வெள்ளி, 27 நவம்பர், 2015

கழற்சிக்காய் - மாதவிலக்கை சீர்படுத்தும் கழற்சிக்காய்


காய்ச்சலை குறைக்க கூடியதும், கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டதும், மாதவிலக்கை சீர்படுத்த வல்லதும், கர்ப்பபை கோளாறுகளை குணப்படுத்த கூடியதுமான மருத்துவ வகைகளில் ஒன்று கழற்சிக்காய். கழற்சிக்காய் கடினமான ஓட்டை உடையது. கழற்சி கொடியில் கூர்மையான முட்கள் இருக்கும்.
காடுகளில் வளரக் கூடியது. வைரத்தை போன்ற கடுமையான விதையான இது காய்ச்சலை குறைக்க கூடியது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. வீக்கத்தை குறைக்கும் கழற்சிக் காயானது, சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ரத்த போக்கை நிறுத்தக்கூடியது. மலேரியா காய்ச்சலை போக்கும்.கழற்சிக்காயை பயன்படுத்தி கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். கழற்சிக்காயை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.
கால் ஸ்பூன் அளவுக்கு பொடியுடன், சிறிது பெருங்காயம், அரை கப் மோர், சிறிது உப்பு சேர்த்து கலந்து வெறும் வயிற்றில், 48 நாட்கள் குடித்துவர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். ஈரல் பலப்படும். வயிற்று புண்கள் ஆறும். வயிற்று வலி குணமாகும். வாயுவை வெளித்தள்ளும். விரைவாதம் குணமாகும். கழுத்து, கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். தைராய்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். கழற்சிக்காயை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம். 4 பங்கு அளவுக்கு கழற்சிக்காய் பொடி, ஒரு பங்கு மிளகுப் பொடி ஆகியவற்றை கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தினமும் மூன்று விரல்களில் எடுக்கக்கூடிய அளவுள்ள பொடியை, 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகும். வயிற்று வலி குணமாகும்.
கழற்சிக்காய் குழந்தையின்மைக்கு மருந்தாகிறது. கர்ப்பபை கோளாறுகளை சரிசெய்ய கூடியது. வயிறு, இடுப்பு வலியை போக்க கூடியது. எந்தவகையான காய்ச்சலையும் குணப்படுத்தும் தன்மை உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
யானைக்கால் நோயை குணப்படுத்தும். கால்களில் நரம்புகள் தடித்து இருக்கும் நிலையை போக்கும். உடலில் உள்ள கொழுப்பு கட்டிகளை கரைக்கும். கழற்சிக்காயை பயன்படுத்தி வீக்கத்துக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண் ணெய்யுடன் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்து கொள்ளவும். இதை தடவுவதன் மூலம் மூட்டு வீக்கம், தொண்டை வீக்கம், விரைவாதம் சரியாகும். எந்தவொரு வீக்கத்தையும் போக்கும். வயிற்று வலியை குணமாக்கும் தன்மை கொண்டது கழற்சிக்காய். நெறிகட்டை சரிசெய்யும். நெறிக்கட்டால் வரும் காய்ச்சலை போக்கும். கருச்சிதைவு ஏற்படும் என்பதால் கர்ப்பிணிகள் கழற்சிக்காயை எடுத்துக் கொள்ள கூடாது. கழற்சிக்காய் இலையை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலை களை சுத்தப்படுத்தி எடுத்துக்கொள்ளவும். முட்கள் இருக்கும் என்பதால் இலையை பாதுகாப்பாக சுத்தப்படுத்துவது அவசியம். இலைகளை, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் வதக்க வேண்டும். இதை வீக்கம் இருக்கும் இடத்தில்  கட்டி வைக்கவும். வீக்கம், வலி குறையும். மூட்டு வலி சரியாகும். கழற்சிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இது மலேரியா காய்ச்சல், மனபிரமைக்கு மருந்தாகிறது.
-விடுதலை,23.11.15

