Glyconutrient என்னும் மருத்துவ வேதிப்பொருள் கொத்தவரையில் மிகுதியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இந்த கிளைகோ நியூட்ரியன்ட் பெரிதும் உதவுகிறது. கொத்த வரையின் இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க வல்லவை.
கொத்தவரையின் செடி வலி நிவாரணியாகவும், கிருமி நாசினியாகவும், ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டுவலிக் குறைப்பானாகவும், கட்டிகளைக் கரைப் பானாகவும், புண்கள் ஆற்றியாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் ஆன தன்மைகளைப் பெற்றுள்ளன. சுண்ணாம்புச் சத்து மிகுதியாக இருப்பதால் எலும்புகள் நன்கு பலப்படும். இதனால் எலும்புகளின் தேய்மானம், மூட்டுவலி ஆகிய பிரச்சினைகளுக்கு கொத்தவரை சிறந்த தீர்வாகிறது என்று சொல்லலாம்.
கொத்தவரை இதய ஆரோக் கியத்துக்கும் இன்றியமையாத உணவாக விளங்குகிறது. ரத்த நாளங்களில் படிந்து ரத்த ஓட்டத் துக்குத் தடையாக இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது. கொத்த வரையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட்ஸ் ஆகியவை இதயத்துக்கு வரக்கூடிய பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க வல்லவை.
கொத்த வரையில் உள்ள சத்துகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லவை ஆகும். சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்து களைக் குணப்படுத்தும் தன்மையை கொத்தவரை உள்ளடக் கியுள்ளதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயலுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொத்தவரை ஓர் உன்னத உணவும் மருந்தும் ஆகும். கருவைச் சுமக்கும் தாய்மார்களுக்குத் தேவையான இரும்புச்சத்தும் சுண்ணாம்புச்சத்தும் கொத்த வரையில் மிகுதியாக உள்ளன. மேலும் அதிக அளவிலான ஃபோலிக் அமிலத்தையும் கொத்தவரை பெற்றுள்ளது. குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்துகள் தேவைப்படுகின்றன.
மேலும் கொத்தவரையில் உள்ள வைட்டமின் கே சத்தும் குழந்தையின் வளர்ச்சிக்கும் அதன் எலும்புகளின் வலிமைக்கும் மிக்க துணையாக விளங் குகிறது. கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெற உதவுகிறது. கொத்த வரையில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோ குளோபின் உற்பத்தியாகப் பயன்படுகிறது. கொத்தவரை செரிமானத்துக்கு மிகவும் உதவியாக விளங்குகிறது.
இதில் இருக்கும் வேதிப்பொருள் ஜீரணப் பாதையின் செயல் பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் இரைப்பையில் தங்கிப் புற்றுநோய் வருவதற்குக் காரணமாக இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. மூளையில் ஏற்படும் அழற்சியைத் தவிர்க்க கொத்தவரை மருத்துவ உணவாகிப் பயன்தருகிறது. ரத்தத்தில் கலந்து துன்பம் செய்யும் சர்க் கரையின் அளவைக் குறைக்கும் தன்மை கொத்தவரைக்கு இருப்பதால் மத்திய நரம்பு மண்டலத்துக்கு புத்துயிர் தரு வதாக விளங்குகிறது. மேலும் இச்சத்துகள் மனஉளைச்சல் மற்றும் இதய படபடப்பு ஆகியவற்றைப் போக்க உதவி செய்து மனிதனுக்கு அமைதி தரவல்லதாகவும் விளங்குகிறது.
கொத்தவரை மருந்தாகும் விதம்: கொத்தவரையின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து சுடு நீராக்கிக் குடிப்பதால் ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய் தணிகிறது. கொத்தவரை இலைகள் கைப்பிடி எடுத்து அதனுடன் சிறிது கறிவேப் பிலை, மஞ்சள் கரிசலாங் கண்ணி ஆகிய இலைகளைச் சேர்த்து நீராக்கிக் குடிப்பதால் இரவு நேரப் பார்வைக் குறைபாடு விரைவில் நீக்கப் பெறுகிறது. கொத்தவரை விதைகளைச் சேகரித்து சுமார் 10 கிராம் அளவு எடுத்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் குடிப்பதால் உடலில் ஏற்பட்ட வீக்கங்கள், வலிகள் விரைவில் குறைந்து நிம்மதி ஏற்படுகிறது.
கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெறுகிறது. இதய அடைப்பு தடைபடுகிறது. சர்க்கரை நோயை தணிக்கிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. உணவுப்பாதை மற்றும் ஆசனவாய்ப் புற்றுநோயையும் தவிர்க்கும் வல்லமை கொத்தவரங்காய்க்கு உண்டு. பலன் தெரியாமலேயே பயன்படுத்தி வந்த கொத்த வரையை, இனி பரிபூரணமாக உணர்ந்து பயன்படுத்துவோம்.
உடல் பருமன் புற்று நோய்களை உருவாக்கும்
உடல் பருமன் காரணமாக வயிறு, கல்லீரல், கருப்பை உள்ளிட்ட 8 விதமான புற்று நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல்பருமன் மற்றும் அதிக உடல் எடை மனிதர்களுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. அளவுக்கு அதிகமாக நொறுக்குத் தீனி, மற்றும் எண்ணெய் கலந்த கொழுப்பு சத்து மிகுந்த உணவு வகைகள், துரித உணவுகள் உள்ளிட்டவற்றை சாப்பிடுதல், உடற்பயிற்சி இன்மை போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படுகிறது.
தற்போது உலகம் முழுவதும் 64 கோடி பெரியவர்களும், 11 கோடி குழந்தைகளும் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அதுவே பல விதமான நோய்களுக்கு காரணியாக திகழ்கிறது. குறிப்பாக வயிறு, கல்லீரல், பித்தப்பை, கணையம்,கர்ப்பபை, மூளை, தைராய்டு மற்றும் ரத்த புற்று நோய் உள்ளிட்ட 8 விதமான புற்று நோய்கள் உருவாக காரணம் என தெரிய வந்துள்ளது. இது குறித்த ஆய்வை உலகசுகாதார மய்யத்தின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையைச் சேர்ந்த கிரகாம் கோல்டிஷ் நடத்தினார்.
உடல் பருமன் மற்றும் அதிக எடையுள்ள 1000 பேரிடம் இந்த ஆராய்ச்சி மேற் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்கண்ட 8 விதமான புற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. எனவே, உடலை பருமன் ஆகாமல் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-விடுதலை,29.8.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக