ஞாயிறு, 19 மார்ச், 2023

"வாட்ஸ் அப்" - "யுடியூப்" பார்த்து மூலிகை மருந்து என்று கண்டதைச் சாப்பிடாதீர்கள்!

 



நவீன தொழில்நுட்பங்கள்  நாம் அறியாத பல உலகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அதில் ஒன்று அலைபேசியில் வரும் `வாட்ஸ் அப்' மற்றும் `யுடியூப்' மருத்துவங்கள். பலர் தேவையே இல்லாமல் `முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல' என்ற தொனியில் எங்க பாட்டன் அதைச் சாப்பிட்டான், எங்க பூட்டன் இதைச் சாப்பிட்டான் என்று கூறி கிழங்கு மற்றும் இலை தழைகள் போன்றவற்றைச் சாப்பிடச்சொல்வார்கள். 

சிலர்  இதை  அப்படியே நம்பிச் சாப்பிட்டுவிடுகிறார்கள். இப்படித்தான் சிலநாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில்  செங்காந்தள் பற்றி `யுடியூப்'பில் யாரோ கூறியதைக் கேட்டு அதை சாப்பிட்டு உயிரிழந்த ஓர் இளைஞர் குறித்த செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. 

இந்த நிகழ்வில், மருத்துவரீதியாக என்ன நடந்திருக்கலாம் - செங்காந்தள் கிழங்கின் விஷத்தன்மை எப்படிப்பட்டது? 

மருத்துவத்தை பொறுத்தவரை இரண்டு விஷயங்களை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, உணவுப் பொருளை மருந்தாக எடுத்துக்கொள்வது என்பது வேறு; மருந்துப்பொருளை உணவாக எடுத்துக்கொள்வது என்பது வேறு. விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கிற மிளகு, சீரகத்தை மருந்துப்பொருளாக சாப்பிட்டால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது. தவிர, அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்கிற அளவும் நமக்கெல்லாம் தெரியும். ஆனால், செங்காந்தள் கிழங்கு என்பது மூலிகை மருந்து. அந்த மருந்துப்பொருளை உணவுப்பொருளாக நினைத்துக் கொண்டு சாப்பிட்டதுதான் ஒருவரை மரணம் வரை கொண்டு சென்றிருக்கிறது.

செங்காந்தளில்  சயனைட் மூலக்கூறு உள்ளது. இந்தப் பொருளை நவீன முறையில் பிரித்தெடுத்து மருந்துவப் பொருளாக பயன்படுத்துகின்றனர். நவீன மருத்துவத்தில் வெளி நோய் மற்றும் உள் நோய்களுக்கு  மருந்தாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இவ்வளவு அளவுதான் பயன்படுத்த வேண்டும் என்கிற அளவு இருக்கிறது. சித்த மருத்துவத்திலும் பல அளவுமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு மிகக்குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துவோம்.

உணவுப் பொருள்களான கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்குபோல ஒரு மூலிகைக்கிழங்கை சாப்பிட்டால், அது எப்படிப்பட்ட பின்விளைவையும் ஏற்படுத்தலாம்.  ஆனால் செங்காந்தள் கிழங்கு சாப்பிட்டு இறந்த இளைஞருக்கு செங்காந்தள் கிழங்கு  உடலின் இரத்த ஒட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறுநீரகம் உள்ளிட்ட உள் உறுப்புகள்  ஒரே நேரத்தில் செயலிழந்து மரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம். மருத்துவர்கள் பரிந்துரைக்காத எந்தவொரு மூலிகையையும், "யூடியூப்" பார்த்தோ, "வாட்ஸ்ஆப்" பார்த்தோ தயவுசெய்து சாப்பிடாதீர்கள். முக்கியமாக மூலிகை பலன்கள் என்ற பெயரில் தகுதி இல்லாதவர்கள் கூறுவதைச் சாப்பிட்டு ஆபத்தில் சிக்கவேண்டாம்.

