மா பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மாங்காய், மாம்பழம், இலை, பட்டை, பூ என அனைத்தும் மருந்தாகிறது. மாவிலைகள் தொண் டைக்கட்டு, வலி, வீக்கத்தை சரிசெய்யும். மாவிலை களை காயவைத்து தேனீராக்கி குடிப்பதால் உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி, வீக்கம் குணமாகும். மாவிலையை புகையாக்கும்போது கொசுக்கள் வராது.
மாங்காயை பயன்படுத்தி ஜீரண கோளாறுகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாங்காய், இஞ்சி, ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதிபத்ரி, புதினா, வெல்லம். செய்முறை: மாங்காய் துண்டுகளுடன், இஞ்சி, ஜாதிபத்ரி, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் சேர்த்து நீர்விடவும். இதனுடன் வெல்லம், ஒரு ஸ்பூன் புதினா சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர செரிமான கோளாறு சரியாகும்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மாங்காய் புளிப்பு சுவை உடையது. பசியை தூண்டக் கூடியது. குறைவாக சாப்பிடும்போது வயிற்று வலியை சரிசெய்யும். அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும். உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. வயிற்று கோளாறுகளுக்கு அற்புத மருந் தாகிறது. ருசியை தரக்கூடியது. இளம்தாய்மார்கள் மாங்காயை விரும்பி சாப்பிடுவார்கள்.
மாவிலையை பயன்படுத்தி தொண்டை வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாவிலை, இஞ்சி, பனங்கற்கண்டு.
செய்முறை: 6 மாவிலைகளை சுத்தப்படுத்தி துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர தொண்டைக்கட்டு, வலி, இருமல் விலகிப்போகும். வாய்ப்புண், நாக்கில் ஏற்படும் புண்கள் ஆறும். மாவிலை நோய் கிருமிகளை தடுக்கும் தன்மை உடையது. மாம்பருப்பை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: மாம்பருப்பு, பனங்கற் கண்டு.செய்முறை: மாம்பருப்பை நசுக்கி, பனங்கற் கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்றுப்போக்கு சரியாகும். மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். உணவுடன் மாங்காய் சேரும்போது அதிக சுவை ஏற்படும். மாங்காயை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதால் அளவுடன் சாப்பிட வேண்டும். முக்கனிகளில் முதன்மைபெறும் மா பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதை நாம் பயன்படுத்தி நன்மை பெறலாம்.
தெரியுமா உங்களுக்கு?
தினமும் பீட்ரூட் சாறு அருந்தினால் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றிவிடும்.
தினமும் ஒரு வகை கீரை உணவில் சேர்த்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்.
தினமும் ஆப்ரிகாட், ஆப்பிள், ஆளிவிதை, ப்ளம்ஸ் சாப்பிட்டால் கேன்சர் நோய் கிட்டே வராது.
தினமும் எலுமிச்சை பழச் சாறை பருகி வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
தினம் ஒரு சின்ன வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் சளி பிடிக்காது.
மாதுளம்பழம் மெனோபாஸால் பெண்களின் உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜென் பிரச்சினையை சீராக்க வல்லது.
வைட்டமின் ஏ அதிகம் உள்ள தக்காளியை சாப்பிடுவதால் பார்வை நரம்புகள் பலப்படும்.
தினமும் உலர்ந்த அத்திப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
வாழைப் பூ சாப்பிட்டால் ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புகள் வெளியேறும்
கருஞ்சீரகத்துடன் பனைவெல்லத்தை சேர்த்து உண்டால் தடைப்பட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்
- விடுதலையை நாளேடு, 19.3.18