திங்கள், 10 நவம்பர், 2014

நோயற்ற நல வாழ்வு பெற...



நோயற்ற நல வாழ்வு பெற...

நமது தினசரி உணவு பழக்கத்தில் சில பழங்கள் மற்றும் பொருட்களை சேர்ப்பதன் மூலம் நோயற்ற ஆரோக்கிய வாழ்வை பெறலாம்.
கல்லீரல் பலப்பட ...
தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து மிக்கது.
ரத்த அழுத்தம் சரியாக....
தேநீர், காபிக்கு பதிலாக ஒரு குவளை மோரில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராகும்.
இதயத்திற்கு பலம் கிடைக்க:
மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடையும். செரிமான சக்தி அதிகரிக்கும். அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட மாதவிடாய் பிரச்சினை வயிற்று வலிகுறையும்.
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட பித்தம் குறையும்.  எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும். கறிவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளை குளிப்பாட்டிய உடன் கொடுக்க மாந்தம் குறையும். பசி  எடுக்கும்.
அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் சரியாகும்.கோவைப் பழம் தினசரி ஒன்று சாப்பிட சர்க்கரை நோய்  கட்டுப்படும்.
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் சரியாகும்.
வெங்காயத்தை நசுக்கி அதன் சாற்றை ஒரு சொட்டு கண்ணில் விட தூக்கம் வரும். வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து  குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும்.
வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது பூச புண் ஆறும்.மணத்தக்காளி கீரை  சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

முருங்கை இலை ஒருபிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் கர்ப்பிணிகளுக்கு பேறுகால வலி குறையும்.
விடுதலை,10.11.14

பீன்ஸ்

நுரையீரல் பாதிப்புகளுக்கு தீர்வளிக்கும் பீன்ஸ்

மனிதன் ஆரோக்கியமாக வாழ உடலின் பல்வேறு உறுப்புகள் கட்டாயம் செயல்பட வேண்டியது அவசியமாகும். மனிதன் உயிருடன் வாழ இதயம்  தொடர்ந்து இயங்க வேண்டியுள்ளது.
இயங்குவதற்காக காற்றை சுவாசிப்பதில் நுரையீரல் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது  மனிதன் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். நுரையீரல் பாதிப்பால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான  இளைஞர்கள் உயிரிழக்கின்றனர்.
பொதுவாக புகைபிடித்தல், புகையிலை பொருட்களை பயன்படுத்துதல், போன்றவற்றாலேயே நுரையீரல் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வந்தது.  ஆனால் சமீப காலமாக பெருகிய வாகனங்களால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 60 விழுக்காடு பேர்  அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகின்றன. இதனால் நுரையீரல்  புற்றுநோய்நெஞ்சு சளி, மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்கள் மனிதனை தாக்குகிறது.
இந்நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறையில்  மருந்துகள் இருந்தாலும் வருமுன்காப்போம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.  இந்நிலையில் நுரையீரல் பாதிக்காமல் இருக்க மனிதன் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் குறித்த ஆய்வை கார்ட்டின் தொழில்நுட்ப  பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஆய்வுகூடத்தில் மேற்கொண்டனர்.
இதன் முடிவில் பீன்ஸ், கலந்த உணவை  தினமும் 75 முதல் 100 கிராம் வரை சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறைந்தது தெரிந்தது. இதுமட்டுமல்லாமல் நோய் பாதிப்பு இருப்பவர்கள் பீன்சை சாப்பிடும்போது அவர்களின் வியாதி வளர்ச்சி விகிதம் குறைந்தது. நல்ல நிவாரணம்  கிடைப்பதையும் ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.

குறிப்பாக பச்சை பீன்சில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு  ஆகிய சத்துகள் அதிகம் உள்ளது. இது தவிர புரோட்டீன் சத்தும் பச்சை பீன்சில் அதிகம் உள்ளது. தினமும் சுமார் 50கிராம் பீன்சை உட்கொண்டால் நுரையீரல் தொடர்பான நோய் தாக்குதலில் இருந்து 90சதவீதம் வரை மனிதனுக்கு நோய் ஏற்படாது  என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதலை,10.11.14

திங்கள், 3 நவம்பர், 2014

மருத்துவ குணம் நிறைந்த மிளகு


மிளகு
மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உடலில் தோன்றுகின்ற  வாயுவையும் நீக்கி, உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது.
இது காரமும், மணமும் உடையது. உணவை செரிக்கவைக்க  உதவுகிறது. விட்டுவிட்டு வருகின்ற முறை காய்ச்சலை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை  ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் நாள்தோறும் இரண்டுவேளை சாப்பிடவேண்டும்.
பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை  ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்துத் தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம்  எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை சாப்பிட்டால் நல்ல பலன் தரும். சிலருக்குத் தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும்.
இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு  மூன்றையும் அரைத்து மயிர் புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த  முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அருகம் புல்லையும், பத்து மிளகையும் பொடியாக இடித்து கசாயம் போட்டு அருந்தி வந்தால் எல்லாவித  விஷக்கடிகளும் முறியும்.
சாதாரண காய்ச்சலுக் கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும்  கலந்து இரவில் ஒருவேளை சாப்பிட்டுவர நல்ல பலன் தரும். சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை  சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.
மிளகுத் தூளும், சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல் வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில்  துர்நாற்றம் ஆகியவை விலகும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி  தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.
மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து  மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 23 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும். 100 கிராம் வில்வ இலை சூரணத்துடன்,  10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு ஆண்டில் ஆஸ்துமா குணமாகும்.
சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.
வெற்றிலை உலர்ந்த வேரையும், மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10 கிராம் அளவு வெந்நீரில் காலை மாலை  மூன்று நாள் சாப்பிட, கருகலையும். தடைபட்ட விலக்கும் வெளியேறும். அரை கிராம் மிளகுப் பொடியுடன் ஒரு கிராம் வெல்லம் கலந்து காலை மாலை  சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

Read more: http://www.viduthalai.in/page-7/90446.html#ixzz3I4Zx53wx

இதய நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட பூண்டு


உள்ளிப் பூண்டு
கடுமையான வாசனையின் காரணமாக பூண்டு எல்லோருக்கும் பிடிப்பதில்லை. பூண்டு அற்புத மான மருந்துப் பொருள் என்பது அவர்களுக்குத் தெரியாது.  இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.
பூண்டின் மருத்துவக் குணங்களால் ஸ்பெயின்,  இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துகளும் இருக்கின்றன. பூண்டின் மணத்துக்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.
நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள் வோருக்கு பலவித நோய்கள் விலகிச் செல்கின்றன என்கிறார் பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத். பூண்டின் மகத்துவங்களைப் பட்டியலிட்டபடியே, பூண்டை வைத்து அசத்தலான மூன்று உணவுகளையும் செய்து காட்டுகிறார் அவர்.
நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டிருக்கும் உணவுகளில் பூண்டு முதன்மை இடம் வகிப்பது. சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும். பூண்டு இருக்கும் போது பாக்டீரியாக்கள் சீக்கிரம் பெருகாது. இது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் உண்ணும்போது செரிமான சக்தியைத் தூண்டும். வாயு சுலபமாக வெளியேற உதவி புரியும். மலச்சிக்கல் வராது. இது வெப்பத்தைக் கொடுக்கும் என்பதால் அளவுடன் சாப்பிடவேண்டும். பச்சையாக சாப்பிடும்போது அதிக பலன்களைப் பெறலாம்.
இதன் தோலில் அல்லிசின் என்ற வேதிப் பொருள் உள்ளது. தோலை உரிக்காமல் லேசாக சிதைத்து போடும் போது நமக்கு முழுமையான பலனைத்  தரும். கொழுப் பினால் அடர்த்தியான ரத்தத்தை அதனுடைய தன்மைக்கு கொண்டு வருவதில் இதற்கு இணையான உணவே இல்லை எனலாம். அதனால் இதய நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
ஆஸ்துமா மட்டுமின்றி நமது நுரையீரல் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். ஆயுர்வேதம், யுனானி, சித்தா போன்றவற்றில் கஷாயம், லேகியம், மாத்திரை, மருந்துகள் மட்டுமின்றி விஞ்ஞான முறைப்படியும்  இதனுடைய நற்குணங்களைக் கண்டு மாத்திரை வடிவில் சுலபமாக எங்கும் எடுத்துச் செல்லும் படியும் கிடைக்கிறது.


Read more: http://www.viduthalai.in/page-7/90445.html#ixzz3I4RFmLgo

வியாழன், 30 அக்டோபர், 2014

பெரு நெருஞ்சில்


பெரு நெருஞ்சில்


விதை மற்றும் பூ பகுதி

படற் செடி, தடித்த இலைகள், விதை படைக் கருவி போல் இருக்கும்.
பெரு நெருஞ்சில்


 சிறு நீர் கோளாறுகளை சரிப்படுத்தும்.