வெள்ளி, 27 நவம்பர், 2015

கழற்சிக்காய் - மாதவிலக்கை சீர்படுத்தும் கழற்சிக்காய்


காய்ச்சலை குறைக்க கூடியதும், கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டதும், மாதவிலக்கை சீர்படுத்த வல்லதும், கர்ப்பபை கோளாறுகளை குணப்படுத்த கூடியதுமான மருத்துவ வகைகளில் ஒன்று கழற்சிக்காய். கழற்சிக்காய் கடினமான ஓட்டை உடையது. கழற்சி கொடியில் கூர்மையான முட்கள் இருக்கும்.
காடுகளில் வளரக் கூடியது. வைரத்தை போன்ற கடுமையான விதையான இது காய்ச்சலை குறைக்க கூடியது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. வீக்கத்தை குறைக்கும் கழற்சிக் காயானது, சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ரத்த போக்கை நிறுத்தக்கூடியது. மலேரியா காய்ச்சலை போக்கும்.கழற்சிக்காயை பயன்படுத்தி கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். கழற்சிக்காயை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.
கால் ஸ்பூன் அளவுக்கு பொடியுடன், சிறிது பெருங்காயம், அரை கப் மோர், சிறிது உப்பு சேர்த்து கலந்து வெறும் வயிற்றில், 48 நாட்கள் குடித்துவர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். ஈரல் பலப்படும். வயிற்று புண்கள் ஆறும். வயிற்று வலி குணமாகும். வாயுவை வெளித்தள்ளும். விரைவாதம் குணமாகும். கழுத்து, கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். தைராய்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். கழற்சிக்காயை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம். 4 பங்கு அளவுக்கு கழற்சிக்காய் பொடி, ஒரு பங்கு மிளகுப் பொடி ஆகியவற்றை கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தினமும் மூன்று விரல்களில் எடுக்கக்கூடிய அளவுள்ள பொடியை, 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகும். வயிற்று வலி குணமாகும்.
கழற்சிக்காய் குழந்தையின்மைக்கு மருந்தாகிறது. கர்ப்பபை கோளாறுகளை சரிசெய்ய கூடியது. வயிறு, இடுப்பு வலியை போக்க கூடியது. எந்தவகையான காய்ச்சலையும் குணப்படுத்தும் தன்மை உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
யானைக்கால் நோயை குணப்படுத்தும். கால்களில் நரம்புகள் தடித்து இருக்கும் நிலையை போக்கும். உடலில் உள்ள கொழுப்பு கட்டிகளை கரைக்கும். கழற்சிக்காயை பயன்படுத்தி வீக்கத்துக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண் ணெய்யுடன் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்து கொள்ளவும். இதை தடவுவதன் மூலம் மூட்டு வீக்கம், தொண்டை வீக்கம், விரைவாதம் சரியாகும். எந்தவொரு வீக்கத்தையும் போக்கும். வயிற்று வலியை குணமாக்கும் தன்மை கொண்டது கழற்சிக்காய். நெறிகட்டை சரிசெய்யும். நெறிக்கட்டால் வரும் காய்ச்சலை போக்கும். கருச்சிதைவு ஏற்படும் என்பதால் கர்ப்பிணிகள் கழற்சிக்காயை எடுத்துக் கொள்ள கூடாது. கழற்சிக்காய் இலையை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலை களை சுத்தப்படுத்தி எடுத்துக்கொள்ளவும். முட்கள் இருக்கும் என்பதால் இலையை பாதுகாப்பாக சுத்தப்படுத்துவது அவசியம். இலைகளை, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் வதக்க வேண்டும். இதை வீக்கம் இருக்கும் இடத்தில்  கட்டி வைக்கவும். வீக்கம், வலி குறையும். மூட்டு வலி சரியாகும். கழற்சிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இது மலேரியா காய்ச்சல், மனபிரமைக்கு மருந்தாகிறது.
-விடுதலை,23.11.15

1 கருத்து: