ஞாயிறு, 19 ஜூலை, 2015

ரத்த அழுத்தத்தை குறைக்கும் பீட்ரூட்

பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய பீட்ரூட் 2 ஆயிரம் ஆண்டுகளாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். ரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது.
வயிற்று பிரச் சினைகள் தீரும். புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரி செய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும்.
ரத்த சோகை, உடல் எடை சரியாகும். முகப்பொலிவு கூடும்; சிறுநீரக எரிச்சலை குறைக்கிறது. தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவினால் தீப்புண் கொப்பளமாகாமல் விரைவில் ஆறும். பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். பீட்ரூட் அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வந்தால் ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும். மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும்.  தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயைத் தடுக்கலாம்.
பீட்ரூட்டைக் கசாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும். பீட்ரூட்டில் 87.7 சதவீதம் நீர்ச்சத்தும், 1.7 புரதச்சத்தும், 0.1 சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளன. சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துக்களும், வைட்டமின் சி உள்ளன.
வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட்டுகள் உடலுக்குள் சென்றதும், நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றப்பட்டு, ரத்த குழாய்களை விரித்து ரிலாக்ஸ் செய்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி, ரத்த அழுத்தம் குறைகிறது.
விடுதலை,20.4.15

ஆமணக்கு எண்ணெயின் அரிய மருத்துவ குணங்கள்


கபம், வீக்கம், குளிர்ச் சுரம் இவைகளைத் தணிக்க... ஆமணக்கு எண்ணெய் இனிப்பானது. இது விபாகத்திலும் இனிப்பு. இது சீக்கிரமாக வேலை  செய்கிறது. இது உஷ்ண மானதும், கனமானதும் ஆகும்.
இது கபம், வீக்கம், குளிர்ச் சுரம் இவைகளைத் தணிப்பதில் பயனுடையதாக இருக்கிறது. உபயோகங்கள்: குழந்தைகளுக்குப் பேதிக்கு கொடுக்கின்ற மருந்துகளில் மிக உத்தமமானது இது. இதை நாள்தோறும் ஒரு தேக்கரண்டி அளவு  தாய்ப்பாலிலேனும், பசும் பாலிலேனும் கலந்து கொடுக்கலாம். வயிற்றினுள் ஏற்படும் வீக்கமான நிலையில், இதை மிகவும் பாதுகாப் பான மலப் போக்கியாகக் கொடுக்கலாம்.
ஆயுர்வேத மருத்துவர்கள், சிற்றாமணக்கு எண்ணெயை ஆமவாத நோயில், நோய்க்குரிய மருந்தாகக் கருதப்படுவது ஏனெனில், அது உடலினுள்ள  விஷத்தன்மையை வெளிப்படுத்த உதவி செய்கின்றது. வெளிப் பிரயோகத்தில், தோலின் வெடிப்புகட்கும், பிளவுகட்கும், பாதங்களின் எரிச்சலுக்கும் பயன்படுகிறது.
சுண்ணாம்பையும், விளக் கெண்ணெயையும் கலந்து பசையாக சிரங்குகட்கு வெளிப்பிரயோகமாகப் போடலாம். கட்டிகளுக்குப் போட  அவை பழுத்து உடையும். சிற்றாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டிவரப் பெண்களுக்குப் பால் சுரக்கும்.
இலைகளைச் சிறுக அரிந்து, சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வதக்கித் தாங்கக்கூடிய சூட்டில், வேதனையுடன் கூடிய கீல்வாதங்கட்கும், வாத ரத்த  வீக்கங்கட்கும் ஒற்றட மிடலாம். இதனால் வேதனை தணியும். சிற்றாமணக்கு இலையையும், கீழா நெல்லியையும் சமபாகமெடுத்து அரைத்துச் சிறு  எலுமிச்சங்காய் அளவு மூன்று நாளைக்குக் காலையில் மாத்திரம் கொடுத்து, நான்காம் நாள் 3 அல்லது 4 முறை வயிறு போவதற்குரிய அளவு  சிவதைச் சூரணம் கொடுக்க காமாலை தீரும்.
மலக்கட்டும், வயிற்று வலியும் உள்ளபோதும், சூதகக் கட்டு அல்லது சூதகத் தடையுடன் அடிவயிற்றில் வலி காணும்போதும், அடிவயிற்றின்மீது  சிற்றாமணக்கு எண்ணெயை இலேசாகத் தடவி, அதன் மீது சிற்றாமணக்கு இலையை வதக்கிப் போட்டுவர, அவைகள் குணப்படும்.

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதை தடுக்கலாம்
மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகிவிட்டது. இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரிசமப்படுத்தி சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதய நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள். அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களைவிட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது. அதன்மூலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்

  • அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தைத் தெளிய வைக்கும்.
  • காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
  • சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
  • பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும். ர் கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
  • மஞ்சள் கரிசாலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
  • குப்பைகீரை- பசியைத் தூண்டும். வீக்கம் வத்த வைக்கும்.
  • அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
  • புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
  • பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்க்கடுப்பை நீக்கும்.
  • பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
  • பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
  • சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
  • வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
  • முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
  • வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
  • முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
  • புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
  • புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தைப் போக்கும்.
  • நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
  • தும்பைக்கீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
  • கல்யாண முருங்கைக் கீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
  • முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
  • பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
  • புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
  • மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
  • மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
  • முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
  • சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
  • வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
  • தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
  • தவசிக்கீரை- இருமலை போக்கும்.
  • சாணக்கீரை- காயம் ஆற்றும்.
  • வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
  • விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
  • கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
  • துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
  • துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
  • காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
  • மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
  • நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

கோடையை வெல்லும் கொடைகள்
வெயிலின் வெம்மையில் துவண்டு சாயும் செடி, கொடிகள், வெம்மை தாங்காது இலைகளைத் துறந்து நிற்கும் மொட்டை மரங்கள், இன்னும் தள்ளாடி  நடை போடும் ஆவினங்கள், அணு உலையோ, அடுக்களையோ அனல் காற்றை அள்ளியடிக்கிறதோ என அய்யுறச் செய்யும் கோடைக் காற்று, இத்தனையும் தாண்டி இன்பமாய் கோடையைத் தாண்ட இதோ சில இயற்கையின் நடைமுறைக் கொடைகள்.
வியர்வை நீக்க நன்கு குளிக்கவேண்டும். காய்ச்சி வடிகட்டிய, சாதாரண மாக அறையில் வைக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீரையே குடிக்க வேண்டும். குறைந்தது 3 முதல் 4-1.2 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். பழங்கள், பச்சைக் காய்கறிகளை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து,  சுத்தமாகக் கழுவி பச்சையாக சாப்பிட வேண்டும். வெள்ளைப் பருத்தி துணிகள் உகந்தது. உடற்பயிற்சியும் அவசியம்.
கீரைகள், வாழைத் தண்டு, சுரைக்காய், வெள்ளரிக்காய், விதை நீக்கிய தக்காளி, முட்டைகோஸ், முளைத்த பயிறு வகைகள், முள்ளங்கி, குடைமிளகாய் முதலியன பச்சை யாகவோ, மோர் தெளித்தோ சாப்பிடவேண்டும். எண்ணெயில் பொறித்த கொழுப்பான உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும்.
விடுதலை,20.4.15

ஞாயிறு, 12 ஜூலை, 2015

சீந்தில் - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘சீந்தில் சூப்’

மாற்றம் செய்த நாள்:
ஞாயிறு, ஜூலை 12,2015, 2:35 PM IST
பதிவு செய்த நாள்:
ஞாயிறு, ஜூலை 12,2015, 2:35 PM IST,தினத்தந்தி
அமிர்த்தவல்லி, சோமவல்லி என்ற பெயர்களால் அழைக்கப்படும் சீந்தில் கொடி, காய கற்ப மூலிகைகளில் ஒன்று. இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை
கொண்டதாகவும் இருக்கிறது.

சீந்தில் கொடி மரங்களில் பற்றி வளரும். இலை இதய வடிவில் இருக்கும். சிவப்பு நிறத்தில் சிறு பழங்கள் இதில் தோன்றும். இதன் இலை, தண்டு, வேர் போன்ற அனைத்து பாகங்களுமே மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

சீந்திலில் பல தாவர வேதியியல் சத்துகள் அடங்கியுள்ளன. அதில் உள்ள தாவர ஸ்டிராய்டுகள், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் போன்ற தாதுகள் இதன் சிறப்பான மருத்துவ குணத்திற்கு காரணமாக இருக்கின்றன.

சீந்தில் உடலில் உள்ள வாதம், பித்தம் மற்றும் கப தன்மையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இந்த மூலிகையில் இருக்கும் கசப்புத்தன்மை  உடலில் அதிகரிக்கும் சூட்டை (பித்தத்தை) சிறந்த முறையில் குறைக்க உதவுகிறது. நோயினால் இழந்த உடல் சக்தியை மீண்டெடுக்க சீந்தில் உதவுவதால் இதற்கு அமிர்த்தவல்லி என்ற சிறப்பு பெயர் வழங்கப்பட்டுள்ளது. இது உடலை தேற்றி, உள்ளுறுப்புகளுக்கும், இனப்பெருக்க உறுப்புகளுக்கும் பலம் அளிக்கிறது.

சிலருக்கு காய்ச்சல் விட்டுவிட்டு வந்து கொண்டிருக்கும். அவர்களுக்கு சீந்தில் சிறந்த மருந்தாகும். டைபாய்டு, மலேரியா காய்ச்சல்கள் குணமான பின்பு, உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியத்தை மீட்டுத் தரும் முக்கிய மூலிகையாகவும் இது திகழ்கிறது. காய்ச்சலை குணப் படுத்த தயார் செய்யப்படும் மருந்துகளில் இது முக்கிய மூலிகையாக சேர்க்கப்படுகிறது.

* சீந்தில் தண்டினை 20 கிராம் அளவுக்கு எடுத்து, 200 மி.லி. நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி எடுங்கள். அத்துடன் 5 கிராம்புவை பொடி செய்து கலந்து, 50 மி.லி. வீதம் மூன்று வேளை குடித்து வரவேண்டும். குடித்தால் கடுமையான காய்ச்சலால் ஏற்பட்ட சோர்வு, வலி போன்றவை நீங்கும்.

சீந்தில் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் உள்ள திசுக்களை சீரமைக்க உதவுகிறது. பசியின்மையை நீக்குகின்றது. ரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது. வயிற்று கோளாறுகள் மற்றும் அஜீரணத்தை போக்குகிறது. புற்று நோய் கட்டிகளை கரைக்கும் தன்மையும் சீந்திலுக்கு உண்டு. புற்று நோய் கீமோ சிகிச்சைக்கு முன்பும், பின்பும் சீந்தில் சார்ந்த மருந்துகளை நோயாளிகள் சாப்பிடலாம்.

* சீந்தில் கொடியை 20 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள். கொத்த மல்லி விதை மற்றும் சோம்புவை ஒரு தேக்கரண்டி வீதம் எடுங்கள். சிறு துண்டு அதிமதுரத்தையும் சேருங்கள். இவை அனைத்தையும் 200 மி.லி. நீரில் போட்டு கொதிக்கவிடுங்கள். இதனை 50 மி.லி. வீதம் பருகிவந்தால் நாள்பட்ட வயிற்று கோளாறுகள், ஈரல் நோய்கள், ஜீரண பிரச்சினைகள் நீங்கும். உடலுக்கு பலம் கிடைக்கும்.

சிறுநீரகத்தில் படியும் யூரிக் அசிட் போன்ற கழிவுகளையும் சீந்தில் சிறந்த முறையில் நீக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, நீடித்த ஒவ்வாமை காரணமாக அடிக்கடி சளி, இருமல், தும்மல், கண்களில் அரிப்பு, கண்ணீர் வடிதல் மற்றும் உடல் சோர்வு போன்றவை ஏற்படும். தொண்டை தசை வளர்ச்சி,  மூக்கடைப்பு போன்ற தோற்றுகளும் உண்டாகும். அவைகளுக்கு சீந்தில் சிறந்த மருந்து. இதை தொடர்ந்து பயன்படுத்தினால் உடலில் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும். நீடித்த ஒவ்வாமையும் நீங்கும்.



உடல் சூடு காரணமாக உண்டாகும் மேக நோய்களை சீந்தில் நீக்கவல்லது. நீடித்த தோல் நோய்கள் மற்றும் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல், சிறுநீர் பாதையில் தோன்றும் புண்கள், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், பால்வினை நோய்களுக்கும் இது மருந்தாகின்றது.

சர்க்கரை நோயாளிகளுக்கு சீந்தில் மிக சிறந்த மருந்து. இது பல ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றும். கை, கால் மரத்து போகும். பாதங்களில் எரிச்சல் தோன்றும். நரம்புகள் பலமிழக்கும். இத்தகைய பிரச்சினைகளை சீந்தில் போக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கவும் உதவும்.

சர்க்கரை நோயாளிகள் வேறு மருந்துகள் உட்கொள்ளும்போது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை சாப்பிடவேண்டும்.

சீந்தில் இலைகளை வதக்கி, மூட்டு வலிகளுக்கு ஒத்தடமிடலாம். சிலருக்கு தோள்பட்டை மூட்டுகளை சுற்றியுள்ள தசைகள் வலுவிழந்து  மூட்டுகள் நழுவி விடும். அதனால் கடுமையான வலி உண்டாகும். இதற்கு சீந்தில் இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது உளுந்து மாவு கலந்து மூட்டுகளை சுற்றி பற்று போடவேண்டும். போட்டால் தசைகள் இறுகும். வலி நீங்கும். மூட்டு வலி மற்றும் ‘கவுட்’ எனப்படும் கால் கட்டை விரல் வீக்கத்திற்கும் இந்த பற்று போடலாம்.

சீந்தில் தண்டுகளில் மாவு சத்து உள்ளது. அதிலிருந்து ‘சீந்தில் சர்க்கரை’ தயாரிக்கப்படுகிறது. இது சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும். இது பல நோய்களுக்கு சிறந்த மருந்தாகின்றது.

இதை 500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரை எடுத்து நீரில் கலந்து சாப்பிட்டால் பலவித நாள்பட்ட நோய்கள் நீங்கும். உடல் வலிமை பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் சாப்பிடவேண்டும்.

ஸ்பெஷல் டீ

சீந்தில் தண்டு – 50 கிராம்

மிளகு தூள் – ½ தேக்கரண்டி    மிளகு தூள் – ½ தேக்கரண்டி

உப்பு – தேவைக்கு

தண்ணீர் – 300 மி.லி.

செய்முறை: பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் எல்லா பொடிக

சீரகம் – 1 தேக்கரண்டி  

பனங்கற்கண்டு – 1 தேக்கரண்டி

நீர் – 500 மி.லி.  

செய்முறை: சீந்தில் கொடியை நன்கு நசுக்கி, நீரில் கொதிக்க வைத்து, அத்துடன் மிளகுதூள், சீரகம் கலந்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவேண்டும். அதனை வடிகட்டி, சுவைக்கு பனங்கற்கண்டு கலந்து பருகவேண்டும்.

இந்த டீயை பருகினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஜீரணம் மேம்படும். மலச்சிக்கல் தீரும். இதை தினம்  100 மி.லி. பருகி வரலாம்.


ஸ்பெஷல் சூப்

சீந்தில் சர்க்கரை – 1 கிராம்

வெந்தய பொடி – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலைபொடி – ½ தேக்கரண்டி

செய்முறை: பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் எல்லா பொடிகளையும் இட்டு கொதிக்க வைத்து, தினம் 100 மி.லி. பருக வேண்டும். சர்க்கரை நோயால் உண்டாகும் கை, கால் எரிச்சல், பாதங்களில் உண்டாகும் மதமதப்பு, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு போன்றவை நீங்கும். சர்க்கரையின் அளவும் குறையும்.

டாக்டர் இரா. பத்மப்ரியா (சித்த மருத்துவர்)

ஞாயிறு, 5 ஜூலை, 2015

இயற்கை நமக்கு தரும் சத்துக்கள்


அன்னாசி பழம், பப்பாளி, மாம்பழம், கொய்யா, மஞ்சள், பரங்கிக்காய், நெல்லிக்காய், கேரட், பொன்னாங்கண்ணி கீரைகளில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகம் உள்ளன. இவற்றை அளவோடு உட்கொண்டால் மாலைக்கண் நோய் தீரும். சருமம் பொலிவு பெறும்.
வைட்டமின் பி- வாழைப் பூ, சாம்பல் பூசணி, நாட்டு தக்காளி, முருங்கைக்காய், முருங்கைக் கீரை, முட்டைகோஸ், காலிபிளவர், பட்டாணி, கடலை, மாதுளை போன்றவற்றில் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை அளவோடு உண்டால், நமது உடல் வலிமைக்கும் நரம்புகள் ஊட்டத்துக்குள் வலு சேர்க்கும். மேலும் வயிற்றுப் புண், வாய்ப் புண், ரத்தசோகை, கை-கால் செயலிழத்தலை விரைவில் குணமாக்கும்.
வைட்டமின் சி- எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி, நாட்டு தக்காளி, நெல்லிக்காய், ஆரஞ்சு, முட்டைகோஸ், காலிபிளவர், வெள்ளை முள்ளங்கி மற்றும் புளிப்பு சுவை உடைய காய்கள் மற்றும் கீரைகளில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பாற்றலுக்கும் ரத்த சுத்திகரிப்பு செய்வதற்கும் அதிகளவில் உதவுகிறது.
மேலும் சளி பிடித்தல், வயிற்றுப் புண் (அல்சர்), குடல் புண் உள்ளவர்கள் இதுபோன்ற ரத்த சத்து மிகுந்த உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது.
வைட்டமின் டி- முட்டை, மீன், தேங்காய், கடலை, பட்டாணி, துவரை, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, எண்ணெய் வித்துக்கள் உள்ள பொருட்களில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் நமது உடலுக்கு ஊட்டத்தையும் வலிமையையும் கொடுக்கும். இந்த சத்து குறைவதால்தான் நமக்கு தோல் வியாதிகள் வருகின்றன.
தேங்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை 20 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாகவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைவாகவும் எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின் இ- முருங்கைக்காய், முருங்கை விதை, கடலை, வேர்க்கடலை, முந்திரி பருப்பு, தேங்காய், பேரீச்சம்பழம், பதநீர் போன்றவற்றில் வைட்டமின் இ சத்துக்கள் அதிகம்.
இவை நமது உடல் ஆரோக்கியத்துக்கும், உயிர் சத்தான விந்துவையும், கரு தரித்தலுக்கான சினை முட்டைகளையும் அதிகரிக்க இந்த சத்து மிகவும் முக்கியம். வயதுக்கு வராத பெண்கள், கருத்தரிக்காத பெண்கள் மற்றும் ஆண் மலடுகளுக்கு இந்த சத்து மிக அவசியம்.
வைட்டமின் கே- வாழைப் பூ, அத்திக்காய், மாதுளை, வாழைத் தண்டு, நெல்லிக்காய், கொய்யாப் பிஞ்சு, மொச்சை, புளிச்ச கீரை போன்றவற்றில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் காணப்படும்.  நம் உடலில் இந்த சத்துக்கள் குறைந்தால் ரத்தம் நீர்த்து போய், ரத்த ஒழுக்கு ஏற்படும். இந்த சத்து ரத்தம் உறைதலுக்கு மிக அவசியம்.
இரும்பு சத்து- முருங்கைக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, அவரை, வாழைப்பூ, கத்திரி பிஞ்சு, நாட்டு தக்காளி, வெள்ளரி, வெண்டை மற்றும் பாகற்காயில் இரும்பு சத்துகள் அதிகம். இந்த சத்து நம் உடலில் குறைவதால் ரத்தம் கெடுவதுடன் தோல் வியாதி ஏற்படுகிறது.
அடிக்கடி சளி பிடித்தல் மற்றும் ரத்த சோகை ஏற்படும். ஆனால், அதுவே அளவுக்கு மீறியிருந்தால் வயிற்றுக் கோளாறு மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்.
மாவு மற்றும் சர்க்கரை சத்து- நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை, வெல்லம், கிழங்கு வகைகள், வெங்காயம், அரிசி, கோதுமை, பால், பருப்பு மற்றும் தானிய வகைகளில் இந்த 2 சத்துகளும் அதிகம் உள்ளன. நமது உடலில் சேரும் கொழுப்பு சத்துகளை கரைந்து போகாமல் தடுப்பதுடன், விரதம் இருப்பவர்களும் நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களை காப்பதும் இந்த 2 சத்துகளும்தான்.
புரத சத்து- சோயா மொச்சை, பாதாம் பருப்பு, முந்திரி, வேர்க்கடலை, கொட்டை பருப்பு, பால், பாலாடை, மீன், முட்டை போன்றவற்றில் புரத சத்து அதிகம். இவை உணவை ஜீரணிக்க உதவுவதுடன், ஜீரண நீர் வளர்ச்சிக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது.
இவை குறைவதால் தசைகள் இளைத்து போவதுடன், சத்து குறைவு காரணமாக உடலில் வீக்கம் ஏற்பட்டு ஊதி பெரிதாகிறது.
கொழுப்பு சத்து- வெண்ணெய், மிருக கொழுப்புகள், தேங்காய், எண்ணெய், கடலை எண்ணெய், பருத்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோள எண்ணெய் போன்றவற்றில் கொழுப்பு சத்துக்கள் அதிகம். இந்த சத்துக்கள் நீரில் கரையாமலும், எண்ணெய் போன்ற பிசுக்களினால் ஆன தனித்தன்மை பெற்றது.
சுண்ணாம்புச் சத்து- நம் உடலின் தாதுப் பொருட்களில் மிக முக்கியமான சத்து சுண்ணாம்பு சத்தாகும். இவை முருங்கை கீரை, ராகி, கோதுமை, நண்டு, ஆட்டு இறைச்சி, பீட்ரூட், வெங்காயம், வெண்டைக்காய் மற்றும் கேரட் போன்ற வற்றில் மிகுதியாக இருக்கும். நமது உடலில் எலும்புகள், பற்கள், நரம்பு மற்றும் தசைகளின் சரியான இயக்கத்துக்கும், ரத்தம் உறையவும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவைப்படுகிறது.
சாம்பல் சத்து- முருங்கை, ராகி, கோதுமை, நண்டு, வெங்காயம் மற்றும் வெண்டைக் காயில் சாம்பல் சத்து அதிகம் உள்ளது. நமது உடலில் உள்ள ரத்தத்தின் அமில, காரத்தன்மையைக் கண்காணிப்பது சாம்பல் சத்தாகும். எலும்புகளுடன் சுண்ணாம்பு சத்து சேருவதில் சாம்பல் சத்து பெரும்பங்கு வகிக்கிறது.
உப்பு சத்து- நம் உடலில் சேரும் நீர் சத்துக்கு அடுத்தபடியாக மிக முக்கிய பங்கு வகிப்பது உப்புதான். ஆனால், இவற்றை நாம் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். இவை நம் உடலில் அதிகமானால், கழுத்துக்கு முன்புற வீக்கமும் உடல் தளர்ச்சியும் ஏற்படும்.

-விடுதலை,15.6.15

தூதுவளை

சீரான உடல் நலத்துக்கு தூதுவளை
சிறிய, உடைந்த முள் போன்ற இலைகளையும், மித ஊதா நிற பூக்களையும், உருண்டையான பச்சைநிறக் காய்களையும், சிவப்பு  நிறப் பழங்களையும், வளைந்த முட்களைப் போன்ற தண்டையும் உடைய தூதுவளை, கொடி இனமாகும். இதை நம் வீட்டு  தோட்டத்தில் பந்தல் போட்டு வளர்ப்பது சிறந்த முறையாகும்.
அய்ந்து ஆண்டுகள் வரை வளரும் இக்கொடியின் தண்டுகளில்  முட்கள் இடைவிடாமல் நிறைந்திருக்கும். சரியான முறையில் தூதுவளை கொடியை வளர்த்தால், அவை அதிக நாட்கள் வரை  வளர வாய்ப்பு உள்ளது.
தூதுவளையின் வேர் முதல் பழம் வரை எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இதன் இலையும் பூவும் கோழை சளியை  அகற்றவும், நம் உடலைப் பலப்படுத்தவும், வீரிய சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இதன் காய் மற்றும் பழங்கள்நமக்கு  பசியைத் தூண்டுவதுடன், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள இந்த தூதுவளை கொடி  சிங்கவல்லி, ரத்து நயத்தான், தூதுவேளை, தூதுளம், தூதுளை என்று அழைக்கப்படுகிறது.
மருத்துவ குணங்கள்- தூதுவளை இலைகளை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை காலை  வேளையில் மட்டும் ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து குடித்தால் நாக்கு வறட்சி, கபநீர், மூட்டுவலி மற்றும் காசநோய்  குணமாகும். தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, குழம்பாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால், நெஞ்சில்  சேரக்கூடிய கபக்கட்டு நீங்குவதுடன், நம் உடல் பலம் பெறும்.
தூதுவளை இலையை சாறு பிழிந்து, அதே அளவு நெய்யில் காய்ச்சி, ஒரு தேக்கரண்டி அளவு 2 வேளை தொடர்ந்து குடித்து  வந்தால் எலும்புருக்கி காசம், மார்சளி உடனடியாக நீங்கும். தூதுவளை காயை நிழலில் உலர்த்தி காயவைத்து தயிர், உப்பு  சேர்த்து பதப்படுத்தி, எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டுவர மனநல பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் போன்றவை  குணமாகும்.
தூதுவளை சமூலத்தை 50 கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 150 மி.லி. அளவுக்கு சுண்ட  காய்ச்சி வடிகட்டி, தொடர்ந்து 2 வேளை குடித்து வந்தால் இரைப்பு, சுவாச சளி, இருமல் குணமாகும்.
தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து பொடியாக்கி புகைமூட்டம் போட்டு நுகர்ந்து வந்தால் மூச்சிரைப்பு  இருமல், மூச்சு திணறல் விலகுவதுடன், மார்பில் சேர்ந்த சளி இளகி வெளியேறும்.
தூதுவளை பூக்களை 10 எண்ணிக்கை  எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து, 48 நாட்கள் தொடர்ந்து 2 வேளையும் பருகி  வந்தால் தாது விருத்தி ஏற்படுவதுடன் உடல் பலம் பெறுவதுடன், நமது முகமும் வசீகரமாகும்.
-விடுதலை,15.6.15