சனி, 7 செப்டம்பர், 2019

மருத்துவம் : நிலவேம்புடெங்குக் காய்ச்சல், விஷக் காய்ச்சல் மற்றும் சிக்கன் குனியா போன்ற பல வகையான காய்ச்சல் நோய்களுக்கும் ‘எபோலா’ என்ற காய்ச்சலைக் குணப்படுத்தவும் நிலவேம்புக் குடிநீர் பயன்படுத்தப்படுகின்றது.

அகத்தியர் குண பாடத்திலும் நிலவேம்பின் மருத்துவப் பயன்களை விவரிக்கும் பாடல் ஒன்று உள்ளது.

“வாதசுரம் நீரேற்றம் மாற்றுஞ் சூதோடே

காதமென ஓடக் கடியுங்காண் மாதரசே

பித்த மயக்கறுக்கும்  பின்புதெளி வைக்கொடுக்கும்

சுத்தநில வேம்பின் தொழில்’’

நிலவேம்பின் மருத்துவக் குணங்களும் பயன்களும்

ஜுரம், வீக்கம், ஜலதோஷம் போன்ற குறைபாடுகளைக் குணமாக்க வல்லது. வாதம் சார்ந்த சுரம், பித்த மயக்கம், நீர்க்கோர்வை போன்ற நோய்களையும் எளிதில் அதிகப் பணச் செலவு இன்றிக் குணப்படுத்த வல்லது நிலவேம்பு. முக்கியமாகப் பலவகை ஜுரங்களுக்கும் சிறந்த மருந்தான நில வேம்பைப் பயன்படுத்தும் முறையை அறியலாம். 15 கிராம் நிலவேம்புடன் கிச்சிலித் தோல் 195 மில்லி கிராம் மற்றும் கொத்துமல்லி 195 மில்லி கிராம் ஆகியவற்றைக் கொதிக்கும் நீரில் போட்டு சுமார் 1 முதல் 1லு மணி நேரம் ஊற விடவும். பின்னர் அந்நீரை வடிகட்டி உடல் எடைக்கு ஏற்றாற்போல் 15 முதல் 35 மில்லி லிட்டர் வரை தினமும் 2 அல்லது 3 வேளை அருந்தச் செய்யவும். பன்றிக் காய்ச்சல், டெங்கு, சிக்கன் குனியா மற்றும் மலேரியாவிற்கு இம்மருந்து சிறந்தது.

நிலவேம்பு நுண்ணுயிரிகளான பாக்டீரியா, வைரஸ் போன்றவைகளை அடியோடு அழிக்க வல்லதாகும். யானைக்கால் நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் இதற்கு உண்டு.  சுவாச மண்டலத்தில் சேர்ந்துள்ள கபத்தை  அகற்றும் குணம் நிலவேம்புக்கு உண்டு. ஜலதோஷத்தையும் விரைவில் போக்கும் திறன் இதற்கு உண்டு. இருமல், தொண்டைத் தொற்று (ஜிலீக்ஷீஷீணீt மிஸீயீமீநீtவீஷீஸீ), ஒவ்வாமை (அலர்ஜி) போன்றவற்றிற்கும் நிலவேம்புக் கஷாயம் அருமருந்தாகும்.

நில வேம்பில் உள்ள ஆண்ட்ரோ கிராஃபோலைட் புற்று நோயில் ஏற்படும் அபரிமிதச் செல்களின் பெருக்கத்தைத் தடுக்க வல்லது.


வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்த

நிலவேம்பின் சாறு எல்லாவிதமான அல்சருக்கும் அருமருந்தாகும். இது குடலில் அதிகமாகச் சுரக்கும் அமிலத்தைக் கட்டுப்படுத்தும். ஜீரண ஆற்றலை விரைவுபடுத்தும். நல்ல பசி எடுக்கச் செய்யும்.

பேதியைக் குணமாக்க

நிலவேம்புச் சாறு பேதியை உடனே குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

கல்லீரல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்த

கல்லீரல் தொற்று, அழற்சி போன்ற நோய்களிலிருந்து காக்க வல்லது நிலவேம்பு. மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் வீக்கத்திற்கு நிலவேம்புச் சாறு சிறந்த மருந்து. சிறு குழந்தைகளுக்கும் நில வேம்பின் சாறைத் தேனுடன் கலந்து 2 முதல் 3 மி.லி வரை கொடுக்கலாம். நில வேம்பில் உள்ள ஆண்ட்ரோ கிராஃபோலைட் புற்று நோயில் ஏற்படும் அபரிமிதச் செல்களின் பெருக்கத்தைத் தடுக்க வல்லது.

நிலவேம்புத் தீ நீரைத் தயார் செய்யும் முறை

உலர்ந்த நிலவேம்பு இலைகள் மற்றும் சமூலம் (பூக்கள், வேர்) ஆகியவற்றைத் தூள் செய்து கொள்ளவும். இத்தூளில் சுமார் 5 _7 கிராம் எடுத்துக் கொண்டு அதன் மீது நன்கு உருண்டு கொதித்து வந்த நீரில் ஒரு கப் (200 மில்லி) விடவும். சுமார் 10 _15 நிமிடங்கள் மூடி வைக்கவும். ஆறிய பிறகு இக்கஷாயத்தைச் சாப்பாட்டிற்கு முன்பு பருகவும்.
- உண்மை இதழ், பிப்ரவரி 16- 28.19