புதன், 22 ஜூன், 2016

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் முட்டைகோஸ் சூப்

உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும்.
உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் முட்டைகோஸ் சூப்
தேவையான பொருள்கள் :

முட்டைகோஸ் - கால் கிலோ
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம்- அரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
மிளகு தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை :

*  கொத்தமல்லி தழை, முட்டைகோஸை நன்கு கழுவி சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்க பின் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

* இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* அதன்பின் அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

* நன்கு கொதித்ததும் அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து குடிக்க வேண்டும்.

மருத்துவக்குணங்கள் :

முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் அல்சர் குணமாகும். 

மேலும் உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.

குறிப்பு :

காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகினால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும்.
-மாலை மலர் ஜூன் 22, 2016

பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பை போக்கும் தனியா பத்திய குழம்பு

உடல் அலுப்பு, பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பு போன்ற எந்தப் பிரச்சனைகளை பத்தியக் குழம்பு நீக்கும். தனியா பத்திய குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பை போக்கும் தனியா பத்திய குழம்பு
தேவையான பொருட்கள் :
 
தனியா (கொத்தமல்லி விதை) - 3 ஸ்பூன், 
கடலைப் பருப்பு - ஒரு ஸ்பூன், 
உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்,  
கடுகு - ஒரு ஸ்பூன், 
எள்ளு - ஒரு ஸ்பூன்,  
மிளகு - ஒரு ஸ்பூன்,  
நெய்  - ஒரு ஸ்பூன், 
மிளகாய் வற்றல் - 2, 
புளி - கோலிகுண்டு அளவு, 
பெருங்காயம், மஞ்சள் தூள் - சிறிதளவு, 
கறிவேப்பிலை - ஒரு ஆர்க், 
எண்ணெய் - 2 ஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு.

செய்முறை : 

* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தனியா, கடலைப் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு இவற்றைத் தனித்தனியே வறுத்துப் ஆற வைத்து பொடித்துக்கொள்ளவும். 

* புளியை திக்காகக் கரைத்து கொள்ளவும். 

* அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கரைத்த புளியை ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், அரைத்தப் பொடியைப் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 

* எல்லாம் கொதித்து வாசனை வந்து கெட்டியானதும் இறக்கி விடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, எள், கறிவேப்பிலை தாளித்துக் குழம்பில் கொட்டவும்.

* இதைச் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். இதை மண் சட்டியில் செய்தால் இன்னும் சுவை கூடும். மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.  

-மாலை மலர் ஜூன் 22, 2016

வாய்ப்புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக் கீரை மண்டி

வாய்ப்புண் இருப்பவர்கள் இந்த அடிக்கடி மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம். இப்போது மணத்தக்காளிக் கீரை மண்டி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

புதன், 8 ஜூன், 2016

வெந்தயம் -ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வெந்தயம்


வெந்தயம் தமிழில் சிறப்பான இடத்தை பெற் றுள்ளது. வேக வைக்கப்பட்ட அயம் என்ற பொரு ளில் வேக வைக்கப் பட்ட இரும்பு என்று இது அழைக்கப் படுகிறது. இரும்பு சத்து மனித உட லுக்கு தேவையான ஒன்றாகும். அந்த இரும்பு சத்தை வெந்தயம் நமக்கு அளிக்கிறது.
இதனால் மனித உடலை இரும்பு போல் ஆக்க கூடிய தன்மை வெந்தயத்திற்கு உள்ளது. அதே போல் வெந்தயத்தின் கீரையும் நமக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. ட்ரேயோனெல்லா ஓயனம் கிரிக்கம் என்ற தாவர பெயரை கொண்டிருக்கும் வெந்தயம், ட்ரைகோ நெல்லின் என்ற மருத்துவ பொருளை கொண்டுள்ளது.
வெந்தயத்தை தினமும் கால் ஸ்பூன் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்பு மற்றும் கால்சியம் சத்து கிடைக்கிறது. வெந்தய கீரையை பயன்படுத்தி இருமல், வயிற்று வலி, மூலம் போன்றவற்றை குணப்படுத்தக் கூடிய மருந்தை தயார் செய்யலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் வெந்தய கீரை, தேன். வெந்தய கீரையின் இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பிடி அளவு எடுத்து இதை நீர் விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர் இதை வடிகட்டி கீரையை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் தேன் சேர்த்து தினமும் எடுத்து வருவதால், உடலில் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலி, காரத்தால் ஏற்படும் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. அதே போல் மூலத்திற்கும் வெந்தயம் மருந்தாக விளங்குகிறது.
இது நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற வற்றையும் வெந்தயம் குறைக்கிறது.
வெந்தய கீரையுடன் அத்தி பழம், உலர் திராட்சையை சிறிது சேர்த்து தேநீராக்கி சாப்பிடுவதால் மார்பு தொடர்பான பிரச்னைகள் விலகும். குறிப்பாக மாரடைப்பு, மூச்சு முட்டுதல், கார்டியாக் ஆஸ்துமா ஆகியவற்றிற்கு இது மருந்தாக பயன்படுகிறது.
செரிமாண உறுப்புகளை சரி செய்து செரிமானத்தை சீராக்குகிறது. இதனால் வயிற்றில் கழிவுகள் சேராமல் சீராவதால், இரத்த ஓட்டம் விருத்தியடைகிறது. இதய நோய் இல்லாமல் போகிறது. இதய நோய் உள்ளவர்கள் வலி ஏற்படும் போது இந்த கஷாயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் வலி குறைகிறது. இவ்வாறு வெந்தயம் நமது உடலுக்கு பல்வேறு பலன்களை அளிக்கிறது.
விடுதலை,28.3.16

விளக்கெண்ணெயின் மருத்துவ குணங்கள்


நமது பாரம்பரிய மருத்துவ நோக்கில், குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத் தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ நின்று பணி யாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு உறங்குவர்.
சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலியைப் போக்க அடி வயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவுவர். கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் என்னும் நம்பிக்கையில் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றுவது உண்டு. ஆனால், கண் மருத்துவர்கள் இது தவறு எனக் குறிப்பிடுகின்றனர்.
சாதாரண மலச்சிக்கலுக்கு இரவில் உறங்கப்போகும் முன்னர் நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி உண்பர். குடல் சுத்திகரிப்புக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிப்பர்.
இதே நோக்கத்தில் சிறு குழந்தைகளுக்கு வலுக்கட்டாய மாக விளக்கெண்ணெய் புகட்டுவது பண்டைய வழக்கம். குடலில் உள்ள சளி போன்ற படலத்தையும் விளக்கெண்ணெய் வெளியேற்றிவிடுவதாகக் கூறி, பேதி மருந்தாக விளக்கெண் ணெய் கொடுப்பதை ஆங்கில மருத்துவர்கள் புறக்கணிக் கின்றனர்.
புதுச்செருப்பு கடிக்காமலிருக்கச் செருப்பின் உட் பகுதி யில் தடவும் எண்ணெயில் விளக்கெண்ணெயே சிறந்ததாகக் கருதப்படுகிறது.
கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்குவிப்பதால் அனைத்து கேசத் தைலங்களிலும் முதலிடம் வகிக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவமுடிகள் வளரவும், கண்களின் மேல் பூச்சாக பயன்படுத்தினால் கண்களுக்கு குளிர்ச்சியூட்டி, தூக்கத்தை வரவழைக்கவும் வல்லது.
விளக்கெண்ணெயுடன் ஆளி விதை மாவைக் கலந்து சிறிது சூடு செய்து, உடலில் தோன்றும் கட்டிகளுக்குப் போட அவை உடைந்து ஆறிவிடும்.
விளக்கெண்ணெய் உடல், கண், மூக்கு, செவி, வாய், இவைகளிலுண்டாகின்ற எரிச்சலை நீக்கும். உடலைப் பொன்னிறமாக்கும். குழந்தைகளைத் தாய் போல் வளர்க்கும். குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் வயிறு கழியக் கெடுப்பதற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதை கைக்குழந்தை, கிழ வயதுடையவர், சூல் கொண்டவர், பிள்ளை பெற்றவர், சீதபேதியால் வருந்துபவர்களுக்கும் அச்சமின்றிக் கெடுக்கலாம்.
பசியின்மை, வயிற்றுவலி இவற்றால் துன்புறுவோருக்கும் இதைத் தரலாம்.
குளிர் காலத்தில் காலில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெயை சூடாக்கி, அதில் மஞ்சள் பொடி சேர்த்து, அந்த விழுதை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி வர சில நாட்களில் சரியாகும்.
உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும்.
கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் 2 பங்கு, தேன் ஒரு பங்கு சேர்த்து உட்கொள்ள கொடுக்க வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும்.
விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் நனைத்து விளக்கில் காட்டி சுட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர, தலைவலி, சளி முதலியன குணமாகும்.
உடலில் ஏதேனும் ஒவ்வாமை அல்லது பூச்சிக்கடியினால் ஏற்படும் தோல் அரிப்புக்கு விளக்கெண்ணையை குடிப்பது அந்த காலத்தில் இருந்த பழக்கமாகும்.


கொழுப்பு சத்தை குறைக்கும் சோம்பு

கொழுப்பு சத்தை குறைக்க கூடியதும், மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டதும், ஞாபக சக்தியை அதிகரிக்கவல்லதும், கண்களை பாதிக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியதும், நச்சுக்களை வெளியேற்ற கூடியதுமான, அத்தியாவசியமான உணவுப்பொருளாக விளங்கி வரும் சோம்பு சுவையும் மணமும் கொடுக்க கூடியது.
இதற்கு பெருஞ்சீரகம் என்ற பெயரும் உண்டு. பல்வேறு நன்மைகளை கொண்ட சோம்பு, இதய நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று கோளாறுகளை சரிசெய்கிறது. கண்களுக்கு பலத்தை தருகிறது. தோலுக்கு நிறத்தை கொடுக்கிறது.
சோம்புவை பயன்படுத்தி ரத்த அழுத்தம், கொழுப்பு சத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: சோம்பு பொடி, மஞ்சள் பொடி, தேன். அரை ஸ்பூன் சோம்பு பொடி, கால் ஸ்பூன் மஞ்சள் பொடியுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.  இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர கொழுப்புச் சத்து, ரத்த அழுத்தம் குறையும். மலச்சிக்கலை போக்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. சோம்பு மூளை நரம்புகளுக்கு பலம் கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
-விடுதலை,28.3.16

கற்பூரவல்லி- சிறுநீரக கற்களை கரைக்கும் கற்பூரவல்லி


அழகுக்காக வளர்க்கப்படும் செடி கற்பூரவல்லி. நறுமணத் தை தரக்கூடிய இதற்கு ஓமவல்லி என்ற பெய ரும் உண்டு. தொட்டால் மணம் தரக்கூடியது. சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. சளியை கரைத்து வெளிதள்ள கூடியது. உள் உறுப்புகளை தூண்ட கூடியது. காக்கா வலிப்புக்கு மருந்தாகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.
ஒரு கிளையை மட்டும் எடுத்து தொட்டியில் நட்டு வைத்தால் அது நன்றாக வளரும். கற்பூரவல்லியை பயன்படுத்தி சைனஸ், நெஞ்சக சளியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். கற்பூரவல்லி இலை சாறு எடுத்துக்கொள்ளவும். பெரிய வர்கள் என்றால் 2 ஸ்பூன், குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர சளி குணமாகும். குழந்தைகளுக்கு மாந்தத்தை போக்கும். இருமல் இல்லாமல் போகும்.
பசியை தூண்ட கூடியது. மூக்கடைப்பு, தலைவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், அரை ஸ்பூன் கற்பூரவல்லி இலை பசை, சிறிது சர்க்கரை சேர்த்து லேசாக சூடு செய்தபின் மூக்கு, நெற்றியில் பத்தாக போடும் போது மூக்கடைப்பு, தலைவலி சரியாகும். தலைபாரம், சைனஸ் குணமாகும்.
இதயம், உணவுப்பாதை, சிறுநீரக பாதைக்கு பலம் கொடுக்கும். அக்கி, அம்மை கொப்புளங்களுக்கான மருந்து தயாரிக்கலாம். கற்பூரவல்லி இலை சாறு அல்லது பசையை  கொப்புளங்களுக்கு மேல் பூசினால் அவைகள் சரியாகும். கற்பூரவல்லி இலையை பயன்படுத்தி வெள்ளைபோக்கு, சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம்.
ஒருவேளைக்கான தேனீர் தயாரிக்க 3 இலைகளை எடுத்து துண்டுகளாக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுநீர் பையில் தங்கி யிருக்கும் கற்களை கரைத்து வெளித்தள்ளும். வெள்ளைப் படுதல் சரியாகும். கற்பூரவல்லியை பயன்படுத்தி குளிர் காய்ச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
கற்பூரவல்லி வீட்டில் இருக்க வேண்டிய உன்னதமான மூலிகை. இதன் மணம் கொசுக்கள், பூச்சிகளை விரட்ட கூடியது. கடலை மாவுடன் கற்பூரவல்லியை பஜ்ஜியாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும்போது இருமல், சளி, காய்ச்சல் குணமாகும்.
கற்பூரவல்லி செரிமானத்தை தூண்டக் கூடியது. வலியை குறைக்கும். புண்களை ஆற்றும். மருக்களை கரைக்கும் தன்மை கொண்டது. ஆண்கள் ஓரிரு இலைகளை சாப்பிடு வதால் கற்கள் கரைந்து போகும். கற்பூரவல்லி சாற்றை மேலே பூசுவதால் அக்கி கொப்புளங்கள் வற்றும். 
-விடுதலை,28.3.16

ஞாயிறு, 5 ஜூன், 2016

ஹீமோகுளோபினை அதிகரிக்க எளிய முறை


உடலில் அதிகமான அசதி, எந்த செயலை செய்ய வேண்டு மானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை, உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்து போய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே என்று எண்ணுவது, தூக்கமின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், ரத்தசோகை இருப்பதை அறியலாம்.
உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது, அந்த அணுக்கள் குறைந்த ரத்தம், உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடிவதில்லை. உடல் களைப்பு அடைகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, உண்ணும் உணவில் இருந்து தான், எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிலிருந்து, வெளியேற்றி விடுகிறது. அதிக மான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளி விடுகிறது.
ஆண்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின், 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு, 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராமுக்கு கீழே குறையும்போது, ரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு, சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுக்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது, ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது, நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்சிஜனை, ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை, கார்பன்டை ஆக்ஸைடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது.
பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி, உடலுக்கு சக்தியூட்டுகிறது. நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை, ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவற்றை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.  ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு, எளிய வழி இருக்கிறது.
நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி, ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை, 6 மணிக்கு போட்டு, இரவு முழுவதும் ஊற விட வேண்டும். காலையில், 6 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மதியம், 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை, 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்று விட்டு, மீதியுள்ள நீரை குடியுங்கள்.
இதே மாதிரி, தினசரி ஒரு திராட்சை வீதம், ஒரு வேளைக்கு அதிகப்படுத்தி, ஒன்பது நாட்கள் வரை சாப்பிட வேண்டும். பின், ரத்தத்தை பரிசோதித்தால் மாற்றம் இருப்பதை அறியலாம்.
-விடுதலை,22.2.16