வெள்ளி, 30 செப்டம்பர், 2016

கை கால் வலி குணமாக

அத்திக்காயை சிறுபருப்பு சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால், கை கால் வலி குணமாகும்.

எலும்புத் தேய்வைச் சரிசெய்ய

¨    வெந்தயத்தைப் பொடிசெய்து கோழி-முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலி குணமாகும்.
ஜிம்முக்குச் செல்கிறீர்களா? புரோட்டீன் பவுடர் சாப்பிடச் சொல்கிறார்களா? இதைப் படியுங்கள்!

¨    அசைவ உணவு உண்பவர்களுக்கு புரோட்டின் பவுடர் தேவையிருக்காது. அது இயற்கையாகவே அவர்களுக்குக் கிடைக்கும்.

கல்லீரல், சிறுநீரகம் பிரச்சினை-யுள்ளவர்கள் புரோட்டீன் பவுடர் சாப்பிடக் கூடாது.

18 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் புரோட்டீன் பவுடர் சாப்பிட வேண்டும். புரோட்டீன் பவுடர் சாப்பிடுவோர் 2_3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால் சிறுநீரகக் கல் உருவாகும். இயற்கையான வழியில் புரோட்டீன் பெறுவதே நல்லது. புரோட்டீன் பவுடர் சாப்பிட வேண்டு-மானால் ஸ்போர்ட்ஸ் நியூட்ரீ-ஷீயன் ஆலோசனைப் பெற்று சாப்பிட வேண்டும்.

-உண்மை,1-16.10.16

திங்கள், 5 செப்டம்பர், 2016

துத்தி - மூலநோய்க்கும் துத்தி இலை

மருத்துவம்
இதய வடிவ இலைகள், மஞ்சள் நிறப் பூக்கள், தோடு வடிவ காய்கள் ஆகியவற்றைக் கொண்டது துத்தி. இதன் இலைகளில் மென்மையான சுனை இருக்கும். இது உடலில் பட்டால் அரிக்கும். இது விதை மூலம் இனப்-பெருக்கம் செய்யும் தாவரம். தெருவோரங்கள், தரிசு நிலங்கள் என அனைத்து இடங்களிலும் பார்க்கலாம்.
நடை குறைந்து, இருக்கையிலேயே அதிக நேரம் இருப்பதால், மூலநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அப்படி மூலத்தால் பாதிக்கப்-பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரக்-கணக்கான மருத்துவமனைகள் இருக்கின்றன. அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் மூலத்துக்கு சிகிச்சையளிப்பதாகச் சொல்லும் மஞ்சள் நிற விளம்பரச் சுவரொட்டிகளைப் பார்க்கலாம். இப்படிப்பட்ட மருத்துவ-மனைகளில் ஆயிரக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு மூலத்துக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இன்னும் பெரிய மருத்துவ-மனைகளிலோ, 'அறுவை சிகிச்சை இல்லாமல், எண்டாஸ்கோபி மூலமாக மூலத்தை குணமாக்குகிறோம் எனச் சொல்லி பல ஆயிரங்களைக் கறக்கிறார்கள். உண்மையில் மூலத்துக்கு அறுவை சிகிச்சையும் தேவை-யில்லை. எண்டாஸ்கோபியும் தேவையில்லை. மூலத்தை அறுவை சிகிச்சை செய்ய, இயற்கை அனுப்பி வைத்துள்ள மருத்துவன்தான் துத்தி. அதனால்தான் ‘துத்தி, மூலத்துக்கு கத்தி’ எனச் சொல்லி வைத்தனர், முன்னோர்.
சிகிச்சை
¨    துத்தி இலையை சிறிது விளக்கெண்ணெய் விட்டு கை பொறுக்கும் சூட்டில் வதக்கி... வாழை இலையில் வைத்து, ஆசன வாயில் துணியைக் கொண்டு கோவணம் போலக் கட்டிக்கொள்ள வேண்டும். இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக இப்படி ஓரிரு நாட்கள் செய்து வந்தால், கடுப்பு நீங்கிவிடும். சிறிது சிறிதாக மூலமும் குணமாகிவிடும். சூட்டுக்கட்டிகளில் இதைக் கட்டினால், கட்டிகள் உடையும்.
¨    இதை செய்வது சிரமம் என நினைப்பவர்கள், இரண்டு கை அளவுக்கு துத்தி இலைகளைப் பறித்து, தண்ணீரில் கழுவி, சிறிதாக நறுக்கி, சிறிது மஞ்சள்தூள், 10 சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு வதக்கி, சிறிது மிளகுத்தூள், உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து 10 நாட்களுக்கு இதை உண்டு வந்தால், மூலநோய் குணமாகும். இலையை பருப்புடன் சேர்த்து வேக வைத்து, சாதத்துடன் கலந்து உண்டால், மலம் இலகுவாகப் போகும்.
உடல் புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி, உடலைத் தேற்றும் அதிசய மூலிகை, துத்தி.
'துத்தி மலரை நிதம் துய்க்கின்ற பேர்களுக்கு
மெத்த விந்து வும்பெருகும் மெய்குளிரும் - சத்தியமே
வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந்
தேயாமதி முகத்தாய் செப்பு’    - என்கிறது குணபாடம்.
'துத்திப் பூவை தினமும் உட்கொண்டு வந்தால் ரத்தவாந்தி, காசநோய் நீங்கும். விந்து அதிகமாக உற்பத்தியாகும். உடல் குளிர்ச்சி-யடையும்’ என்பது இச்செய்யுளின் சுருக்கமான பொருள். பசும்பாலில் ஒரு கைப்பிடி துத்திப் பூவைப் போட்டு வேகவைத்து குழையும் பதத்தில் கடைந்து... சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து உண்டு வந்தால், உடல் சூடு தணியும். விந்து கட்டும். ரத்தக் காசம் குணமாகும். துத்திப் பூவுடன் சுவைக்காக துவரம் பருப்பைச் சேர்த்து வேகவைத்தும் சாப்பிடலாம்.
முறிந்த எலும்புகளை இணைக்கும் இலை!
துத்தி இலைகளை அரைத்து, முறிவு கண்ட இடத்தில் கனமாகப் பூசி, துணியைச் சுற்றி, மூங்கில் தப்பைகளை வைத்து கட்டினால், முறிந்த எலும்புகள் கூடும். கால்நடைகள் கீழே விழுந்து, எலும்பு முறிவு ஏற்பட்டாலும், இதே முறையைக் கையாளலாம். விதையை லேசாக வறுத்து பொடி செய்து, கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து காலை, மாலை இருவேளைகளும் உண்டால், சர்க்கரை நோய் காரணமாக ஆறாத புண்கள், அழுகியத் தோல்கள் குணமாகும். பெரு வியாதி என்று பயத்தோடு பார்க்கப்படும் குஷ்ட நோயும் குறையும்.
உடல் வலி போகும்!
துத்தி இலையை நீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை முக்கி ஒத்தடம் கொடுத்தால், உடல் வலி நீங்கும். இந்த இலையை வதக்கியோ, பொடி செய்தோ அடிக்கடி உண்டு வந்தால், வாயு தொடர்பான நோய்கள் நீங்கும். துத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து அதனுடன் சமஅளவு சர்க்கரை சேர்த்து, கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி எடுத்து, பசும்பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால், 'நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய், ரத்த வாந்தி ஆகியவை குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம்.
விலையில்லாமல் வியாதிகளைக் குணமாக்கும் துத்தி, இனி, ஒவ்வொரு வீட்டிலும் வளர்த்துப் பயன்படுத்தலாம்!
-உண்மை இதழ்,16-31.8.16

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

பீட்ரூட் - நோய் தடுக்கும் பீட்ரூட்

பீட்ரூட்டில் இருக்கும் சத்துகள்
(100 கிராம் அளவில்)
புரதம் _ 1.7 கிராம்
கொழுப்பு  _ 01. கிராம்
தாது உப்புகள்  _ 0.8 கிராம்
நார்ச்சத்து  _ 0.9 கிராம்
கால்சியம் _ 200 மி.கி.
மெக்னீசியம்  _ 9 மி.கி.
பாஸ்பரஸ்  _ 55 மி.கி.
இரும்புச்சத்து  _ 0.4. மி.கி.
சோடியம்  _ 59.8 மி.கி.
பொட்டாசியம்  _  43 மி.கி.
காப்பர்  _ 0.20 மி.கி.
சல்பர்  _ 14 மி.கி.
தயாமின்  _ 0.04 மி.கி
ரைபோஃப்ளோவின்  _ 0.09 மி.கி.
நயாசின்  _ 0.4 மி.கி.
வைட்டமின்_சி  _ 88 மி.கி. 
பீட்ரூட்டில் இருக்கும் சத்துகளின் பயன்கள்:
¨    இரத்த சுத்தி செய்யும்.
¨    இதய நோய் வராமல் தடுக்கும்.
¨    உயர் ரத்த அழுத்தம் வராமலிருக்க உதவும்.
¨    மூப்பைத் தள்ளிப்போடும்.
¨    நோய் எதிர்ப்புத் திறனைக் கொடுக்கும்.
¨    அல்ஸைமர் எனும் மறதி நோய் வராமல் தடுக்கும்.
¨    எலும்புகள் பலப்பட உதவும்.
¨    ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க உதவும்.
¨    மாதவிடாய்க்கு முன் வரும் குழப்பம், எரிச்சல் போன்றவை வராமல் தடுக்கும். (Premenstrual Syndrome)
¨    தசைகள் பலப்பட உதவும்.
¨    நரம்புத் தளர்ச்சி வராமல் இருக்க உதவும். பீட்ரூட் நோய்வளித்தாக்க எதிர்க்காரணிகள் நிறைந்தது. இதை பச்சையாக சாப்பிடும்போது அதிக பலன் கிடைக்கும்.
¨    பீட்ரூட்டில் இல்லாத வைட்டமின்_ஏ அதன் இலைகளைக் கீரைபோல உண்ணும்போது கிடைக்கும்.
வாங்கும்போது தேர்ந்தெடுப்பது எப்படி?
¨    பசுமையாக இருப்பதை வாங்குவது நல்லது.
¨    நல்ல அடர்ந்த சிவப்பு நிறம் இருக்க வேண்டும்.
¨    வாடி வதங்கி இருப்பதைத் தவிர்த்தல் நலம்.
¨    மேலே கரும்புள்ளிகள் இல்லாததை தேர்ந்தெடுக்க வேண்டும்.
வாங்கியதை அன்றே உண்ணும்போது நோய் வளித்தாக்க எதிர்க்காரணிகள் அதிகம் இருக்கும். குளிர் சாதனப் பெட்டியில் வைத்து சில நாட்கள் கழித்து உபயோகிக்கும்போது ஓரளவு குறையலாம்.
பீட்ரூட்டைக் கொண்டு என்னென்ன செய்யலாம்?
¨    சூப்பாக செய்து தரலாம்.
¨    சட்னியை அரைக்கும்போது பீட்ரூட் சேர்த்தும் செய்யலாம்.
¨    துவையல் மிகவும் சுவையாக இருக்கும்.
¨    குழம்பு மிகவும் சுவையானது. ஆனால், நிறம் மட்டும் பார்க்க சிவப்பாக இருக்கும்.
¨    துருவியோ, சிறியதாக அரிந்தோ வதக்கல் கறி செய்யலாம்.
¨    அல்வா செய்வது மிக எளிது. சுவையும் நன்கு, எல்லோரும் விரும்பும் வண்ணம் இருக்கும்.

¨    இனிப்புப் பச்சடியும் செய்யலாம். பல விருந்துகளில் இப்பொழுது பரிமாறப்-படுகின்றது.
¨    இனிப்பு சாலட், பல காய்கறிகள் கலந்த சாலட் செய்து பார்த்தால் சுவை புரியும்.
¨    பீட்ரூட் கட்லெட், டிக்கி என விதவிதமாகச் செய்யலாம்.
¨    துருவிய பிறகு சப்பாத்தி மாவில் கலந்து கார சப்பாத்தி, குழந்தைகளுக்கு இனிப்பு சப்பாத்தி என்றும் தரலாம்.

