-விடுதலை,1.9.14

பற்களில் கறை போக்க...


என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (Pottasium Permanganate) (KMNO4)பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.
கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற சில வழிமுறைகள்
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற கோவைப்பழம் சாப்பிடலாம்.
மகிழம் இலையை கஷாயம் செய்து வாய்க் கொப்பளித்து வந்தால், பல் நோய் எதுவும் அண்டாது.
மாவிலையைப் பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால், பற்கள் உறுதி பெறும்.
ஒரு துண்டு சுக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டால், பல்வலி நீங்கும்.
நந்தியாவட்டை வேரை மென்று துப்பினால், பல்வலி குணமாகும்.
-விடுதலை,1.9.14

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பேரிக்காய் - உடல் துப்புரவுத் தொழிலாளி பேரிக்காய்


உண்ணும் விஷயத்திலும் ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது பேரிக்காய். ஆனால் அதன் துவர்ப்பு சுவை காரணமாக பலரும் அதை விரும்புவது இல்லை.
பேரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சித்த மருத்துவர் கூறியதாவது; நம் மக்கள் மறந்த கனிகளில் அதிக மருத்துவக் குணம் கொண்டது பேரிக்காய்தான்.
இது நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலையைத் பழுதுபார்க்கும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
60 வயதைத் தாண்டும்போது இனப்பெருக்க மண்டலத்துக்குத் தொடர்புடைய ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடையும். இதனால் சிறுநீர் குழாயின் அளவு சுருங்கி, சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். சிறுநீர் கழிக்கவே பெரிதும் அவதிப்படுவார்கள்.
இந்தநிலையில் இவர்களுக்கு ப்ராஸ்டேட் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அந்தக் குறைப்பாட்டைப் போக்கும் மிகச்சிறந்த மருந்து பேரிக்காய். உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க பேரிக்காய் மிகவும் சிறந்தது.
பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் டைப் 2 சர்க்கரை  நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது.
இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயனங்கள் இன்சுலின் உணர்த்திறனை (சென்சிவிட்டி) மேம் படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் தொடர்பான நோய் களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த மருந்து. அதேபோல செல்களின் வளர்ச்சியில் பேரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
-விடுதலை,2.3.15

புதன், 9 டிசம்பர், 2015

எள்-ரத்த விருத்திக்கு உதவும் எள்


இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு எனக் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக் குறைபாடுள்ளவர்களுக்கு எள்ளு தேவை என்பதே இதன் அர்த்தம். எள்ளின் பயன்களைப் பற்றி நம்மவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க, அயல் நாடுகளில் எள்ளுக்கு அதிக வரவேற்பு.
வெள்ளை எள்ளைக் காட்டிலும் நமது நாட்டில் விளையும் கறுப்பு எள்ளில்தான் அதிக சத்துக்கள் உள்ளன. மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோயைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை அண்டவிடாமல் தடுக்கும்.
பைட்டோஸ்டீரால்  எனப்படும் அரிய வகைச் சத்து இதில் இருக்கிறது. இது, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். செஸமைன்,செஸமொலின் ஆகிய லிக்னன் வகை சத்துக்கள் எள்ளில் இருந்து பிரிக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்க  விரும்புபவர்களுக்கு  மாத்திரை வடிவத்தில் அயல்நாடுகளில் கொடுக்கப்படுகிறது.
எள்ளில் இருக்கும் பைட்டிக் அமிலம் இதயநோய்களைத் தடுக்க உதவுகிறது. தாமிரம் மிக அதிக அளவில் உள்ளது. 100 கிராம் எள்ளில், ஒரு நாளின் தேவையைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இது ஆர்த்ரைட்டிஸ் முதலான முடக்குவாத நோய்களைத் தடுக்கும், எலும்புகளைப் பலப்படுத்தும்.
மது அருந்துவதால் உடலில் சேரும் நச்சுக்கள், கல்லீரலைச் சிதைக்கும். எள் சாப்பிட்டுவந்தால் நச்சுக்கள் வெளியேறி, கல்லீரல் சிதைவு தவிர்க்கப்படும். 25 கிராம் எள்ளில், ஒரு கிளாஸ் பாலைவிட அதிக அளவில் கால்சியம் உள்ளது. இதனால், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் எடுத்துக் கொள்வது எலும்பு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
தயமின் சத்து எள்ளில் அதிகம் இருப்பதால், எள் உணவுகளைச் சாப்பிட்டதும் நன்றாகத் தூக்கம் வரும்.
தூக்கத்தின்போது உடலில் வலிகள் நீங்கும், மகிழ்ச்சியைத் தூண்டும் செரட்டோனின் ஹார்மோன் அதிகம் சுரப்பதால், மன அழுத்தத்தைப் போக்கும் மருந்தாக இருக்கிறது எள்.   துத்தநாகத்தை அதிகம் கொண்டிருக்கக்கூடிய உணவு எள். இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும்.
ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால், கெட்ட கொழுப்பு குறையும். நல்ல கொழுப்பும் அதிகரிக்கும். பக்கவாதம் வருவத வற்கான வாய்ப்பு குறையும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கும்.
நல்லெண்ணெய், சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாகதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். நல்லெண்ணெயில் இருக்கும் துத்தநாகம், தோல் புற்றுநோயைத் தடுக்கும். மேலும், தோல் வறட்சியையும் தடுக்கும்.
உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்வது, தோல் அரிப்புப் பிரச்சினையைத் தடுக்கும்.
-விடுதலை,9.11.15

சனி, 5 டிசம்பர், 2015

கோவைக்காய் - தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்


காடுகளிலும், புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளருவது தான் கோவைக்காய். கோவைக்காய் கொடி வகையை சேர்ந்தது. கோவைக் காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்தது. எளிமையான கோவக்காய் இந்தியாவில் எங்கும் கிடைக்கும்.
கோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல் நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.
நீரிழிவைக் கட்டுப்படுத்தும்
கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.
பல வருடங்களுக்கு முன்பே, அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்று சொல்லப்பட்டது.
நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று பெங்களூரில் நடத்திய ஆராய்ச்சியிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக் காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண் டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
வாய்ப்புண் குணமாகும்
கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக் காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த் தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக் காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக் காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.
தோல் நோய்களைக் குணமாக்கும்
இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.
கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.
வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்
கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்.
கோவைக்காய் மலிவான விலைக்கு கிடைக்கும் .கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்
-விடுதலை,10.9.12

வெள்ளி, 27 நவம்பர், 2015

கழற்சிக்காய் - மாதவிலக்கை சீர்படுத்தும் கழற்சிக்காய்


காய்ச்சலை குறைக்க கூடியதும், கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டதும், மாதவிலக்கை சீர்படுத்த வல்லதும், கர்ப்பபை கோளாறுகளை குணப்படுத்த கூடியதுமான மருத்துவ வகைகளில் ஒன்று கழற்சிக்காய். கழற்சிக்காய் கடினமான ஓட்டை உடையது. கழற்சி கொடியில் கூர்மையான முட்கள் இருக்கும்.
காடுகளில் வளரக் கூடியது. வைரத்தை போன்ற கடுமையான விதையான இது காய்ச்சலை குறைக்க கூடியது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. வீக்கத்தை குறைக்கும் கழற்சிக் காயானது, சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ரத்த போக்கை நிறுத்தக்கூடியது. மலேரியா காய்ச்சலை போக்கும்.கழற்சிக்காயை பயன்படுத்தி கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். கழற்சிக்காயை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.
கால் ஸ்பூன் அளவுக்கு பொடியுடன், சிறிது பெருங்காயம், அரை கப் மோர், சிறிது உப்பு சேர்த்து கலந்து வெறும் வயிற்றில், 48 நாட்கள் குடித்துவர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். ஈரல் பலப்படும். வயிற்று புண்கள் ஆறும். வயிற்று வலி குணமாகும். வாயுவை வெளித்தள்ளும். விரைவாதம் குணமாகும். கழுத்து, கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். தைராய்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். கழற்சிக்காயை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம். 4 பங்கு அளவுக்கு கழற்சிக்காய் பொடி, ஒரு பங்கு மிளகுப் பொடி ஆகியவற்றை கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தினமும் மூன்று விரல்களில் எடுக்கக்கூடிய அளவுள்ள பொடியை, 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகும். வயிற்று வலி குணமாகும்.
கழற்சிக்காய் குழந்தையின்மைக்கு மருந்தாகிறது. கர்ப்பபை கோளாறுகளை சரிசெய்ய கூடியது. வயிறு, இடுப்பு வலியை போக்க கூடியது. எந்தவகையான காய்ச்சலையும் குணப்படுத்தும் தன்மை உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
யானைக்கால் நோயை குணப்படுத்தும். கால்களில் நரம்புகள் தடித்து இருக்கும் நிலையை போக்கும். உடலில் உள்ள கொழுப்பு கட்டிகளை கரைக்கும். கழற்சிக்காயை பயன்படுத்தி வீக்கத்துக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண் ணெய்யுடன் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்து கொள்ளவும். இதை தடவுவதன் மூலம் மூட்டு வீக்கம், தொண்டை வீக்கம், விரைவாதம் சரியாகும். எந்தவொரு வீக்கத்தையும் போக்கும். வயிற்று வலியை குணமாக்கும் தன்மை கொண்டது கழற்சிக்காய். நெறிகட்டை சரிசெய்யும். நெறிக்கட்டால் வரும் காய்ச்சலை போக்கும். கருச்சிதைவு ஏற்படும் என்பதால் கர்ப்பிணிகள் கழற்சிக்காயை எடுத்துக் கொள்ள கூடாது. கழற்சிக்காய் இலையை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலை களை சுத்தப்படுத்தி எடுத்துக்கொள்ளவும். முட்கள் இருக்கும் என்பதால் இலையை பாதுகாப்பாக சுத்தப்படுத்துவது அவசியம். இலைகளை, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் வதக்க வேண்டும். இதை வீக்கம் இருக்கும் இடத்தில்  கட்டி வைக்கவும். வீக்கம், வலி குறையும். மூட்டு வலி சரியாகும். கழற்சிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இது மலேரியா காய்ச்சல், மனபிரமைக்கு மருந்தாகிறது.
-விடுதலை,23.11.15

கொழுப்பு குறைய தண்ணீர்க் கீரை


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் அன்றாடம் கீரையை சேர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது. கீரையின் பயன்களை நாம் அறிந்திருந்தாலும் அதை உணவில் சேர்த்துக் கொள்ள தயங்குகிறோம். இதன் காரணமாக சத்துக் குறைபாட்டால் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறோம்.. தண்ணீர் கீரை ஆரோக்கியத்தை தருவதோடு தோல் முடி பிரச்சனைகளை சரி செய்கிறது. பச்சை காய்கறிகளை சமைத்து உண்ணும் நாம் தண்ணீர்க் கீரையின் பயன்பாட்டை அறிந்துகொள்வோம். தாதுசத்து அதிகமுள்ள தண்ணீர் கீரை மிகச்சிறந்த உணவாகும். கால்சியம், இரும்புசத்து உள்ளிட்ட சத்துக்கள் இக்கீரையில் உள்ளது. உடலில் கொழுப்பு அதிகமுள்ளவர்கள் தண்ணீர்க் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் கொழுப்பு குறையும். உடல் எடையை கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பதில் இக்கீரை மகத்தான பங்காற்றுகிறது. இக்கீரையை சமைத்தோ, சூப் செய்தோ உணவாக பயன்படுத்தலாம்.
மஞ்சள் காமாலை, கல்லீரல் பிரச்சினைகளுக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் தண்ணீர் கீரை பயன்படுத்தப் படுகிறது. இரத்த சோகையை அடியோடு விரட்டியடிக்கும் இக்கீரையை கர்ப்பிணிபெண்கள் உணவாக உட்கொள்வதன் மூலம் ரத்த அணுக்கள் அதிகரித்து ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும். குடல் புழுக்கள், வயிறு பிரச்சனைக்கு பேதி மருந்தாக தண்ணீர் கீரை பயன்படுகிறது.
-விடுதலை,28.9.15

திங்கள், 16 நவம்பர், 2015

சாத்துக்குடி - உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும்உடலுக்கு பலத்தையும், புத்துணர்வையும் கொடுக்க கூடியதும், பசியின்மை, குமட்டலுக்கு மருந்தாக விளங்க கூடிய சாத்துக்குடியை பற்றி இன்று நாம் பார்ப்போம். சாத்துக்குடியில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. குறைவான எரிசக்தி கொண்டதால், உடல் எடை கூடுவதை தடுக்கிறது. உடலுக்கு பலத்தை கொடுக்க கூடியது. சாத்துக்குடியில் மினரல், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.  பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரக கோளாறுக்கு மருந்தாகிறது சாத்துக்குடி. புத்துணர்வை தரக்கூடியது. ஈறுகளில் வீக்கம், பற்கள் ஆடுவது, வாய்ப்புண் வெடிப்புக்கு அருமையான மருந்து சாத்துக்குடி. சோர்வாக இருக்கும்போது சாத்துக்குடி சாறு குடிப்பது நல்லது. சாத்துக்குடியை பயன்படுத்தி பசியின்மை, வாந்தி, குமட்டலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு டம்ளர் நீரில் இஞ்சி துண்டுகளை தட்டி போடவும். அதனுடன் சாத்துக்குடி சுளைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி எடுத்து தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது வயிற்று புண்களை அகற்றும். செரிமானத்தை சீர்படுத்தும். பசியை தூண்டும். வாந்தியை தடுக்கும். ருசியின்மையை போக்கும். வயிற்று வலி குணமாகும்.மருத்துவமனைக்கு சென்று நோயாளியை பார்க்கும்போது சாத்துக்குடி வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது. காய்ச்சல், அம்மை, பேதி, சளி, இருமல் என எந்த நோயாக இருந்தாலும் நோயாளிக்கு நல்ல பலத்தை தரக்கூடியது சாத்துக்குடி. வைட்டமின் சி அதிகம் உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் தருவதுடன் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடனடி புத்துணர்வை கொடுக்க கூடியது சாத்துக்குடி.
சாத்துக்குடி சாறு பயன்படுத்தி பல் வலி, ஈறுகளில் ரத்த கசிவுக்கான மருந்து தயாரிக்கலாம். சாத்துக்குடி சாறில் நீர்விட்டு, அதனுடன் உப்பு சேர்த்து கலக்கவும். ஈறுகளில் வைக்கும்போது ரத்தகசிவு சரியாகும். சாற்றில் நீர்விட்டு வாய் கொப்பளிக்கலாம். இவ்வாறு செய்தால் வாயில் துர்நாற்றம் தரும் கிருமிகள் வெளியேறும். ஈறு வீக்கம் தணியும். பற்களுக்கு பலம் ஏற்படும்.  சாத்துக்குடி தோலை பயன்படுத்தி சளி, இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தண்ணீர் விடாமல் பொடித்த ஒரு ஸ்பூன் சாத்துக்குடி தோல் எடுத்துக் கொள்ளவும். அதில், 5 மிளகு தட்டி போடவும். கால் ஸ்பூன் சீரகம், இரு சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு 2 சிட்டிகை சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதால், சளி கரைந்து வெளியேறும். பித்தத்தை சமப்படுத்தும். இருமல் இல்லாமல் போகும். வயிற்றுகோளாறு சரியாகும். பசியை தூண்டும். வைரஸ் காய்ச்சலுக்கு இது நல்ல மருந்து.சாத்துக்குடி சாறுடன் தண்ணீர் சேர்த்து கூந்தலில் தேய்த்து குளிப்பதனால் தலைமுடிக்கு டானிக்காகிறது. தலையில் ஏற்படும் பொடுகை போக்கும். தலைமுடி உடையாமல் வளரும்.
சாத்துக்குடியை இரண்டாக வெட்டி தோலில் தடவுவதால், முகத்திலுள்ள கரும்புள்ளி சரியாகும். கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் மறையும். கழுத்து, கைகளில் உள்ள கருமை மாறும். நோயாளிக்கு ஊட்டசத்தாக விளங்கும் சாத்துக்குடி உற்சாகத்தை தரக்கூடியது. சாத்துக்குடி சாறு சாப்பிட்டுவர மூட்டுவாதம், எலும்பு பலவீனம் ஏற்படாது.
-விடுதலை,28.9.15

ஞாயிறு, 15 நவம்பர், 2015

வெள்ளைப் பூண்டு

வெள்ளைப் பூண்டு


  • பூண்டு செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளைப்பூண்டு. ஆலியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைப்  பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சட்டைவம். றீ வெள்ளைப் பூண்டில் மரபுரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்புப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 கிராமில் 5346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்புப்பொருட்கள் உள்ளன.  றீ தயோ சல்பினேட் எனும் உயிர்ப் பொருள் பூண்டு வகையில் உள்ளது. இது பிற உயிர்  மூலக்கூறுகளுடன் இணைந்து ஆலிசின் எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும். றீ கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உற்பத்தியை தடுக்கும் ஆற்றல் ஆலிசின் மூலக்கூறுகளுக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. றீ ரத்தத் தட்டுக்கள் உறைந்துவிடாமல் பாதுகாப்பதிலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் ஆலிசின் உதவுவதாக தெரியவந்துள்ளது.  ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும், உருவான ரத்தக்கட்டிகளை நீக்குவதிலும் பங்கெடுக்கிறது. இச்செயலால் கரோனரி தமனி பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதய பாதிப்புகள், முடக்குவாதம், பி.வி.டி. போன்ற வியாதிகள் ஏற்படுவது  தடுக்கப்படுகிறது..
  • இரப்பைப் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. றீ பாக்டீரியா, வைரஸ்  மற்றும் பூஞ்சை போன்ற நோய்த்தொற்று நுண்கிருமிகளை ஒடுக்கும் ஆற்றலுடைய நோய் எதிர்ப்புப்பொருட்கள் வெள்ளைப் பூண்டில் உள்ளது. ஆலிசின் சிறந்த நோய் எதிர்ப்புப் பொருளாகும். றீ பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற அத்தியாவசிய  தாது உப்புக்கள் உள்ளன. செலீனி யம் இதயத்திற்கு ஆரோக்கியம் வழங்கும் தாதுவாகும். நோய் எதிர் நொதிகள் செயல்படசிறந்த துணைக்  காரணியாகவும் இது செயல்படும். மாங்கனீசு, நொதிகளின் துணைக் காரணியாகவும், சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியில் இரும்புத் தாது  பங்கு பெறுகிறது.    _ -தில்லைச்சுடர் செப். 2013
-விடுதலை

கொழுப்பு குறைய பூண்டின் பங்கு

பூண்டில் பல சத்துப்பொருட்கள் இருந்தாலும், அலிஸின்(Allicin)என்று சொல்லக்கூடிய ஒரு முக்கியமான பொருள் இருக்கிறது. இது பாக்டீரியாக் கிருமி எதிர்ப்பு, வைரஸ் கிருமி எதிர்ப்பு. பூஞ்சை நோய்க் கிருமி எதிர்ப்பு சக்திகளைக் கொண்டதாகும்.
உடலிலுள்ள நச்சுப் பொருட்களை அழித்து வெளியேற்றும் சக்தியும் இந்த அலிஸினுக்கு உண்டு. பூண்டில் இயற்கையாகவே உள்ள அஜோன்(Ajoene) என்கிற ரசாயனப் பொருள், உடலில் ஏற்படும் சில தோல் நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது.

பூண்டிலுள்ள அலிஸின் பொருள், நம் உடலுக்கு பலவகைகளில் உதவி புரிகிறது. உடலில் ரத்த அழுத்தம் (High Blood Pressure) அதிகமாவதற்கு ஆஞ்சியோடென்சின்_-2 என்கிற புரதப்பொருள் ஒரு காரணம். பூண்டிலுள்ள அலிஸின் ரத்த அழுத்தத்தைக் கூட்டும் ஆஞ்சியோடென்சின்-_2 என்கிற பொருளை வேலை செய்ய விடாமல் தடுத்துவிடும். இதனால் ரத்த அழுத்தம் சீராகிவிடும். இதுபோக, பூண்டிலுள்ள பாலி சல்பைடு என்கிற திடப்பொருள் நமது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களால், ஹைட்ரஜன் சல்பைடு என்கிற காற்றுப் பொருளாக மாற்றப்படுகிறது. கேஸ் (Gas) வடிவில் இருக்கும் இந்த ஹைட்ரஜன் சல்பைடு ரத்தக்குழாய்கள் விரிவடைய உதவி செய்து, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பூண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்குழாய்களின் சுருங்கிவிரியும்தன்மை பாதிக்காது. இளம் வயதில் இருப்பதுபோல் அது முதுமையிலும் இருக்கும். பூண்டிலுள்ள கந்தகப்பொருள், ரத்தக்குழாய்கள் அடைபட்டுப்-போவதைத் தடுக்கிறது. அதோடு, ரத்தக்குழாய்கள் கடினமாவதையும் தடுக்கிறது. பூண்டிலுள்ள அஜோன் பொருள் ரத்தக் குழாய்களுக்குள் கொழுப்பு உருண்டைகள் உருவாவதைத் தடுக்கும். இதனால் ரத்தக் குழாய்களுக்குள் அடைப்பு ஏற்படாமல் ரத்த ஒட்டம் சீராக நடைபெறும். கொழுப்புசெல்கள் (Fat Cells) உடலில் உருவாவதையும், கொழுப்பு செல்கள் உடலின் எல்லா இடங்களிலும் படிவதையும், பூண்டிலுள்ள கந்தகப் பொருள் கட்டுப்படுத்தும்.
ரத்தத்தில் இரும்புச்சத்து குறைந்து விடுவதைத்தான் நாம் அனிமியா என்று சொல்கிறோம். பூண்டிலுள்ள டை அலைல் சல்பைடு (Di Allyl Sulphide) என்கிற கந்தகப் பொருள் ரத்தம் அதிகமாக இரும்புச்சத்தை உறிஞ்சவும், தேவையானபோது போதுமான அளவை வெளிவிடவும் மிகவும் உப யோகமாக இருக்கிறது. பூண்டிலுள்ள கந்தகப் பொருள், மார்பகப் புற்று நோயை உருவாக்கும் விஷப்பொருட்களை, உட லுக்குள் பரவவிடாமல் தடுக்கவும் செய்கிறது. பூண்டிலுள்ள அலிஸின், கெட்ட கொழுப்புப் பொருட்களை ரத்தத்தில் அதிகமாக சேரவிடாமல் தடுக்கும். பூண்டிற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருந்தாலும், பொதுமக்கள் பூண்டை அதிகமாக விரும்புவதற்கு முதற்காரணம் பூண்டு ரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைத்துவிடும் என்பது தான். இதற்காக பூண்டை சாப்பிட பலபேர் பலவிதமான யுத்திகளை கையாளு-கிறார்கள். ஒருவர் பூண்டுவை விறகு நெருப்பில் சுட்டு சாப்பிடுவார். இன்னொருவர் பாலில் போட்டு காய்ச்சி, வேகவைத்து சுவைப்பார். வெறும் தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுபவர்களும் உண்டு. பச்சையாகவே மென்று தின்று விட்டு ஊதித்தள்ளி விடுபவர்களும் இருக்கிறார்கள். சிலர் அம்மியில் வைத்து அரைத்து, உணவோடு சேர்த்து பிசைந்து சாப்பிட்டுவிடுவார்கள். எப்படியாவது பூண்டு சாப்பிடுங்கள். ஏன் என்றால் அது உடலுக்கு நிறையவே. நல்லது செய்கிறது.
பூண்டிலிருக்கும் கிருமிநாசினி (Antiseptic) குணத்திற்காக 1858-_ஆம் ஆண்டிலேயே பிரபல விஞ்ஞான மேதை லூயி பாஸ்டர், பூண்டை உபயோகப்படுத்தச் சொல்லி பொது மக்களிடம் பிரபலப்படுத்தினார். சமைத்த வேகவைத்த சுட்ட பூண்டுவை நிறைய சாப்பிடுவதைவிட, பச்சையாக ஒன்றிரண்டு பூண்டு பற்களை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும். பூண்டில் உடலுக்குத் தேவையான 17 அமினோ அமிலங்கள் இருக்கின்றன உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்திலுள்ள பிரமிடுகளைக் கட்டும்போது, அந்த கட்டுமானத் தொழிலாளர்களின் உடலுக்கு தெம்பும், உற்சாகமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடைய அன்றாட உணவில் பூண்டு அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. வாயுத்தொல்லை தீர, கிருமிகளை விரட்ட, கெட்ட கொழுப்பைக் குறைக்க, ரத்தக்குழாய்களில் கொழுப்புதிட்டுத் திட்டாக படியாமல் இருக்க, ஜலதோஷத்தை விரட்ட புற்றுநோயின் வீரியத்தைக் குறைக்க, இருதயநோய் வராமலிருக்க, பல் வலியிலிருந்து , ஈ, எறும்பு, கொசு, மூட்டைப்பூச்சி முதலியவைகளை ஓட ஓட விரட்ட, பூண்டு ஒரு அற்புதமான உணவும், மருந்தும் ஆகும்.
-உண்மை,16-31.10.15

