பொதுவாகத் தங்கள் உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் அதிகமாக வெண்ணெய் சேர்த்துக்கொள்ளாமல் தவிர்ப்பார்கள். ஆனால் வெண்ணெயிலும் சத்துகள் அடங்கியுள்ளன. மலைப் பகுதி மக்களுக்குக் அதிகமாகக் கடல் உணவுகள் கிடைப்பதில்லை. அதனால் ஏற்படும் அயோ டின் இழப்பை வெண்ணெய் ஈடுகட்டுகிறது. வெண்ணெய்யில் உள்ள `ஆன்டி ஆக்சிடன்ட் கள்' ரத்த நாளங்களைப் பலப்படுத்துகின்றன. கால்சியத்தை அதிகளவில் கொண்டுள்ள வெண்ணெய், பற்சிதைவைத் தடுக்கிறது. வெண்ணெய்யில் உள்ள பூரிதக் கொழுப்பு, புற்று நோயைத் தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. தேவையான தாது உப்புகளை உடம்பு கிரகித்துக்கொள்ள வெண்ணெய் உதவுகிறது. வெண்ணையில் உள்ள `கொலஸ்ட்ரால்', மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மை பயக்கிறது. இதில் உள்ள `வைட்டமின் ஏ', கண்கள் மற்றும் தோலின் நலத்தை காக்கிறது.
=விடுதலை,3.1.11
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக