குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் அன்றாடம் கீரையை சேர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது. கீரையின் பயன்களை நாம் அறிந்திருந்தாலும் அதை உணவில் சேர்த்துக் கொள்ள தயங்குகிறோம். இதன் காரணமாக சத்துக் குறைபாட்டால் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறோம்.. தண்ணீர் கீரை ஆரோக்கியத்தை தருவதோடு தோல் முடி பிரச்சனைகளை சரி செய்கிறது. பச்சை காய்கறிகளை சமைத்து உண்ணும் நாம் தண்ணீர்க் கீரையின் பயன்பாட்டை அறிந்துகொள்வோம். தாதுசத்து அதிகமுள்ள தண்ணீர் கீரை மிகச்சிறந்த உணவாகும். கால்சியம், இரும்புசத்து உள்ளிட்ட சத்துக்கள் இக்கீரையில் உள்ளது. உடலில் கொழுப்பு அதிகமுள்ளவர்கள் தண்ணீர்க் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் கொழுப்பு குறையும். உடல் எடையை கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பதில் இக்கீரை மகத்தான பங்காற்றுகிறது. இக்கீரையை சமைத்தோ, சூப் செய்தோ உணவாக பயன்படுத்தலாம்.
மஞ்சள் காமாலை, கல்லீரல் பிரச்சினைகளுக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் தண்ணீர் கீரை பயன்படுத்தப் படுகிறது. இரத்த சோகையை அடியோடு விரட்டியடிக்கும் இக்கீரையை கர்ப்பிணிபெண்கள் உணவாக உட்கொள்வதன் மூலம் ரத்த அணுக்கள் அதிகரித்து ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும். குடல் புழுக்கள், வயிறு பிரச்சனைக்கு பேதி மருந்தாக தண்ணீர் கீரை பயன்படுகிறது.
-விடுதலை,28.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக