ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

புதினா - பயன் தரும் புதினா

கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போல   புதினாவும் உணவுக்கு   சுவையும்  மணமும் பயன்படுத்தப்படுகிறது. புதினா பசியைத் தூண்டும் சக்தி கொண்டது.
பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகள் தீர புதினா   மிகவும்  உதவுகிறது.  ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக் களை அழிக்கவும்  வாய்வுத் தொல்லையை போக்கவும்  புதினா  உதவுகிறது    புதினாவில்   உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில்   இதில் இருக்கின்றன.
புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். ஆஸ்துமாவை புதினா கட்டுப்படுத்து கின்றது.  வறட்டு இருமல்,  ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப் படுத்துகிறது.   புதினாவை  தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும்.சீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும்.வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் புதினாவை  துவையல்  செய்து   சோற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
-விடுதலை,27.12.10

புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும்.மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றனர். இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் இதை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வீர்கள்.
வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும். உடல் தொப்பை, பருமன் குறைகிறது. அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். காலரா அண்டாது. சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறு கின்றனர். தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறும். மலக்கட்டு விலகி ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மருந்துச்சாறு.
மருத்துவக் குணங்கள்: கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.  இன்றும்கூட இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்.  வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவைகளை உணரமுடியாத நாக்கு, பித்தம், ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும். வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போது பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும். வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறுள்ளவர்கள் புதினாத் துவையல், புதினா சட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.
-விடுதலை,1.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக