ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஆவாரையின் அரிய பயன்கள்!“ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டா?’’ என்று பழமொழி உண்டு.  ஆவாரம் பூவைப் புங்கை மரத்தின் நிழலில் உலர்த்தி, பதப்படுத்தி (பொடியாக்கிக் கொள்ளலாம்) தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் பல நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்பதே அப்பழமொழியின் உட்பொருள்.

ஆவரை, ஆவிரை, ஏமபுட்பி மேகாரி, ஆகுலி, தலபோடம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆவாரையின் தாவரவியல் பெயர் ‘‘Cassia Auriculata’. குத்துச்செடி இனத்தைச் சேர்ந்த ஆவாரை, சுமார் 10 அடி உயரம் வரை வளரும். தென்னிந்தியா மற்றும் இலங்கையில் காணப்படும் ஆவாரை, மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இதன் இலை, பூ, பட்டை, விதை, பிசின், வேர் என எல்லாமே மருந்துக்குப் பயன்படக்கூடியவை. ஆனாலும்  பூவுக்கு மருத்துவக் குணம் அதிகம். ஆவாரம்பூவில் சட்னி, துவையல், சாம்பார், தோசை எனப் பல உணவு வகைகளைச் செய்து சாப்பிடலாம்.

உடற்சோர்வு நீங்க:

மதுப்பழக்கத்தால் உடலில் சோர்வு ஏற்பட்டுக் கல்லீரல் வீக்கம் மற்றும் பாதிப்பு உண்டாகி மிகுந்த பிரச்னை உண்டாகும். அத்தகைய சூழலில் கால் டீஸ்பூன் ஆவாரம்பூ பவுடரைச் சூடான பாலில் கலந்து 48 நாள்கள் குடித்து வந்தால் நோய் அனைத்தும் நீங்கிப் புதுத்தெம்பு கிடைக்கும். சர்க்கரை நோய்க்கு ஆளானவர்கள் தவிர மற்றவர்கள் ஆவாரம்பூ பொடியுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் பாதித்தவர்கள் இதேபோல் ஆவாரம்பூ பொடியைச் சூடான பாலில் கலந்து காலை, மாலை எனத் தொடர்ந்து அருந்தி வந்தால்  சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். ஆவாரம்பூ அல்லது அதன் பொடியைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அதனுடன் பால் சேர்த்துக் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். ஆவாரம்பூ இதழ்களைக் கறிக்கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம். இதனால் உடல் சூடு, உடல் நாற்றம், களைப்பு, வறட்சி, மேகவெட்டை போன்றவை சரியாகும்.

தோல் நோய் விலக:

பாசிப்பருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சளுடன் ஆவாரம் பூவைச் சம அளவு சேர்த்துச் சிறிதளவு வசம்பும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சோப்புக்குப் பதில் இந்த மூலிகைக் கலவையைத் தேய்த்துக் குளிப்பதன்மூலம் சருமம் பொன் நிறமாக மாறும். அத்துடன் சருமம் சுத்தமடைந்து தேமல், கரும்புள்ளிகள் மறையும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தில் சுருக்கங்கள் குறையும்.

எலும்பு இணைய:

ஆவாரையின் இலைகள் தரும் பலன்களும் அதிகம். பசுமையான ஆவாரை இலைகளை மையாக அரைத்துத் தயிர் அல்லது நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கரு அல்லது பொடியாக்கிய கறுப்பு உளுந்து சேர்த்துத் தசை பிசகுதல், எலும்பு நகர்தல், மூட்டு நழுவுதல் மற்றும் எலும்பு உடைதல் போன்றவற்றுக்குப் பற்று போட்டு வந்தால் பலன் கிடைக்கும். விலகிய மூட்டினைச் சரி செய்து அதன்மீது பற்றுப்போட வேண்டியது அவசியம்.

பல் நோய் அகல:

ஆவாரம் பட்டையை நன்றாகக் காய வைத்து இடித்துப் பொடியாக்கிச் சலித்துக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் அளவு பொடியை எடுத்து நான்கு டம்ளர் தண்ணீருடன் கலந்து ஒரு டம்ளராக வற்றுமளவுக் கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி இளஞ்சூட்டுடன் வாய் கொப்புளித்து வந்தால் பல் இறுகிக் கெட்டிப்படும். அத்துடன் இதைச் செய்வதால் ஆடிக்கொண்டிருந்த பற்கள் பலப்படும். சொத்தை விழுந்த பற்களில் வலி இருந்தால் சரியாகிவிடும். பல் ஈறுகளில் வீக்கம், சீழ் பிடித்தல் போன்ற பாதிப்புகள் இருந்தால் இந்த நீரால் வாய் கொப்புளித்து வந்தால் பாதிப்புகள் நீங்குவதுடன் பற்களுக்கும்  பாதுகாப்பு கிடைக்கும்.
- உண்மை இதழ், 1-15.10.17

செவ்வாய், 19 டிசம்பர், 2017

ரத்த சோகைக்கு நெல்லிக்காய்தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும் - அது ஆப்பிளுக்கு நிகரான சத்துக் களைக்கொண்டது. அதாவது ஒரு  நெல்லிக்காய் மூன்று ஆப்பிள் களுக்குச் சமம்.

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர் வேதம் போன்ற  இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.  வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் திரிபலா சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் சளிப் பிரச்சினையை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக் கிறார்கள். உண்மையில் சளிப் பிரச்சினை வராமல் நெல்லிக்காய் தடுக்கும்.

நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய் களையும் கட்டுப்படுத்தும்.

திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக  அதிகம்.  ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது.

பச்சைக் காயாகச் சாப்பிடும் போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது  சாப்பிடலாம்.  நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை  அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.

நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும்  பயன்படுத்தப்படுகிறது.

தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். அதிக  உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

- விடுதலை நாளேடு,18.12.17

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!


வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து  கொள்வோம். இரத்தத்தில் கலந் துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம்  உதவுகிறது. இத னால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.  இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு  சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.  மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக  வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப்  போக்கும். சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.  வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில்  ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும் தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல்  தடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

-விடுதலை நாளேடு,18.12.17

திங்கள், 11 டிசம்பர், 2017

ஏலக்காயின் பயன்கள்
வாசனைக்காக மட்டும் மசாலா டீ மற்றும் பாயாசத்தில் நாம் சேர்த்துக் கொள்ளும் ஏலக்காயில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அதிலும் குறிப்பாக ஏலக்காயைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரை குடிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம், செரிமானக் கோளாறு போன்ற பல பிரச்சினைகள் தீரும்.

ஏலக்காயில் இருக்கும் கிருமி நாசினிகள் வாய்ப் புண் போன்ற வாய் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். மேலும் வாய் துர்நாற்றத்தை சரி செய்ய பல வழிகளில் முயற்சித்து ஓய்ந்து போய்விட்டீர்களா, கவலையே வேண்டாம் இந்த ஏலக்காய் தண்ணீர் துர்நாற்றத்தை நீக்குவதோடு உங்களது வாயை மணக்க வைக்கும். ஏலக்காயை அப்படியே வாயில் போட்டு மெல்வதன் மூலம் கூட செரிமான கோளாறுகள் சரியாகும், ஆனால் அதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். அதுவே ஏலக்காய் கொதிக்க வைத்த தண்ணீரை நீங்கள் குடிப்பதன் மூலம் ஒரே வாரத்தில் உங்களின் செரிமான திறன் அதிகரிக்கும் என்பது உறுதி.

சுவாசம் மற்றும் மூச்சுக் குழாய் பிரச்சினைக்கு இது ஒரு நல்ல சிகிச்சை முறையாகும்.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உள்ள வர்கள் தினமும் இந்த நீரைக் குடிப்பதன் மூலம் இதயத் துடிப்பு சீராகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஏலக்காயில் இருக்கும் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் ரத்த சோகை மற்றும் அது தொடர்பான பிற கோளாறு களை சரி செய்யும்.

இவற்றைத் தவிர மன அழுத்தத்தைக் குறைப்பது, ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை குறைப்பது, புற்றுநோய் வராமல் தடுப்பது, ரத்த அழுத்தத்தைச் சரி செய்வது என இன்னும் பல நன்மைகளை இந்த ஏலக்காய் தண்ணீரின் மூலம் நாம் பெறலாம்.

பொதுவாகவே உடலில் நீர் சத்து குறையாமல் இருக்கத் தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். வெறும் தண்ணீரை குடிப்பதை விட அதில் இவ்வாறு ஏலக்காய்  சேர்த்து குடிப்பது அதிக பலனை தரக்கூடும் என்பதை நினைவில்  கொள்ள வேண்டும்.
- விடுதலை நாளேடு,11.12.17

கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த வேர்க்கடலைகுளிர்காலத்தில் அதிகம் விலையும் பயிர் வேர்க்கடலை, இதை நம் முன்னோர்கள் தங்களது உணவில் குளிர்காலத்தில் அதிகம் சேர்த்து கொள் வதற்கான காரணம் இது குளிர்கால பயிர் என்பது மட்டுமல்ல; இந்தக் காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதினால் பல நன் மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதும் தான்.

உடலை வெப்பமாக வைத்திருக்கும்: வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடிய ஒன்று. இதனால் குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் நமது உடல் இருக்கும். பொதுவாகக் குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல ஆரோக்கியத்துடன் செயற்படும் என்பதால் எண்ணெய் நிறைந்த உணவுகளையும் அதனால் எளிதாக செரிமானம் செய்ய முடியும்.

கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்: வேர்க்கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை தரக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக் கிறார்கள், இதனால் பித்தக்கட்டிகள் உருவாவதற்கான அபாயம் குறைகிறது.

சர்க்கரை அளவைச் சரி செய்யும்: வேர்க்கடலையில் இருக் கும் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீர்படுத்தக் கூடியது. சமீபத் திய ஆய்வுகளின் அடிப்படையில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம்

நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 21% வரை குறையும் என்று தெரியவந்துள்ளது.

சரும ஆரோக்கியத்தைப் பாது காக்கும்: வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு சருமத்தில் எண்ணெய் பதத்தை பாதுகாக்கும். இதனால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு போவதைத் தடுக்கலாம். மேலும் வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் சி சத்துக்கள் சருமத்தின் பொலிவை அதிகரிப்பதுடன், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கும். வேர்க்கடலையில் இருக்கும் ஆண்டிஆக்சிடண்ட்ஸ் அப்பழுக் கற்ற சருமத்தை தரக்கூடியது. ஆகையால் குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை நாம் பெறலாம். வேர்க்கடலையை அதிகம் சாப்பிடுவதும் செரிமான கோளாறை ஏற்படுத்தி வயிற்று வலி ஏற்படச் செய்யும். ஒருவேளை உங்களுக்கு வேர்க்கடலை சாப்பிடுவது ஒவ்வாது என்றால் அதைச் சாப்பிட முயற்சிக்காதீர்கள். குளிர்காலத்தில் உங்களது கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் வேர்க்கடலை சாப்பிடுவதற்கான சரியான காலம் இதுதான் என்பதை மறந்து விடாதீர்கள்.
- விடுதலை நாளேடு,11.12.17

செவ்வாய், 14 நவம்பர், 2017

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க காய்கறிகளுடன், பழங்களையும் உட்கொள்ளவேண்டும்ஹீமோகுளோபின் குறைபாடு அதா வது ரத்த சோகை ஏற்பட்டால் உடல் முழு வதும் செயலிழந்ததை போல் இருக்கும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக் கும் பிராண வாயுவான ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்கும் ரத்த அணுக்களின் அளவு குறைவதால் சோர்வு ஏற்படும். இதனால் சிறுநீரக பிரச்சினை வருவதற் கான வாய்ப்பும் ஏற்படுகிறது. இதில் இருந்து தீர்வு பெற எந்தவொரு மாத்திரை மருந்தும் இல்லாமல் நாம் சாப்பிடும் உண விலேயே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும். காய்கறிகளுடன் சேர்த்து சில பழங்களையும் சாப்பிடுவது மேலும் சீரான உடற்பயிற்சி போன்ற வையே இதற்கு போதுமானது.

1. கொய்யா

தினமும் கொய்யாப் பழம் சாப்பிடு வதன் மூலம் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எவ்வளவு கசப்பாக கொய்யா இருக்கிறதோ அதில் அவ்வளவு ஹீமோகுளோபினை அதிகரிக்கும் ஆற் றல் இருக்கிறது என்று அர்த்தம். மிகவும் சத்தான மற்றும் அதிக பயன்களை கொண்ட ஒரு பழம் இது. 

2. மாம்பழம்

பழ வகைகளில் மிகவும் சுவை யானதும், அனைவராலும் விரும்பப்படும் ஒன்றான தாகவும் இருப்பது மாம்பழம். இவ்வளவு இனிப்பான பழத்தால் ரத்த சோகையில் இருந்து விடுபட முடியும் என்றால் எதற்காக கசப்பான மாத்தி ரைகளை விழுங்க வேண்டும்?

3. ஆப்பிள்

நாள்தோறும் ஒரு ஆப்பிளை நாம் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்வதை தவிர்க்கலாம் என்பது பல காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு உண்மை. அந்த வகையில் பார்த்தால் தினமும் ஆப் பிள் சாப்பிடுவது ரத்த சோகை மட்டுமில் லாமல் இனி வரவிருக்கும் அனைத்து நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கக் கூடிய ஒன்றாகும்.

4.  திராட்சை

திராட்சையில் இரும்புச் சத்து நிறைந் துள்ளது. மாதவிலக்கு ஏற்படும் பெண்க ளுக்கு உடலில் தேவையான அளவு ரத் தம் உற்பத்தியாக இரும்புச் சத்து மிகவும் அவசியமான ஒன்று. புதிதாக ரத்தம் உற் பத்தி ஆகிறது என்றால் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் நிச்சயம் உயரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

5. பீட்ரூட்

பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் கார்போ ஹைட்ரேட் ரத்தம் வீணாவதைத் தடுக் கிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகமாவதற்குத் தேவையான சிவப்பு ரத்த அணுக்களை இவையும் உற் பத்தி செய்கிறது. அனீமியா நோயாளிக ளுக்கு இது ஒரு சிறந்த மருந்து என்றே சொல்லலாம்.

6. துளசி 

துளசி ரத்தத்தைத் தூய்மையாக்கி சிவப்பணுக்கள் இறப்பதற்குக் காரணமான நச்சுகளை ரத்தத்தில் இருந்து நீக்குகிறது. தினமும் துளசி சாப்பிடுவதால் நிச்சயம் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

7. காய்கறிகள் 

பச்சை காய்கறிகளை உட்கொள்வது எப்போதும் பல நன்மைகளை வழங்கக் கூடியது. ரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரித்து ரத்த சோகையில் இருந்து நம்மையும் காக்கக் கூடியது காய்கறிகள்.

8. தேங்காய் எண்ணெய்

உடலில் திசுக்கள், சதைகள் மற்றும் ரத்தம் உற்பத்தியாகத் தேங்காய் எண் ணெய் உதவுகிறது. இதன் மூலம் ஹீமோ குளோபின் அளவு கட்டாயம் அதிகரிக்கும்.

9. முட்டை

முட்டையில் புரதம், கொழுப்பு, வைட் டமின், இரும்பு, கால்சியம் மற்றும் தாது ஆகிய அனைத்துச் சத்துக்களும் இருப்ப தால் இது உடலும் அதிக நன்மைகளைத் தரக்கூடியது. உடலின் ஹீமோகுளோபின் அளவு மற்றும் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சில சத்துக்களும் இதனால் அதிகரிக்கக் கூடும்.
- விடுதலை நாளேடு,13.11.17

வியாழன், 26 அக்டோபர், 2017

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-


*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கரா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாழை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.👍🏾🙏🏼💐

-தாம்பரம் மாவட்ட கட்செவி

செவ்வாய், 9 மே, 2017

என்றூம் இளமை காக்கும் “இ”- வைட்டமின்!வைட்டமின்_ஏ மற்றும் ‘டி’யைப் போல இந்த ‘இ’ வைட்டமினும் கொழுப்பில் கரையும் தன்மை உடையது. கொழுப்பில் கரைந்த பின்னர் பித்தநீரும் சேரும்போதுதான் இது சிறுகுடலில் நன்கு உறிஞ்சப்படும்.

சிகப்பு அணுக்களின் உற்பத்திக்கு இந்த வைட்டமின் மிகவும் தேவை. அகச் சுரப்புகளில் முக்கியமாக பிட்யூட்டரி, அட்ரினல், இனப்பெருக்க ஹார்மோன்கள் நன்கு வேலை செய்ய, நன்றாக சரியானபடி சுரப்பதற்கு இந்த வைட்டமினும் சரிவர பெறப்பட வேண்டும். நமது உடல் இந்த வைட்டமினையும் ஒரு சில நாட்கள் கொழுப்பில் சேமித்து வைக்க இயலும்.

மாதவிடாய் நிற்கும் காலங்களில் இந்த வைட்டமின் சற்றே அதிகம் தேவை. மாதவிடாய் நின்ற பிறகு பலப்பல ஹார்மோன்களின் சுரப்பு குறையும்போது இந்த வைட்டமினும் உறிஞ்சப்படுவது குறையலாம்.

வைட்டமின் _ ‘இ’ நமது ஒரு நாளையத் தேவை மிகவும் குறைவுதான். ஆண்களுக்கு 10 மில்லி கிராமும், பெண்களுக்கு 8 மில்லி கிராமும்தான் தேவை. கர்ப்பமான காலங்களில் பெண்களுக்கு இன்னமும் 2 மில்லி கிராம் கூடுதலாகத் தேவை. பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 மில்லி கிராம் கூடுதலாகத் தேவை.

வயதாகும்போது கூடுதலாக இந்த வைட்டமினைப் பெற்றால் சீக்கிரமாக முதுமையடையாமல் இருக்கச் செய்யும்.

வைட்டமின்_இ சரியாக எடுத்துக் கொள்பவர்களது நடை, பாவனை எல்லாவற்றிலும் ஒரு நளினம், கம்பீரம் கிடைக்கும். எண்ணெய் வகைகளில் இந்த வைட்டமின் இருந்தாலும் அதை சூடு செய்தால் முழுவதும் அழிக்கப்படும். நமது உடலுக்குத் தேவையான பலனைத் தராது.

ஒரு சிலருக்கு மிகச் சீக்கிரமாகவே மாதவிடாய் நின்றுவிடும். அப்படி ஏற்படாமல் இருக்க இந்த வைட்டமினை மாத்திரை வடிவில் தினமும் உட்கொள்ளலாம்.

நமது உடலில் தசைகள், தசை நார்களின் பலத்திற்கும் வளரும் வயதில் தசைகள் ஆரோக்கியமாக உருவாக வைட்டமின்_இ உதவி புரிகிறது. வயதான பிறகு ஆடி ஆடிப் பலரும்  நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி ஏற்படாமல் கம்பீரமாக நடக்க தசைகளில் வலி ஏற்படாமல் இருக்க தினமும் இந்த வைட்டமின் உறுதுணை புரியும்.

இந்த வைட்டமினை நாம் உணவின் மூலம் சுலபமாகப் பெற இயலும். முழுத் தானியங்கள், பயறு வகைகள், வேர்க்கடலை, எள், அக்ரோட் போன்றவை மூலம் சுலபமாகப் பெறலாம். பயறை முளைகட்டும்போது பலப்பல என்சைம்கள் உற்பத்தி ஆகும். அதோடு அதில் உள்ள இந்த வைட்டமினும் நன்கு உறிஞ்சப்பட உதவும்.

இந்த வைட்டமினை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் இருந்து பெற இயலாது. எண்ணெய் வித்துக்கள், கொட்டை வகைகள் போன்றவையும் நமக்கு தினமும் சிறிதளவாவது தேவை.

மாதவிடாய் நின்ற பின்னர் இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் கால் மரத்துப் போவதைப் போன்ற உணர்ச்சி, பாதங்களில் குத்தும் வலி, நடக்கும்போது சிறிதே தடுமாற்றம் போன்றவை ஏற்படலாம். தொடர்ந்து மாத்திரை வடிவில் உட்கொண்டால் வலி குறையும். வலி குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் பலவிதமாக பாதிப்பும் ஏற்படும். பக்க விளைவுகளும் இருக்கும். அளவிற்கு அதிகமாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

இப்பொழுது பலரும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்தான் உபயோகிக்கின்றோம். அந்த எண்ணெயில் இருந்து வைட்டமின்_‘இ’யைப் பெற இயலாது. இயற்கையான முறையில் செக்கில் ஆட்டிய எண்ணெயில் இருந்து பெற இயலும். இந்த வைட்டமினை மற்ற கொழுப்பில் கரையும் வைட்டமினைப் போல மீன், மீன் எண்ணெயில் இருந்து பெற இயலாது.