கொழுப்பு குறைய தண்ணீர்க் கீரை


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் அன்றாடம் கீரையை சேர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது. கீரையின் பயன்களை நாம் அறிந்திருந்தாலும் அதை உணவில் சேர்த்துக் கொள்ள தயங்குகிறோம். இதன் காரணமாக சத்துக் குறைபாட்டால் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறோம்.. தண்ணீர் கீரை ஆரோக்கியத்தை தருவதோடு தோல் முடி பிரச்சனைகளை சரி செய்கிறது. பச்சை காய்கறிகளை சமைத்து உண்ணும் நாம் தண்ணீர்க் கீரையின் பயன்பாட்டை அறிந்துகொள்வோம். தாதுசத்து அதிகமுள்ள தண்ணீர் கீரை மிகச்சிறந்த உணவாகும். கால்சியம், இரும்புசத்து உள்ளிட்ட சத்துக்கள் இக்கீரையில் உள்ளது. உடலில் கொழுப்பு அதிகமுள்ளவர்கள் தண்ணீர்க் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் கொழுப்பு குறையும். உடல் எடையை கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பதில் இக்கீரை மகத்தான பங்காற்றுகிறது. இக்கீரையை சமைத்தோ, சூப் செய்தோ உணவாக பயன்படுத்தலாம்.
மஞ்சள் காமாலை, கல்லீரல் பிரச்சினைகளுக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் தண்ணீர் கீரை பயன்படுத்தப் படுகிறது. இரத்த சோகையை அடியோடு விரட்டியடிக்கும் இக்கீரையை கர்ப்பிணிபெண்கள் உணவாக உட்கொள்வதன் மூலம் ரத்த அணுக்கள் அதிகரித்து ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும். குடல் புழுக்கள், வயிறு பிரச்சனைக்கு பேதி மருந்தாக தண்ணீர் கீரை பயன்படுகிறது.
-விடுதலை,28.9.15

திங்கள், 16 நவம்பர், 2015

சாத்துக்குடி - உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும்உடலுக்கு பலத்தையும், புத்துணர்வையும் கொடுக்க கூடியதும், பசியின்மை, குமட்டலுக்கு மருந்தாக விளங்க கூடிய சாத்துக்குடியை பற்றி இன்று நாம் பார்ப்போம். சாத்துக்குடியில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. குறைவான எரிசக்தி கொண்டதால், உடல் எடை கூடுவதை தடுக்கிறது. உடலுக்கு பலத்தை கொடுக்க கூடியது. சாத்துக்குடியில் மினரல், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.  பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரக கோளாறுக்கு மருந்தாகிறது சாத்துக்குடி. புத்துணர்வை தரக்கூடியது. ஈறுகளில் வீக்கம், பற்கள் ஆடுவது, வாய்ப்புண் வெடிப்புக்கு அருமையான மருந்து சாத்துக்குடி. சோர்வாக இருக்கும்போது சாத்துக்குடி சாறு குடிப்பது நல்லது. சாத்துக்குடியை பயன்படுத்தி பசியின்மை, வாந்தி, குமட்டலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு டம்ளர் நீரில் இஞ்சி துண்டுகளை தட்டி போடவும். அதனுடன் சாத்துக்குடி சுளைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி எடுத்து தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது வயிற்று புண்களை அகற்றும். செரிமானத்தை சீர்படுத்தும். பசியை தூண்டும். வாந்தியை தடுக்கும். ருசியின்மையை போக்கும். வயிற்று வலி குணமாகும்.மருத்துவமனைக்கு சென்று நோயாளியை பார்க்கும்போது சாத்துக்குடி வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது. காய்ச்சல், அம்மை, பேதி, சளி, இருமல் என எந்த நோயாக இருந்தாலும் நோயாளிக்கு நல்ல பலத்தை தரக்கூடியது சாத்துக்குடி. வைட்டமின் சி அதிகம் உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் தருவதுடன் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடனடி புத்துணர்வை கொடுக்க கூடியது சாத்துக்குடி.
சாத்துக்குடி சாறு பயன்படுத்தி பல் வலி, ஈறுகளில் ரத்த கசிவுக்கான மருந்து தயாரிக்கலாம். சாத்துக்குடி சாறில் நீர்விட்டு, அதனுடன் உப்பு சேர்த்து கலக்கவும். ஈறுகளில் வைக்கும்போது ரத்தகசிவு சரியாகும். சாற்றில் நீர்விட்டு வாய் கொப்பளிக்கலாம். இவ்வாறு செய்தால் வாயில் துர்நாற்றம் தரும் கிருமிகள் வெளியேறும். ஈறு வீக்கம் தணியும். பற்களுக்கு பலம் ஏற்படும்.  சாத்துக்குடி தோலை பயன்படுத்தி சளி, இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தண்ணீர் விடாமல் பொடித்த ஒரு ஸ்பூன் சாத்துக்குடி தோல் எடுத்துக் கொள்ளவும். அதில், 5 மிளகு தட்டி போடவும். கால் ஸ்பூன் சீரகம், இரு சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு 2 சிட்டிகை சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதால், சளி கரைந்து வெளியேறும். பித்தத்தை சமப்படுத்தும். இருமல் இல்லாமல் போகும். வயிற்றுகோளாறு சரியாகும். பசியை தூண்டும். வைரஸ் காய்ச்சலுக்கு இது நல்ல மருந்து.சாத்துக்குடி சாறுடன் தண்ணீர் சேர்த்து கூந்தலில் தேய்த்து குளிப்பதனால் தலைமுடிக்கு டானிக்காகிறது. தலையில் ஏற்படும் பொடுகை போக்கும். தலைமுடி உடையாமல் வளரும்.
சாத்துக்குடியை இரண்டாக வெட்டி தோலில் தடவுவதால், முகத்திலுள்ள கரும்புள்ளி சரியாகும். கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் மறையும். கழுத்து, கைகளில் உள்ள கருமை மாறும். நோயாளிக்கு ஊட்டசத்தாக விளங்கும் சாத்துக்குடி உற்சாகத்தை தரக்கூடியது. சாத்துக்குடி சாறு சாப்பிட்டுவர மூட்டுவாதம், எலும்பு பலவீனம் ஏற்படாது.
-விடுதலை,28.9.15

ஞாயிறு, 15 நவம்பர், 2015

வெள்ளைப் பூண்டு

வெள்ளைப் பூண்டு


  • பூண்டு செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளைப்பூண்டு. ஆலியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைப்  பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சட்டைவம். றீ வெள்ளைப் பூண்டில் மரபுரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்புப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 கிராமில் 5346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்புப்பொருட்கள் உள்ளன.  றீ தயோ சல்பினேட் எனும் உயிர்ப் பொருள் பூண்டு வகையில் உள்ளது. இது பிற உயிர்  மூலக்கூறுகளுடன் இணைந்து ஆலிசின் எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும். றீ கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உற்பத்தியை தடுக்கும் ஆற்றல் ஆலிசின் மூலக்கூறுகளுக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. றீ ரத்தத் தட்டுக்கள் உறைந்துவிடாமல் பாதுகாப்பதிலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் ஆலிசின் உதவுவதாக தெரியவந்துள்ளது.  ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும், உருவான ரத்தக்கட்டிகளை நீக்குவதிலும் பங்கெடுக்கிறது. இச்செயலால் கரோனரி தமனி பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதய பாதிப்புகள், முடக்குவாதம், பி.வி.டி. போன்ற வியாதிகள் ஏற்படுவது  தடுக்கப்படுகிறது..
  • இரப்பைப் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. றீ பாக்டீரியா, வைரஸ்  மற்றும் பூஞ்சை போன்ற நோய்த்தொற்று நுண்கிருமிகளை ஒடுக்கும் ஆற்றலுடைய நோய் எதிர்ப்புப்பொருட்கள் வெள்ளைப் பூண்டில் உள்ளது. ஆலிசின் சிறந்த நோய் எதிர்ப்புப் பொருளாகும். றீ பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற அத்தியாவசிய  தாது உப்புக்கள் உள்ளன. செலீனி யம் இதயத்திற்கு ஆரோக்கியம் வழங்கும் தாதுவாகும். நோய் எதிர் நொதிகள் செயல்படசிறந்த துணைக்  காரணியாகவும் இது செயல்படும். மாங்கனீசு, நொதிகளின் துணைக் காரணியாகவும், சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியில் இரும்புத் தாது  பங்கு பெறுகிறது.    _ -தில்லைச்சுடர் செப். 2013
-விடுதலை

கொழுப்பு குறைய பூண்டின் பங்கு

பூண்டில் பல சத்துப்பொருட்கள் இருந்தாலும், அலிஸின்(Allicin)என்று சொல்லக்கூடிய ஒரு முக்கியமான பொருள் இருக்கிறது. இது பாக்டீரியாக் கிருமி எதிர்ப்பு, வைரஸ் கிருமி எதிர்ப்பு. பூஞ்சை நோய்க் கிருமி எதிர்ப்பு சக்திகளைக் கொண்டதாகும்.
உடலிலுள்ள நச்சுப் பொருட்களை அழித்து வெளியேற்றும் சக்தியும் இந்த அலிஸினுக்கு உண்டு. பூண்டில் இயற்கையாகவே உள்ள அஜோன்(Ajoene) என்கிற ரசாயனப் பொருள், உடலில் ஏற்படும் சில தோல் நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது.

பூண்டிலுள்ள அலிஸின் பொருள், நம் உடலுக்கு பலவகைகளில் உதவி புரிகிறது. உடலில் ரத்த அழுத்தம் (High Blood Pressure) அதிகமாவதற்கு ஆஞ்சியோடென்சின்_-2 என்கிற புரதப்பொருள் ஒரு காரணம். பூண்டிலுள்ள அலிஸின் ரத்த அழுத்தத்தைக் கூட்டும் ஆஞ்சியோடென்சின்-_2 என்கிற பொருளை வேலை செய்ய விடாமல் தடுத்துவிடும். இதனால் ரத்த அழுத்தம் சீராகிவிடும். இதுபோக, பூண்டிலுள்ள பாலி சல்பைடு என்கிற திடப்பொருள் நமது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களால், ஹைட்ரஜன் சல்பைடு என்கிற காற்றுப் பொருளாக மாற்றப்படுகிறது. கேஸ் (Gas) வடிவில் இருக்கும் இந்த ஹைட்ரஜன் சல்பைடு ரத்தக்குழாய்கள் விரிவடைய உதவி செய்து, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பூண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்குழாய்களின் சுருங்கிவிரியும்தன்மை பாதிக்காது. இளம் வயதில் இருப்பதுபோல் அது முதுமையிலும் இருக்கும். பூண்டிலுள்ள கந்தகப்பொருள், ரத்தக்குழாய்கள் அடைபட்டுப்-போவதைத் தடுக்கிறது. அதோடு, ரத்தக்குழாய்கள் கடினமாவதையும் தடுக்கிறது. பூண்டிலுள்ள அஜோன் பொருள் ரத்தக் குழாய்களுக்குள் கொழுப்பு உருண்டைகள் உருவாவதைத் தடுக்கும். இதனால் ரத்தக் குழாய்களுக்குள் அடைப்பு ஏற்படாமல் ரத்த ஒட்டம் சீராக நடைபெறும். கொழுப்புசெல்கள் (Fat Cells) உடலில் உருவாவதையும், கொழுப்பு செல்கள் உடலின் எல்லா இடங்களிலும் படிவதையும், பூண்டிலுள்ள கந்தகப் பொருள் கட்டுப்படுத்தும்.
ரத்தத்தில் இரும்புச்சத்து குறைந்து விடுவதைத்தான் நாம் அனிமியா என்று சொல்கிறோம். பூண்டிலுள்ள டை அலைல் சல்பைடு (Di Allyl Sulphide) என்கிற கந்தகப் பொருள் ரத்தம் அதிகமாக இரும்புச்சத்தை உறிஞ்சவும், தேவையானபோது போதுமான அளவை வெளிவிடவும் மிகவும் உப யோகமாக இருக்கிறது. பூண்டிலுள்ள கந்தகப் பொருள், மார்பகப் புற்று நோயை உருவாக்கும் விஷப்பொருட்களை, உட லுக்குள் பரவவிடாமல் தடுக்கவும் செய்கிறது. பூண்டிலுள்ள அலிஸின், கெட்ட கொழுப்புப் பொருட்களை ரத்தத்தில் அதிகமாக சேரவிடாமல் தடுக்கும். பூண்டிற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருந்தாலும், பொதுமக்கள் பூண்டை அதிகமாக விரும்புவதற்கு முதற்காரணம் பூண்டு ரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைத்துவிடும் என்பது தான். இதற்காக பூண்டை சாப்பிட பலபேர் பலவிதமான யுத்திகளை கையாளு-கிறார்கள். ஒருவர் பூண்டுவை விறகு நெருப்பில் சுட்டு சாப்பிடுவார். இன்னொருவர் பாலில் போட்டு காய்ச்சி, வேகவைத்து சுவைப்பார். வெறும் தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுபவர்களும் உண்டு. பச்சையாகவே மென்று தின்று விட்டு ஊதித்தள்ளி விடுபவர்களும் இருக்கிறார்கள். சிலர் அம்மியில் வைத்து அரைத்து, உணவோடு சேர்த்து பிசைந்து சாப்பிட்டுவிடுவார்கள். எப்படியாவது பூண்டு சாப்பிடுங்கள். ஏன் என்றால் அது உடலுக்கு நிறையவே. நல்லது செய்கிறது.
பூண்டிலிருக்கும் கிருமிநாசினி (Antiseptic) குணத்திற்காக 1858-_ஆம் ஆண்டிலேயே பிரபல விஞ்ஞான மேதை லூயி பாஸ்டர், பூண்டை உபயோகப்படுத்தச் சொல்லி பொது மக்களிடம் பிரபலப்படுத்தினார். சமைத்த வேகவைத்த சுட்ட பூண்டுவை நிறைய சாப்பிடுவதைவிட, பச்சையாக ஒன்றிரண்டு பூண்டு பற்களை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும். பூண்டில் உடலுக்குத் தேவையான 17 அமினோ அமிலங்கள் இருக்கின்றன உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்திலுள்ள பிரமிடுகளைக் கட்டும்போது, அந்த கட்டுமானத் தொழிலாளர்களின் உடலுக்கு தெம்பும், உற்சாகமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடைய அன்றாட உணவில் பூண்டு அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. வாயுத்தொல்லை தீர, கிருமிகளை விரட்ட, கெட்ட கொழுப்பைக் குறைக்க, ரத்தக்குழாய்களில் கொழுப்புதிட்டுத் திட்டாக படியாமல் இருக்க, ஜலதோஷத்தை விரட்ட புற்றுநோயின் வீரியத்தைக் குறைக்க, இருதயநோய் வராமலிருக்க, பல் வலியிலிருந்து , ஈ, எறும்பு, கொசு, மூட்டைப்பூச்சி முதலியவைகளை ஓட ஓட விரட்ட, பூண்டு ஒரு அற்புதமான உணவும், மருந்தும் ஆகும்.
-உண்மை,16-31.10.15

மங்குஸ்தான் பழம்


*உலகின் கிழக்கத்திய நாடுகளில் வெப்ப மண்டல பகுதியில் மட்டும் விளையும் சிறப்புக்குரிய கனி. 20 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரக் கூடியது மங்குஸ்தான் மரம். 'குளுசியாசியே' தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா.
* வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் அதிகமாக வளரும். இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் மிகுதியாக வளர்கிறது. இந்தியா மற்றும் இலங்கையிலும் விளைவிக்கப்படுகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரை மங்குஸ்தான் பழங்களின் 'சீசன்' ஆகும். மங்குஸ்தானில் பல வகைகள் உள்ளன.
* மங்குஸ்தான் பழம், குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் சதைப்பற்றில் 63 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
* எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது. 100 கிராம் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.
* எடை கூட விரும்புபவர்கள் மங்குஸ்தான் பழங்களை சாப்பிடலாம்.
* 'வைட்டமின் சி' நிறைந்தது மங்குஸ்தான். 100 கிராம் பழத்தில் 12 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் 'வைட்டமின் சி' உள்ளது. நீரில் கரை யத்தக்க சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் 'வைட்டமின் சி'.
* அதிக அளவு 'வைட்டமின் சி' சத்துள்ள உணவுப் பொருட்களை உடலில் சேர்ப்பது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடலுக்கு தீங்கு தரும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை விரட்டும் தன்மையும் 'வைட்டமின் சி'க்கு உண்டு.
* பி-குழும வைட்டமின்களான தயாமின், நியாசின், போலேட் போன்றவையும் கணிசமான அளவில், மங்குஸ்தானில் காணப்படுகிறது. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றப் பணிகளில் இந்த வைட்டமின்கள் துணைக்காரணியாக உதவுகின்றன.
* அதிக அளவில் தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் இதில் உள்ளன.
* உடற் செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் பொட்டாசியம் தாது அவசியமானது. பக்கவாதம் மற்றும் இதயவியா திகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.
-விடுதலை,19.10.13

வெள்ளி, 13 நவம்பர், 2015

வெங்காயத்தின் பயன்களும் - நன்மைகளும்!

வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.
உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள் தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
பண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங் காயத்தின்மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளு மாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத் தரப்பட்டிருந்தது.
பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்
வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிக மாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் இந்தச் சத்து அதிகமாக உண்டு. பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக் களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங் காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றிய வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.
உடல் பருமனைக் குறைக்க
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அழகாக மாற
இரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங் காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் பளபளப்பு ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் செரிமானமாக வெங்காயம் உதவுகிறது.
உடல் வெப்பம் அகல...
பல்வேறு காரணங்களால் உடல் சூடு அதிகரிக் கும்போது வெங்காயம் உடல் சூட்டைச் சமனப்படுத்து கிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.
சாதாரண தலைவலிக்கு
சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.
விஷக் கடிக்கு
வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விஷ பூச்சிகள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.
இருமலுக்கு
பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பரு வத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்கா யத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.
மூளையின் சக்தி பெருகும்
மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்கா யத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் ஊக்கப் பொருளாகவும் திகழ்கிறது.
ஆகவே, தினமும் வெங்காயத்தை சூப்பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காயச் சாறு சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
பல்வலி, ஈறு வலி
பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.
பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.
-விடுதலை,19.10.15