-------------------------------------------+++++++++++++++++_-----------------------------




உள்ளூர் செய்திகள்

 திருப்பத்தூர்

 செங்காந்தள் கிழங்கை தின்றவர் சாவு 

Byமாலை மலர்13 நவம்பர் 2022 2:38 PM 

சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை பார்த்து விபரீதம் போலீசார் விசாரணை ஆம்பூர்: ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 26). அவரது நண்பர் நாட்டறம்பள்ளியைச் சேர்ந்த ரத்தினம் (வயது 45). இவர்கள் இருவரும் விண்ணமங்கலம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் செங்காந்தள் பூச்செடி கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை பார்த்து இருவரும் செங்காந்தள் செடியை பிடுங்கி கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளனர் . இதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே இருவருக்கும் வாந்தி - மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களை ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக லோகநாதனை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் . ரத்தினம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . கிழங்கை தின்றவர் சாவு He who eats yam will die 

https://www.maalaimalar.com/news/district/tamil-news-kanyakumari-mp-vijay-vasant-participates-in-nehruyuvakendra-organisations-cultural-function-585481?infinitescroll=1

புதன், 9 மார்ச், 2022

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

இப்பாடல் 
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
 
மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய் 
  மூட்டுக்கு முடக்கறுத்தான் 
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்கு
மணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  
   வெட்டைக்கு சிறுசெருப்படையே 

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை 
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

திங்கள், 15 மார்ச், 2021

எலும்பை வலுவாக்கும் சுண்டை!


*சுண்டைக்காயை காய்ச்சல் நேரத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன், காயங் களையும், புண்களையும் ஆற வைக்கும். மேலும் வாயுப்பிடிப்பு பிரச்சினை உள்ளவர் களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.

*ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புச் சளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள் தினம் இருபது சுண்டை வற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட வேண்டும். நோய் கட்டுப்படும்.

*வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்றுக் கோளாறு களுக்கு சிறந்த மருந்தாகும்.

*சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்புச் சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது.

*பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும். பெண்களுக்கு நல்லது.

*குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச் சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக் காய் உதவும். குழந்தையாக இருக்கும் போதே அவர்களுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிடப் பழக்க வேண்டும்.

*சுண்டைக்காயை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டு விடும். 

கெட்டக் கொழுப்பை கரைத்து வெளியேற்றும் கொத்தவரை!


 கொத்தவரைக்காய் பீன்ஸ் வகையை சேர்ந்தது. இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்று குறிப்பிடுவர். இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது.

*கிளைகோ நியூட்ரியெண்ட் எனும் வேதிப்பொருள் கொத்தவரையில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.  இதில் மிகுந்துள்ள சுண்ணாம்புச்சத்து எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டுவலி ஏற்படாமல் பாதுகாக்கும்.

*இதயத்திற்கு இதமானது. ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.

*கொத்தவரையில் நார்ச்சத்து மிகுந்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும். இதில் சர்க்கரை, கொழுப்புச்சத்து ஆகியவை உள்ளதால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

*பெண்களுக்கு, குறிப்பாக கருவுற்ற பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் கொத்தவரையில் மிகுந்திருக்கிறது. இதில் அதிக அளவு போலிக் அமிலம் இருப்பதால் குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு ஆகியவை சீராக வளர்ச்சி பெற உதவும். வைட்டமின் கே குழந்தை நன்கு வளரவும் எலும்புகள் வலிமை பெறவும் உதவும்.

வெள்ளி, 12 மார்ச், 2021

மூலிகை மருத்துவம் நேற்று, இன்று, நாளை

மூலிகை

வியாழன், 25 பிப்ரவரி, 2021

உடல் நலம் : பச்சை இலைகளின் பயன்பாடுகள்

வியாழன், 28 ஜனவரி, 2021

கரிசலாங்கண்ணியின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்!