*உலகின் கிழக்கத்திய நாடுகளில் வெப்ப மண்டல பகுதியில் மட்டும் விளையும் சிறப்புக்குரிய கனி. 20 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரக் கூடியது மங்குஸ்தான் மரம். 'குளுசியாசியே' தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா.
* வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் அதிகமாக வளரும். இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் மிகுதியாக வளர்கிறது. இந்தியா மற்றும் இலங்கையிலும் விளைவிக்கப்படுகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரை மங்குஸ்தான் பழங்களின் 'சீசன்' ஆகும். மங்குஸ்தானில் பல வகைகள் உள்ளன.
* மங்குஸ்தான் பழம், குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் சதைப்பற்றில் 63 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
* எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது. 100 கிராம் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.
* எடை கூட விரும்புபவர்கள் மங்குஸ்தான் பழங்களை சாப்பிடலாம்.
* 'வைட்டமின் சி' நிறைந்தது மங்குஸ்தான். 100 கிராம் பழத்தில் 12 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் 'வைட்டமின் சி' உள்ளது. நீரில் கரை யத்தக்க சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் 'வைட்டமின் சி'.
* அதிக அளவு 'வைட்டமின் சி' சத்துள்ள உணவுப் பொருட்களை உடலில் சேர்ப்பது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடலுக்கு தீங்கு தரும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை விரட்டும் தன்மையும் 'வைட்டமின் சி'க்கு உண்டு.
* பி-குழும வைட்டமின்களான தயாமின், நியாசின், போலேட் போன்றவையும் கணிசமான அளவில், மங்குஸ்தானில் காணப்படுகிறது. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றப் பணிகளில் இந்த வைட்டமின்கள் துணைக்காரணியாக உதவுகின்றன.
* அதிக அளவில் தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் இதில் உள்ளன.
* உடற் செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் பொட்டாசியம் தாது அவசியமானது. பக்கவாதம் மற்றும் இதயவியா திகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.
-விடுதலை,19.10.13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக