செவ்வாய், 24 ஜூலை, 2018

அருந்தமிழ் மருத்துவம் 500

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                          
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

மருந்தாகும் கீரைகள்

* அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கிப் பித்தத்தைத் தெளியவைக்கும்.

* குப்பைகீரை - பசியைத்தூண்டும், வீக்கத்தினை வற்ற வைக்கும்.

* அரைக்கீரை - ஆண்மையைப் பெருக்கும்.

* புளியங்கீரை - சோகையை விலக்கும். கண்நோய் சரியாக்கும்.

* பிண்ணாருக்குகீரை - வெட்டை, நீர்கடுப்பு நீக்கும்.

* பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

* பொன்னாங்கன்னிக் கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

* சுக்காக்கீரை - ரத்த அழுத்தத்தைச் சீர்செய்யும், சிரங்கு, மூலத்தைப் போக்கும்.

* முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

* கல்யாண முருங்கைக் கீரை - சளி, இருமலைக் குறைக்கும்.

* வல்லாரை கீரை - மூளைக்குப் பலம் தரும், நினைவாற்றல் அதிகரிக்கும்.

* முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும், வாயு விலகும்.

* புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.

* புதினாக்கீரை - ரத்தத்தைச் சுத்தம் செய்யும், அஜீரணத்தைப் போக்கும்.

* நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.

* காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும், உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

- விடுதலை நாளேடு, 16.7.18

மருந்தாகும் கீரைகள்

* அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கிப் பித்தத்தைத் தெளியவைக்கும்.

* குப்பைகீரை - பசியைத்தூண்டும், வீக்கத்தினை வற்ற வைக்கும்.

* அரைக்கீரை - ஆண்மையைப் பெருக்கும்.

* புளியங்கீரை - சோகையை விலக்கும். கண்நோய் சரியாக்கும்.

* பிண்ணாருக்குகீரை - வெட்டை, நீர்கடுப்பு நீக்கும்.

* பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

* பொன்னாங்கன்னிக் கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

* சுக்காக்கீரை - ரத்த அழுத்தத்தைச் சீர்செய்யும், சிரங்கு, மூலத்தைப் போக்கும்.

* முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

* கல்யாண முருங்கைக் கீரை - சளி, இருமலைக் குறைக்கும்.

* வல்லாரை கீரை - மூளைக்குப் பலம் தரும், நினைவாற்றல் அதிகரிக்கும்.

* முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும், வாயு விலகும்.

* புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.

* புதினாக்கீரை - ரத்தத்தைச் சுத்தம் செய்யும், அஜீரணத்தைப் போக்கும்.

* நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.

* காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும், உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

- விடுதலை நாளேடு, 16.7.18

மருத்துவ குணமுடைய வாழைப்பூ

இதைப் பதமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை நோய் நீங்கும். ரத்த மூலம் போக்கும். உதிரக் கடுப்பு இருக்காது. கை, கால் எரிச்சல் நீங்கும்.

வாழைப் பூவை நறுக்கி சாறு எடுத்து அத்துடன் பனங் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்கள் எல்லாம் உடனே குணமாகும்.

வாழைப்பூக் கறி பித்தம், வாதம் உடலில் ரத்தக் குறைவு, கிராணி, வயிற்றில் பூச்சி முதலிய வியாதி களுக்கு சிறந்த மருந்தாகும்.

வாழைப்பூ சாற்றில் தயிரைக் கலந்து உட்கொண்டால் ரத்தக் கிராணி, பெரும்பாடு முதலியவை நீங்கும்.

- விடுதலை நாளேடு, 16.7.18

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்

கல்லீரல் சார்ந்த பாதிப்புகள் முற்றிலும் நீங்க அதிமதுரம், கீழாநெல்லி, சீரகம் இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் இரண்டு கிராம் பொடியை தினமும் காலையில் மட்டும் சாப்பிட்டுவந்தால் கல்லீரல் பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.

இளநரை, தலைமுடி உதிர்தல் தடுக்க அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை முடி உதிர்தல் இருக்காது.

அடிக்கடி வரும் தலைவலி குணமாக அதிமதுரம், சீரகம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி வரும் தலைவலி முழுமையாக குணமாகும்.

இளவயதில் உண்டாகும் வழுக்கை நீங்கி முடி வளர அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும்  முடி

வளரும்.

அனைத்து விதமான சளி, இருமல், ஆஸ்துமாவிற்கு சிறந்த நிவாரணம் அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும்.

தொண்டை சார்ந்த நோய்கள் குணமாக அதிமதுரம், ஆடாதொடை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் இரண்டு கிராம் அளவு காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால்  தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.

- விடுதலை நாளேடு, 23.7.18

செவ்வாய், 3 ஜூலை, 2018

மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?

பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள் இதோ...!

*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி*
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி*
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி*
வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி*
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி*
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி*
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி*
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,*
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி*
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி*
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி*
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்*
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி*
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி*
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி*
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி*
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி*
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்