மங்குஸ்தான் பழம்


*உலகின் கிழக்கத்திய நாடுகளில் வெப்ப மண்டல பகுதியில் மட்டும் விளையும் சிறப்புக்குரிய கனி. 20 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரக் கூடியது மங்குஸ்தான் மரம். 'குளுசியாசியே' தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா.
* வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் அதிகமாக வளரும். இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் மிகுதியாக வளர்கிறது. இந்தியா மற்றும் இலங்கையிலும் விளைவிக்கப்படுகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரை மங்குஸ்தான் பழங்களின் 'சீசன்' ஆகும். மங்குஸ்தானில் பல வகைகள் உள்ளன.
* மங்குஸ்தான் பழம், குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் சதைப்பற்றில் 63 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
* எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது. 100 கிராம் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.
* எடை கூட விரும்புபவர்கள் மங்குஸ்தான் பழங்களை சாப்பிடலாம்.
* 'வைட்டமின் சி' நிறைந்தது மங்குஸ்தான். 100 கிராம் பழத்தில் 12 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் 'வைட்டமின் சி' உள்ளது. நீரில் கரை யத்தக்க சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் 'வைட்டமின் சி'.
* அதிக அளவு 'வைட்டமின் சி' சத்துள்ள உணவுப் பொருட்களை உடலில் சேர்ப்பது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடலுக்கு தீங்கு தரும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை விரட்டும் தன்மையும் 'வைட்டமின் சி'க்கு உண்டு.
* பி-குழும வைட்டமின்களான தயாமின், நியாசின், போலேட் போன்றவையும் கணிசமான அளவில், மங்குஸ்தானில் காணப்படுகிறது. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றப் பணிகளில் இந்த வைட்டமின்கள் துணைக்காரணியாக உதவுகின்றன.
* அதிக அளவில் தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் இதில் உள்ளன.
* உடற் செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் பொட்டாசியம் தாது அவசியமானது. பக்கவாதம் மற்றும் இதயவியா திகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.
-விடுதலை,19.10.13

வெள்ளி, 13 நவம்பர், 2015

வெங்காயத்தின் பயன்களும் - நன்மைகளும்!

வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.
உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள் தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
பண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங் காயத்தின்மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளு மாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத் தரப்பட்டிருந்தது.
பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்
வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிக மாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் இந்தச் சத்து அதிகமாக உண்டு. பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக் களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங் காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றிய வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.
உடல் பருமனைக் குறைக்க
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அழகாக மாற
இரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங் காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் பளபளப்பு ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் செரிமானமாக வெங்காயம் உதவுகிறது.
உடல் வெப்பம் அகல...
பல்வேறு காரணங்களால் உடல் சூடு அதிகரிக் கும்போது வெங்காயம் உடல் சூட்டைச் சமனப்படுத்து கிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.
சாதாரண தலைவலிக்கு
சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.
விஷக் கடிக்கு
வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விஷ பூச்சிகள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.
இருமலுக்கு
பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பரு வத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்கா யத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.
மூளையின் சக்தி பெருகும்
மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்கா யத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் ஊக்கப் பொருளாகவும் திகழ்கிறது.
ஆகவே, தினமும் வெங்காயத்தை சூப்பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காயச் சாறு சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
பல்வலி, ஈறு வலி
பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.
பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.
-விடுதலை,19.10.15

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

உடல் நலன் காக்கும் வெண்ணெய்!


பொதுவாகத் தங்கள் உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் அதிகமாக வெண்ணெய் சேர்த்துக்கொள்ளாமல் தவிர்ப்பார்கள். ஆனால் வெண்ணெயிலும் சத்துகள் அடங்கியுள்ளன. மலைப் பகுதி மக்களுக்குக் அதிகமாகக் கடல் உணவுகள் கிடைப்பதில்லை.  அதனால் ஏற்படும் அயோ டின் இழப்பை வெண்ணெய் ஈடுகட்டுகிறது. வெண்ணெய்யில் உள்ள `ஆன்டி ஆக்சிடன்ட் கள்' ரத்த நாளங்களைப் பலப்படுத்துகின்றன. கால்சியத்தை அதிகளவில் கொண்டுள்ள வெண்ணெய், பற்சிதைவைத் தடுக்கிறது. வெண்ணெய்யில் உள்ள பூரிதக் கொழுப்பு, புற்று நோயைத் தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. தேவையான தாது உப்புகளை உடம்பு கிரகித்துக்கொள்ள வெண்ணெய் உதவுகிறது. வெண்ணையில் உள்ள `கொலஸ்ட்ரால்', மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மை பயக்கிறது. இதில் உள்ள `வைட்டமின் ஏ', கண்கள் மற்றும் தோலின் நலத்தை காக்கிறது.
=விடுதலை,3.1.11

புதினா - பயன் தரும் புதினா

கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போல   புதினாவும் உணவுக்கு   சுவையும்  மணமும் பயன்படுத்தப்படுகிறது. புதினா பசியைத் தூண்டும் சக்தி கொண்டது.
பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகள் தீர புதினா   மிகவும்  உதவுகிறது.  ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக் களை அழிக்கவும்  வாய்வுத் தொல்லையை போக்கவும்  புதினா  உதவுகிறது    புதினாவில்   உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில்   இதில் இருக்கின்றன.
புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். ஆஸ்துமாவை புதினா கட்டுப்படுத்து கின்றது.  வறட்டு இருமல்,  ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப் படுத்துகிறது.   புதினாவை  தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும்.சீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும்.வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் புதினாவை  துவையல்  செய்து   சோற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
-விடுதலை,27.12.10

புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும்.மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றனர். இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் இதை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வீர்கள்.
வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும். உடல் தொப்பை, பருமன் குறைகிறது. அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். காலரா அண்டாது. சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறு கின்றனர். தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறும். மலக்கட்டு விலகி ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மருந்துச்சாறு.
மருத்துவக் குணங்கள்: கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.  இன்றும்கூட இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்.  வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவைகளை உணரமுடியாத நாக்கு, பித்தம், ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும். வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போது பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும். வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறுள்ளவர்கள் புதினாத் துவையல், புதினா சட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.
-விடுதலை,1.6.15

இளநீர் - நலம் தரும் இளநீர்


காலையில் இளநீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது .இது உடலுக்கு ஊக்கமும் சத்தும் தரும் ஆரோக்கியமான மருந்து.தோல் பளபளப்பாக சிவப்பாக மாற தினமும் இளநீர் குடிக்க வேண்டும் .இது இரத்தம் சுத்தம் அடையவும்
கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.  இத்துடன் தோல்,முடி,நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன. இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும். குழந்தைகள் இதை அருந்தினால் ஓரளவு சதைப்பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள். இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது உணவு எடுத்த பின்னரே குடிக்க வேண்டும். சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. மந்தம், உணவு செரியாமை போன்றவற்றிக்கு இது மருந்து மற்றும் சிறந்த உணவும் ஆகும். காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும். பித்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து நிறைந்த மருந்து ஆகும்.  இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்க இளநீர் மிகவும் உதவுகிறது. . மஞ்சள் நிற சிறுநீரை மாற்ற இளநீரை தவறாமல் குடிக்க வேண்டும் அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யவும் இது உதவுகிறது. இது சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். மற்றும் குணப்படுத்தும். செரிமானக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காலரா நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது. காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் குடிக்கலாம். தாகத்தைத் தீர்க்க உடலில் சக்தியைப் புதுப்பிக்க தினமும் ஓர் இளநீர் குடிக்கலாம் உங்கள் வாழ்நாள் முழுக்க அழகான தோற்றத்துடன், நலனை நீடிக்கும் சக்தியாக இளநீர் உள்ளது.
-விடுதலை,27.12.10

வசம்பு - விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.
அகோரஸ் காலமஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக்  என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
யசுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
யவசம்பை தூள் செய்து இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
யஇதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று தேக்கரண்டி கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
யகால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
யபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.
-விடுதலை,27.12.10

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

நுரையீரலுக்கு முள்ளங்கி..

நுரையீரலுக்கு முள்ளங்கி...
உயிர் வாழ ஆதாரமான ஆக்ஸிஜனைத் தந்து, உடலில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் உயிர்த் தொழிற்சாலை நுரையீரல். ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை இந்த சுவாசித்தல் பணி நடந்து கொண்டே இருக்கிறது.
தூசு நிறைந்த காற்றைச் சுவாசிக்கும் போது, நம்முடைய நுரையீரலில் உள்ள மெல்லிய முடி போன்ற அமைப்பு, தூசுகளை வடிகட்டி நுரையீரலுக்கு அனுப்புகிறது. ரோமம் போன்ற நுண்ணிழைகளால் ஆன இதற்கு, சில்லியா() என்று பெயர். புகைப்பழக்கம், புகையிலையைச் சுவைப்பது போன்ற காரணங்களால்,சில்லியாஉதிர்ந்து அதன் எண்ணிக்கை குறையும்.
இதனால், நுரையீரலில் நஞ்சு சேர்ந்து கொண்டே போகும். புகையிலையால் உண்டாகும் நஞ்சை, சில்லியாவால் சுத்தம் செய்ய முடியாமல் போக, நுரையீரல் பாதிக்கத் தொடங்கும். ஒரு நாளைக்கு அய்ந்து பாக்கெட் சிகரெட் வீதம் , ஒருவர் தொடர்ந்து ஐந்து வருடங்கள் பிடித்தால், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் வர 50 சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு.
அவர் , உடனடியாக சிகரெட்டை நிறுத்தினால் சில்லியாவின் எண்ணிக்கைகள் அதிகரித்து , நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும். மேலும், பாதிக்கப்பட்ட நுரையீரலைச் சில எளிய உணவு, மூலிகைகள் மூலம் சரிப்படுத்த முடியும்.
அகத்திக்கீரையின் பூவும் முள்ளங்கியும் நுரையீரலுக்கான சிறந்த உணவு. அகத்திப்பூ, உடலில் இருக்கும் நிக்கோட்டினின் அளவைக் குறைக்க உதவும். உடலில் உள்ள நஞ்சை வெளியேற்றிவிடும். மேலும், கண் சிவந்து போதல், கண்களில் நீர் வழிதல், அலர்ஜி காரணமாகக் கண்களில் பிரச்சினை, சூரிய வெப்பம், தூசு, புகையால் ஏற்படும் கண் எரிச்சல்,
கண் அழுத்தம்,கண் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கு அகத்திப்பூ கலந்த நீரால் கண்களைக் கழுவினால், மேற் சொன்ன பிரச்சினைகள் அனைத்தும் குணமாகும். முள்ளங்கியில் உள்ள ராபனைன் என்ற ரசாயனம் புற்றுநோயை நீக்கக் கூடியது. ராபனைனை எலிக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்ததில், எலியின் நுரையீரலில் உள்ள கட்டிகளின் வளர்ச்சி வெகுவாகக் குறைந்தன.
எம்பிசெமா என்ற நுரையீரல் பாதிப்புப் பிரச்னையும் முள்ளங்கி சாற்றால் குணமாகிறது. நிமோனியா, புகையிலை யால் வந்த புற்றுநோய் போன்றவைக்கு, இந்தச் சாறு அருமருந்து. தொடர்ந்து குடித்து வந்தால் மூச்சுக்குழாய் சுருக்கநோய் குணமாகத் தொடங்கும்.
நுரையீரல் பலப்படும். நுரையீரல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளின் வீரியமும் வெகுவாகக் குறையும். இதனுடன், பத்மாசனம், சித்தாசனம், பிராணயாமம் போன்றவற்றை செய்து வந்தால், இயற்கையாகவே நுரையீரல் பலப்படும். பாதிக்கப்பட்ட நுரையீரல் கூட புத்துயிர் பெறும்.
கொழுப்பை கரைக்கும்...
முள்ளங்கி சிறுநீர்ப் பெருக்கியாகச் செயல்படுகிறது. கழிவுகளை வெளியேற்றக் கூடியது. சிறுநீரகக் கற்களை கரைய வைக்கும். கல் அடைப்பு, கால்வலி, அதி காலை முக வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்குச் சிறந்த மருந்து.
மாத்திரைகளை விட 100 மடங்கு குணமாக்கும் திறன் முள்ளங்கிச் சாறுக்கு உண்டு. உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு முள்ளங்கி சாறு சிறந்த வாய்ப்பு. உடலில் அடி வயிறு, கை, கால் போன்ற இடங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கும். கெட்ட கொழுப்பை முற்றிலுமாக நீக்கி, மீண்டும் கொழுப்புப் படியாமல் தடுக்கும்.
-viduthalai,20.7.15

வாழையடி வாழையாய் தொடரும் வாழையின் பயன்கள்


வாழைக்கும் தமிழர்களுக்குமான உறவு, வாழையடி வாழையாகத் தொடந்துக்கொண்டே இருக்கிறது.. இலை, தண்டு, பூ, காய்,  பழம் என ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவப் பலன்களைப் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தாவரம் வாழை. இவை  ஒவ்வொன்றின் சத்துக்கள் பற்றியும் யார் யார் சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் சென்னை சித்த மருத்துவர் பத்மபிரியா  விளக்குகிறார்.
வாழைப்பூ
வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில்  ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம். வாரம் இரு முறையாவது வாழைப்பூவை அனைவரும் கட்டாயம் சாப்பிட  வேண்டும்.  ஆனால் செரிமானக் கோளாறு இருக்கும் போது, வாழைப்பூ உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
வாழைக்காய்: உடல் எடையை அதிகரிக்க நினைப் பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து அதிகம்  இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைக்காயை மசித்து  சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம்.
வாழைக்காய் வறுவல், வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மிகக்  குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.  இல்லையெனில் வயிறு மந்தமாகிவிடும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள், மூட்டு வலி  இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.
வாழைப்பழம்: அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து  போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான  குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது.
குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப்  பயன்படுகிறது. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு வாழைப்பழம், இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு  வாழைப்பழம் சாப்பிட வேண்டும். சிலர் வாழைப் பழத்தை பால், தயிருடன் சேர்த்து மில்க்ஷேக் ஆக குடிக்கிறார்கள். இது தவறு.  வாழைப்பழத்தை எந்தப் பொருளுடனும் கலந்து உண்ணக் கூடாது.
ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோயாளிகள் தவிர  அனைவருமே வாழைப்பழத்தை தினமும் உண்ணலாம். வாழைத்தண்டு: உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. சிறுநீரகத்தில் கற்கள்  வராமல் தடுக்கவும், அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது.
வாரத்துக்கு நான்கு முறையாவது  வாழைத்தண்டைக் கட்டாயம் சாறாகவோ, பொரியலாகவோ அல்லது அவியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக்  கொள்ளவேண்டும். வாழைத் தண்டு சூப்பை கடைகளில் வாங்கிக் குடிப்பதை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டு மிளகு  அல்லது சீரகத்தூள் சேர்த்து, வீட்டிலேயே வாழைத்தண்டு சூப் வைத்து அருந்தலாம்.
உடல் மெலிய விரும்புபவர்கள் நார்ச்சத்து  மிக்க வாழைத் தண்டைச் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பு சேர்க்காமல் வாழைத் தண்டை உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழை இலை: வாழை இலை பச்சையம் நிறைந்தது. இரும்பு,  மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதனால் வாழை இலையில் உணவை  வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம். வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும் போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன.
மேலும், இதில் பாலிபீனால் இருப்பதால்  நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது. எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து, தினமும் வாழை  இலையில் உண்ணுவது சிறந்தது.

இரத்த விருத்தி தரும் கனி

அக்கால கட்டங்களில் நமது ஊரில் திருவிழா கடைகளில் மட்டுமே பேரிச்சம்பழம் எனும் ரத்த விருத்தி ஏற்படுத்தும் கனியை விதவிதமான அலங்கார குவியலுடன் காண இயலும். குறிப்பிட்ட பெரிய பல சரக்கு கடைகளில் கண்ணாடி பொருத்தப்பட்ட டின்களில் நம் கண்ணில் படும் படியாக விற்பனைக்கு வைத்திருப்பதையும் கண்டு வாங்கி சுவைத்து மகிழ்ந்துள்ளோம்.
இன்றோ அனைத்து விற்பனை கூடங் களிலும் நமக்கு கிட்டுகிறது இந்த ரத்த சுத்திகரிப்பை அதி கரிக்கும் பேரிச்சம்பழம். இந்த பழத்திற்கு ரத்த வளத்தை மேம்படுத்தும் இயல்பு கூட உண்டு. வைட்டமின் சத்து ஏ மிகுந்து காணப்படும பேரிச்சம்பழத்தில் பி வைட்டமின், பி2, பி5, இ வைட்டமின், இரும்புசத்தும் விகிதாசாரத்தில் உண்டு. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட ஒரு நாளைக்கு இரண்டு.
மூன்று பேரிச்சம்பழத்தை பாலுடன் கலந்து அருந்தலாம் என மருத்துவம் கூறுகிறது. தசை வளர்ச்சி, உடல் வலிமை தரும் பேரிச்சம்பழம் நம் நாட்டில் அதிகமாக விளைவதில்லை. ஆப்பிரிக்கா, எகிப்து மற்றும் வளைகுடா நாடுகளிலேயே அதிகம் விளைகின்றது. பேரிச்சம்பழம் இயற்கை நிலையில் பதப்படுத்தப்பட்டே கனிகளாக விற்பனைக்கு வருகிறது.
இச்சுவை மிக்க இனிப்புக் கொண்ட பழத்தினால் லட்டு, அல்வா, பாயாசம் என விதவிதமானவற்றை நாம் தயாரிக்க பழகி வருகிறோம். காசநோயாளிகளுக்கு தரப்பட்டு வரும் சத்தான உணவு வகையில் இப்பழத்திற்கு பெரும் பங்கு உண்டு. இப்பழத்தை தினமும் 2 எண்ணிக்கையில் உண்டு, பசும்பாலும் பருகி வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தால் உடல் நல்ல வளம், வலிமை உள்ளதாக திகழும்.
-viduthalai,20.7.15

அகத்திக் கீரை - ஆரோக்கியம் தரும் அகத்திக் கீரை


அகத்திக் கீரையின் தாயகம் மலேசியா. அகத்தில் உள்ள தீயைப் போக்குவதால் அகத்திக் கீரை என்று அழைக்கப் படுகிறது என்கிறது சித்த மருத்துவ நூல்கள். அகத்திக் கீரை மக்கள் உணவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
அகத்திக் கீரை மனிதர்களுக்கு மட்டுமல்ல. மாடுகளுக்கும், மண்ணுக்கும்கூட நன்மையைச் செய்கிறது. அகத்திக் கீரைச் செடிக்கு, காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து, மண்ணுக்கு கொடுக்கும் தன்மை உண்டு. இதனால், யூரியா... போன்ற தழைச்சத்து ரசாயன உரத்தை விலைக் கொடுத்து வாங்கும் வேலை மிச்சம். மாடுகளுக்கு அகத்திக் கீரையை கொடுத்து வந்தால், அந்த மாடும் ஆரோக்கியமாக இருக்கும்.
அது கறக்கும் பாலிலும் கூட அகத்திக் கீரையின் மருத்துவ தன்மை கலந்திருக்கும். இதனால்தான், ஆயுர்வேத மருந்துகளுக்கு, அகத்திக் கீரை கொடுத்து வளர்க்கப்படும் மாட்டின் பாலை பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அகத்திக் கீரை தனிப்பயிராக சாகுபடி செய்யப்படுவதில்லை.
வரப்பு ஓரங்களிலும், வெற்றிலை, மிளகாய்த் தோட்டங்களிலும் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகின்றன. உணவைப் பொருத்தவரை பத்தியம் இருப்பவர்கள் உண்ணக்கூடாத கீரை என்று அகத்திக் கீரையை பாரம்பர்ய மருத்துவம் எச்சரிக்கை செய்கிறது. அதாவது, அகத்திக் கீரையில் இருக்கும் அதீதமான சத்துக்கள், நாம் ஏற்கனவே சாப்பிட்ட மருந்தின் வீரியத்தைக் குறைத்துவிடும்.
இதனால் தான், சித்த, ஆயுர்வேத மருந்துகளை உண்ணும்போது, அகத்திக் கீரை சாப்பிடக் கூடாது என்று கட்டுப்பாடு போட்டுள்ளார்கள். இந்தக் கீரையில் 63 சத்துக்கள் உள்ளன. சுண்ணாம்புச் சத்தை அதிகமாக கொண்டது. கண்பார்வை, நினைவாற்றலுக்கு அகத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அகத்திக் கீரை கொஞ்சம் கசப்பாக இருக்கும். இதுதான், இதன் சிறப்புத் தன்மை. ஒரு வேளை கசப்புச் சுவை வேண்டாம் என்றால், புழுங்கலரிசியை வறுத்து பொடிசெய்து கலந்தால் கீரையின் கசப்புத் தன்மை விலகும்.
கீரை, பூ, பிஞ்சு ஆகியவை விரும்பி உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவத்திற்கு பயன்படுகின்றன. அகத்தி மர இலை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படுகின்றன. வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.
அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் போன்றவை நீங்கும். சிகரெட் மற்றும் புகையிலை உபயோகிப்போர் நிகோடின் நச்சுவால் பாதிக்கப்பட்டால், அதை அகத்திக் கீரை நிவர்த்தி செய்யும். மாதத்துக்கு இருமுறை மட்டுமே உண்ண வேண்டும்
-viduthalai,20.7.15.