¨    குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் பூரி, சப்பாத்தி, தோசை, பணியாரம் செய்ய கீரை, கேரட் போன்றவற்றை உபயோகப் படுத்துவதைப் போல பீட்ருட்டையும் உபயோகிக்கலாம்.
¨    நேரடியாக பலவிதமான காய்கறிகளைக் கலந்து விதவிதமான ‘மாக்டெயில்ஸ்’ எனப்படும் இயற்கைச் சாறுகளை செய்ய முடியும். அதன்மூலம் அதிக சத்துகளைப் பெற முடியும்.
¨    தயிர்ப் பச்சடியும் செய்யலாம்.
¨    பீட்ருட் ரசமும் சுவையாக இருக்கும்.
¨    மத்தியில் ஸ்டப்பிங்காக வைத்து ஸ்டப்டு சப்பாத்தி செய்யலாம்.
¨    இனிப்பு போளி செய்ய பூரணத்திற்கு பீட்ரூட்டும் உபயோகப்படுத்தலாம்.
-உண்மை இதழ்,1-15.8.16

சனி, 3 செப்டம்பர், 2016

அவுரி - நஞ்சு முறிக்கும் அவுரி

நீலி எனப்படும் குறுஞ்செடி வகையைச் சேர்ந்த அவுரி, பல மருத்துவப் பலன்களைக் கொண்டது. சிறந்த நஞ்சு நீக்கி. முற்காலத்தில் விவசாய நிலங்களில் அவுரியைப் பயிரிட்டு மண்ணில் இருக்கும் நச்சுகளை அகற்றுவார்கள். அவுரி இலையும் வேரும் பல்வேறு வகையில் பயன்படுபவை.

“உரிய லவுரித் துழைத்தான் ஒதுபதினெண்
அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் - தெரிவரிய
வாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்
சீதம் அகற்றும் தெரி

என அவுரியைப் பற்றி சொல்கிறது அகத்தியர் குணவாகடம்.

¨    பதினெட்டு வகையான நச்சுக்களை முறிக்கும் ஆற்றல் கொண்டது அவுரி. இதன் இலையைக் குடிநீரில் போட்டுக் குடித்துவந்தால், வாதத்தால் ஏற்படும் காய்ச்சல், காமாலை, மாந்தம், மூட்டுகளில் ஏற்படும் வாத நோய்கள் நீங்கும்.

¨    அவுரி இலை குடிநீரைத் தொடர்ந்து குடித்துவந்தாலோ, இலையை வேகவைத்து வதக்கிச் சாப்பிட்டுவந்தாலோ, உடல் பொன்னிறமாகும். வயிற்றில் இருக்கும் புழுக்கள் அழியும்.

¨    அவுரிக்கு மலத்தை இளகச் செய்யும் ஆற்றல் உள்ளதால், மலச்சிக்கல் போக்க சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து அவுரி குடிநீர் அருந்தி வந்தால், மாலைக்கண் நோய் நீங்கும்.

¨    பாம்புக்கடிக்கு முதலுதவியாக அவுரி இலையைப் பச்சையாக அரைத்து, கொட்டை பாக்கு அளவுக்கு பாம்பு கடிபட்ட நபரை உட்கொள்ளச் செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

¨    அவுரி இலை, அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகை நன்கு அரைத்து, சுண்டைக்காய் அளவு உருண்டை செய்து மூன்று முதல் அய்ந்து நாள்கள் வரை நாள்தோறும் காலை, மாலை ஓர் உருண்டை சாப்பிட்டு, உப்பில்லா பத்தியத்தைக் கடைப்பிடித்தால், நரம்புச் சிலந்தி நோய் குணமாகும். இதனுடன், இந்த மருந்து உருண்டையை நரம்பு சிலந்தி நோய் இருக்கும் இடத்தில் வைத்துக் கட்டுப்போட்டாலும் குணம் கிடைக்கும்.

¨    ஒரு கைப்பிடி அவுரி இலையை எடுத்து, சிறிது மிளகுப் பொடி சேர்த்து, 400 மி.லி. தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து 200 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி, தினமும் இருவேளை என ஒரு வாரம் குடித்துவர, ஒவ்வாமை மற்றும் தோல் நோய்கள் குணமாகும்.

¨    அவுரி இலையை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவுக்கு எடுத்து அதனைச் சுமார் 200 மி.லி. காய்ச்சிய வெள்ளாட்டுப் பாலில் கலக்கி, வடிகட்டி அதிகாலையில் மூன்று நாட்கள் குடித்துவர, மஞ்சள் காமாலை குணமாகும்.

¨    அவுரி வேரையும், யானை நெருஞ்சில் இலைகளையும் சம எடை எடுத்து, அரைத்து எலுமிச்சைப் பழம் அளவுக்கு மோரில் கலந்து காலைதோறும் 10 நாள்கள் சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.ஸீ
-உண்மை இதழ்,,1-15.7.16