வெள்ளி, 28 செப்டம்பர், 2018

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் திராட்சை



திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.  நோயாளிகளுக்கு ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக திராட்சை அருமையான உணவு.

திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளி வடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும்.

உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாறு சாப்பிடுவது நல்லது. திராட்சைச் சாறு மட்டும் சாப்பிட்டுவர பல வியாதிகளைக் குணப்படுத்தும்.

இயற்கைச் சாறுகளில் திராட்சைச்சாறு மிகவும் அவசிய மானது.

* இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, அய்ந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.

* ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.

* திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக் களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி திராட்சை சாறு குடிப்பது நல்லது!

* ஒரு கிளாஸ் திராட்சை சாறில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை “டயட்”டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக் கலாம்.

* “ரெஸ்வெரட்ரால்” எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் திராட்சை சாறில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்து

கிறது.

* பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை திராட்சை சாறு  கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க் கான அபாயம் குறைக்கப்படுகிறது.

ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமாக இருக்கலாம்.

- விடுதலை நாளேடு, 24.9.18

ஆரஞ்சுப் பழத்தின் மருத்துவக் குணங்கள்



பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக் களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், அய்ஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிக மாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்து கிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இரு முறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சி யும் உடல் திசுக்களை புதுப் பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உட லுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக் காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம்.

கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. சளி உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் சளி பிடிப்பது குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண் ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக் களும் உள்ளடங்கியுள்ளது.என்றும் இளமை யுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

- விடுதலை நாளேடு, 24.9.18

புத்திக் கூர்மையை அதிகரிக்கும் வெண்டைக்காய்



வெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ் பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய் கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவித மான தாவர பசைப் பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக் காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப் பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக் காயில் உள்ளன.

வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ்.  வெண்டைக்காய் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

வெண்டையின் சிறப்பான குணமே வழவழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் வழவழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும் போது இந்த அமிலங் கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங் கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி சுத்தமான பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பி யவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரால் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய் நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப் பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தி னால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச் சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

நன்மை தரும் பாக்டீரியா

இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப் படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.

இது குழந்தைகளின் நினைவாற்றலை அதி கரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- விடுதலை நாளேடு, 24.9.18

புதன், 12 செப்டம்பர், 2018

உடலுக்கு நன்மை பயக்கும் சாத்துக்குடி



மனித உடலுக்கு நேரடியாக சத்துகளை கொடுப் பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமா வதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது


தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த காலங்களில் அதிகம் விளையும் பழங் உடலை களைச் சாப்பிட்டால் நல்லது. பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி


நோயின்றி காக்கின்றன.


மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகை யைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.


நோயுற்றவர்களுக்கு


நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.


ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர் களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.


இரத்த விருத்திக்கு


சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.


இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தி யாகும். உடல் அசதி நீங்கும்.


இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோ பின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகை யால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.


எலும்புகள் வலுவடைய


சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.


மலச்சிக்கல் தீர


மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம்.  எனவே மலச்சிக்கல் ஏற்ப டாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச் சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.


நன்கு பசியைத் தூண்ட


பசியில்லாமல் சிலர் அவதியுறு வார்கள். இவர் களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.


குழந்தைகளுக்கு


ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.


பெண்களுக்கு


நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும் புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.


முதியோருக்கு


வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.


- விடுதலை நாளேடு, 10.9.18

சீரகம் மற்றும் கருஞ்சிரகத்தின் மருத்துவ குணங்கள்!

சீரகம்: சீரகம் பொதுவாக உடலுக்கு நல்லது என்று பலருக்கும் தெரியும். அதனை எந்த விஷயத்திற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றுதான் தெரிவதில்லை. வாந்தி எடுத்தவர்களுக்கு, வெறும் கடாயில் சீரகத்தைப் போட்டு வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து  கொடுக்க வாந்தி நிற்கும். சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.


கருஞ்சீரகம்: கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரககல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

- விடுதலை நாளேடு, 10.9.18

ரத்த சோகை குணமாக்கும் உலர் திராட்சை

கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீ சியமும் காணப்படுவதால் அமிலத் தொந் தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதி கரிக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.

இதில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சியபின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் உடல் வலு உண்டாகும். குழந்தை திட காத்திரமாக வளரும்.

தொண்டைக்கட்டு பிரச்சினை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டுக் காய்ச்சி 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் நிவாரணம் பெறலாம்.

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உண வுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

- விடுதலை நாளேடு, 10.9.18

சத்துகள் நிறைந்த பேரிச்சம் பழம்



பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது.

பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.

தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவ தோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.

உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங் களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஒரு அவுன்ஸ் பேரிச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளது. மேலும் பி1 வைட்ட மின் 26 மில்லி கிராமும், பி2 வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது.

இரும்புச் சத்து 30 மில்லி கிராமும், சுண்ணாம்புச் சத்து 20 மில்லி கிராமும் உள்ளது.

பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கால்சியம் குறைபாட்டை தவிர்க்க முடியும்.

மேலும், மாதவிடாய் காலங்களில் பெண் களுக்கு ஏற்படும் சோர்வையும் பேரிச்சம் பழம் உட்கொள்வதால் போக்க முடியும்.

இளம் பெண்கள் பெரும்பாலானவர் களுக்கு இரத்த சோகை உள்ளது. இதனால் குழந்தைப் பேறு காலகட்டத்தில் பாதிப்பு ஏற்படு கிறது. இதனைத் தவிர்க்க பேரிச்சம் பழத்தை உட்கொள்ளுங்கள் இரத்த சோகை யைப் போக்கிக் கொள்ளுங்கள்.

வளரும் குழந்தைகளுக்கு பேரிச்சம் பழம் கொடுத்து வந்தால் அது அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் என்பதில் அய்யமில்லை.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 10.9.18

திங்கள், 3 செப்டம்பர், 2018

எண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ!



வாழைப்பூவில் துவர்ப்பு சுவை கொண்ட வாழைப்பூ பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கிறது. சுவைக்கும், ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து உண்கிறோம். வாழைப்பூ குருத்தினை பச்சையாகவே சாப்பிடுகிறவர்களும் உண்டு என்கிறார் சித்த மருத்துவர் பானுமதி.

இன்றைய நவநாகரிக வாழ்க்கையில் மனிதனை வாட்டும் பல நோய்களுள் சர்க்கரை நோய் முக்கிய மானது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் தூண்டப் பெற்று சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதன் துவர்ப்பு சுவையானது, ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்றுகிறது. இதனால் சர்க்கரையின் அளவு குறைகிறது.

சிலருக்கு மலம் கழிக்கும்போது கூடவே ரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை ரத்த மூலம் என்று அழைப்பர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் ரத்த மூலம் விரைவில் குண மாகும்.

வாழைப்பூவில்  கொழுப்புச்சத்து இருப்பதால், அது ரத்தக் குழாய்களில்  கொழுப்பினால் வரக்கூடிய இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. மூளை மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதில் வாழைப் பூவானது பெரும் பங்கு வகிக்கிறது. இதில் நார்ச்சத்து மிக அதி களவில் காணப்படுவதால் மலச் சிக்கல் உண்டாகாமல் பார்த்துக் கொள்கிறது. வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும்.

-  விடுதலை நாளேடு, 3.9.18