இந்த ‘ணி’ வைட்டமினைப் 
பெறும் வழிகள்:

1. முளைப்பயறு வேர்க்கடலை சாலட்

தேவையான பொருட்கள்: முளைவந்த பச்சைப்பயறு _ அரை கப், வேகவைத்த வேர்க்கடலை _ கால் கப், கேரட் துருவல் _ கால் கப், மாங்காய்த் துருவல் _ 1 டேபிள் ஸ்பூன், வெள்ளரிக்காய் அரிந்தது _ 1, உதிர்த்த மாதுளை முத்துக்கள் _ விரும்பும் அளவு, உப்பு _ தகுந்த அளவு, பச்சைமிளகாய் விழுது _ 1 டீஸ்பூன், எலுமிச்சம் பழம்_1, எண்ணெய்_1 ஸ்பூன், கடுகு, வெந்தயம் _கால் டீஸ்பூன் (தாளிக்க), பொடியாக அரிந்த கொத்துமல்லி _ சிறிதளவு, வறுத்த வெள்ளரி விதை _ 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: முளைவந்த பச்சைப்பயறுடன் மற்ற காய்கறிகள், மாதுளை முத்துகள், வேர்க்கடலை சேர்த்து நன்கு குலுக்கி வைக்கவும், அதோடு எண்ணெயில் கடுகு, வெந்தயம், தாளித்துச் சேர்த்த பின்னர் தகுந்த உப்பு, பச்சைமிளகாய் விழுது, எலுமிச்சையைப் பிழிந்து சேர்த்து குலுக்கி விடவும். பரிமாறும் கிண்ணத்தில் தேவையான அளவு போட்ட பின்னர் வறுத்த வெள்ளரி விதை தூவி பரிமாறலாம்.

2. முளை வெந்தய சாலட்

தேவையான பொருட்கள்: முளைத்த வெந்தயம் _1 கப், பொடியாக அரிந்த அக்ரோட் பருப்பு _ சிறிதளவு, வறுத்த எள் _ 1 டேபிள் ஸ்பூன், பொடியாக அரிந்த பேரீச்சம் பழம் _ 5, அரிந்த பாதாம் _ 6, தேங்காய்த் துருவல் _ கைப்பிடி அளவு.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உடனே பரிமாறலாம். இதற்கு உப்பு, காரம் தேவை இல்லை. அப்படியே மெதுவாக மென்று சாப்பிட்டால் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும்.

3. மக்காச் சோள ‘சாட்’

தேவையான பொருட்கள்: வேகவைத்த மக்காச் சோள மணிகள் _ விரும்பும் அளவு, மிகப் பொடியாக அரிந்த குடமிளகாய் _ 100 கிராம், (மூன்று கலர் குட மிளகாயும் போடலாம்) அரிந்த கேரட் _ 100 கிராம் மிகப் பொடியாக அரிந்த முட்டைக் கோஸ் _ 50 கிராம், உப்பு _ தகுந்த அளவு, அரிந்த மாங்காய், வெள்ளரிக்காய் _ விரும்பும் அளவு, புதினா சட்னி _ 1 டேபிள் ஸ்பூன், பேரீச்சம் பழ இனிப்புச் சட்னி _ சிறிதளவு, ஓமப்பொடி _ மேலே தூவ, பொடியாக அரிந்த வெங்காயம் _ சிறிதளவு, ‘சாட்’ மசாலாத் தூள் _ அரை டீஸ்பூன்.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு அகலப் பாத்திரத்தில் சேர்த்து குலுக்கி விட்டு மேலே ஓமப்பொடி தூவி பரிமாறவும்.

அடிக்கடி சுண்டல் சாப்பிடுவதும் நமக்கு இந்த வைட்டமினைப் பெறச் செய்யும். ராஜ்மா, கொண்டைக்கடலை, முழு பச்சைப்பயறு, காராமணி போன்றவைகளை உபயோகித்து அடிக்கடி கிரேவி செய்யலாம். குழம்பிலும் போடலாம். பொரியல் செய்யும்போது காய்கறிகளுடன் சுண்டல் வகையையும் சேர்த்து செய்தால் இந்த வைட்டமினை சுலபமாகப் பெறலாம். தினமும் முளைகட்டிய ஏதாவது ஒரு பயறைப் பச்சையாக ‘சாலட்’ ஆக சாப்பிட்டாலே போதும். 

-உண்மை இதழ்,16-30.4.17