தூதுவளை இலைகள், தண்டு, காய், பூ என எல்லாமே மருத்துவக் குணங்கள் வாய்ந்தவை. கீரைகளிலேயே இயற்கையான ஸ்டீராய்டு கொண்டது இது. ஆன்ட்டிபாக்டீரியல், ஆன்ட்டி ஃபங்கல் தன்மைகளை உள்ளடக்கிய உன்னதக் கீரை இது!
மருத்துவக் குணங்கள்
மருத்துவக் குணங்கள்
சளி, இருமல் சரியாக : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் சளி, இருமலுக்கான மிகச் சிறந்த மருந்து தூதுவளை. இதை கஷாயமாகவோ, வேறு எந்த வடிவிலோ உணவில் சேர்த்துக் கொள்கிற வர்களுக்கு மூக்கடைப்பு, மார்புச்சளி, இருமல், தொண்டை எரிச்சல் மற்றும் தொண்டைக் கர கரப்பு போன்றவை வந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். தூதுவளையைக் காய வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு, சூடான பாலில் தினமும் சிறிதளவு கலந்து குடித்து வர, நாள்பட்ட இருமலும் குணமாகும்.
சைனஸ் பிரச்னைக்கும் இதன் இலை மற்றும் தண்டுகளைத் தண்ணீரில் கொதிக்கவிட்டுக் குடித்துவர, சைனஸால் ஏற்படுகிற மூச்சுத் திணறல் சரியாகும். வைரஸ் மற்றும் ஃப்ளூ காய்ச்சல்களுக்கும் இதை முயற்சி செய்யலாம்.
டான்சில்ஸ் எனப்படும் தொண்டைச் சதை கரைய : இன்று டான்சில்ஸ் எனப்படுகிற தொண் டைச் சதை வளர்ச்சி இல்லாத குழந்தைகளே இல்லை. ஒரு கைப்பிடி அளவு தூதுவளையுடன் அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு ஆகியவற்றை தலா 10 கிராம் அளவு எடுத்து இடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து, கால் பாகமாக வற்றச் செய்யவும். அதில் 50 மி.லி. அளவுக்கு தினம் 3 வேளைகள் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் தொண்டைச் சதை கரையத் தொடங்கும்.
ஆஸ்துமா அவதிகளுக்கு : ஆஸ்துமாவை குணப்படுத்துவதில் தூதுவளையின் மகிமைக்கு இணையே இல்லை. இதன் சாற்றை தேன் சேர்த்து உள்ளுக்கு எடுத்துவர, தீவிர ஆஸ்துமா குணமடைவதுடன், அதன் தீவிரத்தால் ஏற்படு கிற குரல் பாகுபாடு மற்றும் பசியற்ற நிலை போன்றவை சரியாகும்.
புற்றுநேயைத் தடுக்க : புற்றுநோய்க்குக் காரணமான கார்சினோஜென் தன்மைக்கு எதிராகப் போராடும் தன்மை தூதுவளைக்கு உண்டு என்கிறார்கள். தூதுவளையை வாரத் தில் ஒன்றிரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொண்டைப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கப்படுமாம். புகை, மதுப்பழக்கம் உள்ளவர்களும் தூதுவளையை அடிக்கடி உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் அபாயத்தில் இருந்து ஓரளவு மீளலாம் என் கின்றன ஆய்வுகள்.
நீரிழிவு பாதிப்புகளின் தீவிரம் தவிர்க்க: நீரிழிவு பாதிப்புக்குள்ளாகும் மக்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவின் காரணமாக, பலருக்கும் செல்கள் மற்றும் திசுக்கள் பாதிக்கப் படுவதும் தொடர்கிறது.
தூதுவளையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையானது நீரி ழிவைக் கட்டுப்படுத்தி, செல்கள், திசுக்கள் பாதிப்பையும் தவிர்க்கிறது. நீரிழிவு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் குறிப்பிட்ட அளவு தூதுவளைச் சாறு எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதோடு, எடையும் முறை யாகப் பராமரிக்கப்படுகிறது.
கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத் துக்கு: தூதுவளையில் உள்ள ஆன்ட்டி ஆக்சி டென்ட் மற்றும் தன்மைகள் கல்லீரலின் ஆரோக் கியத்தைக் காக்க உதவுகின்றன. இதன் பூக்கள் மற்றும் விதைகள் நுரையீரல் புற்றுநோய்க்கான மருந்துத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வயிற்றுக் கோளாறுகளை விரட்ட : தூது வளைக் கீரையை மிளகு சேர்த்து அரைக்கவும். அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடித்தால் வாயுக் கோளாறு மற்றும் சூடு காரணமாக ஏற்படும் வயிற்றுவலி பறந்து போகும்.
ரத்த ஓட்டத்தை சீராக்க : தூதுவளைக்கு ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், ரத்தம் உறைவதைத் தடுக்கவும், ரத்தத்தை விருத்தி செய்யவும் கூடிய குணங்கள் உண்டு என்கிறார்கள்.
காதுக் கோளாறுகள் நீங்கவும், நினைவாற் றலுக்கும்: காதுவலி மற்றும் கேட்கும் திறன் பிரச் சினைகளுக்கு தூதுவளையின் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தூதுவளையின் பூக்க ளுக்கு நினைவாற்றலை மேம்படுத்தும் சக்தி உண்டு.
மலச்சிக்கல் குணமாக : தூதுவளைச் செடியில் சிவப்பு நிறத்தில் பழங்கள் வரும். அவற்றைக் காய வைத்துப் பொடித்து உள்ளுக்கு எடுத்து வர, மலச்சிக்கல் சரியாவதுடன், அசிடிட்டி எனப்படுகிற பிரச்சினையும் குணமாகும். அதே பொடிக்கு வாதநோய் பாதிப்புகளை சரியாக்கும் குணமும் உண்டாம்.
-விடுதலை,22.8.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக