திங்கள், 31 ஆகஸ்ட், 2015

காபி - சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவும் காபி


புத்துணர்ச்சிக்காக குடிக்கப்படும் காபி மருந்தாகவும் பயன்படுகிறது. சிறுநீர் கற்களை வெளியேற்றும் தன்மை கொண்டது காபி. வலி நிவாரணியாக பயன்படும் காபி, ஆஸ்துமாவை தடுக்கிறது. காபியின் பல்வேறு சிறப்புகள் குறித்து இன்று நாம் பார்ப்போம்:
காபியின் தாவரப் பெயர் காபி அராபிகா. அரபியன் காபி என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது. காபியில், காஃபின் என்ற வேதிப்பொருள் மிகுதியாக உள்ளது. இது எத்தியோபியாவை தாயகமாக கொண்டு வளர்ந்த தாவர இனம். காபி குடிப்பதால் வயிற்றில் புண், புற்றுநோய் வரும் என்ற தவறான அபிப்ராயம் உள்ளது.
காபி குடிப்பதற்கும் கேன்சருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், காபி புற்றுநோயை தடுக்க கூடியது. குறிப்பாக, ஆசனவாயில் தோன்ற கூடிய கேன்சர் வராமல் தடுக்கிறது என கூறியுள்ளது.நாம் புத்துணர்ச்சிக்காக குடிக்கும் காபி, கிட்னி கல்லுக்கு மருந்தாகிறது. ஒரு ஸ்பூன் அளவுக்கு காபி பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் சிறிதளவு வெட்டிவேர் சேர்க்கவும். பின்னர், தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் தயாரித்து பருகலாம். இது சிறுநீரை பெருக்குகிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தணிக்கிறது. சிறுநீரக கற்களை வெளியேற்றுகிறது.
வலி நிவாரணியாக காபி பயன்படுகிறது. காபி கொட்டை அமில தன்மை கொண்டதால் புற்றுநோயை தடுக்கும். ஆஸ்துமாவுக்கு மருந்தாக அமைகிறது. காபி பொடியை கொண்டு பல்பொடி தயாரிக்கலாம்.
காபி பொடியுடன் ஆப்ப சோடா மற்றும் உப்பு சேர்த்து பல்பொடியாக உபயோகிக்கலாம். அவ்வாறு செய்தால் பற்களில் ஏற்படும் வலி, வீக்கம் சரியாகும். பல் சொத்தையாவது தடுக்கப்படும். பற்கள் ஆரோக்கியம் அடைகிறது.
காபி கொட்டையில் காஃபின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் வலி நிவாரணியாக பயன்படுகிறது. புத்துணர்வு தரக்கூடிய காபியை அடிக்கடி குடிப்பவர்களுக்கு ஆஸ்துமா வருவது குறைவு என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய் வந்த பின்னும் அதை தணிக்க காபி பயன்படுகிறது. காபி மேல் பூச்சாக பயன்படுகிறது. கட்டிகளின் மேல் வைத்தால் வலி போகும். ஒற்றைத் தலைவலியை காபி குறைக்கிறது. காபி நல்லது என்றாலும் அதிகமாக குடிக்க கூடாது. அதிகளவில் காபி குடித்தால் அது தலைவலியை உண்டு பண்ணும்.
ஆத்ரட்டிஸ் உள்ளவர்களுக்கு உள் மற்றும் வெளி மருந்தாக காபி பயன்படுகிறது. அரை ஸ்பூன் காபி பொடியை எடுத்து கொள்ளவும். அதில் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். இது வலியை குறைக்க கூடியது.
காபி பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து வலியும், வீக்கமும் உள்ள இடத்தில் பூசினால் வலியும் வீக்கமும் குறையும்.
-விடுதலை,24.8.15