ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

எலுமிச்சை - உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எலுமிச்சை


தெற்காசியாவிலும், தென் கிழக்காசியாவிலும், எலுமிச்சை தொற்று நீக்கியாகவும், நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. இது முதலில் பாரசீகத்துக்கும், அங்கிருந்து ஈராக், பின்னர் கி.பி.700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானது. இது குறித்து பதிவுகள் முதன் முதலில் கிபி 10ஆம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன.
எலுமிச்சம் பழச்சாற்றில் 5 சதவீதம் அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச்சுவை தருகிறது. எலுமிச்சை பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இதை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சினையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும். உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சினைகளைப் போக்கும்.
தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.
எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகும். இது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். இதில் பொட்டாசியம் உள்ளதால், உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தேவையில்லாத கொழுப்பு கரைக்கப் படும். தினமும் உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.
சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை முகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம். எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும்.
எனவே, வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது. தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், புற்றுநோய் அபாயத்தி லிருந்து விடுபடலாம்.
உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக வரும் தலைவலியைப் போக்க, எலுமிச்சை டீ மிகவும் சிறந்தது. குழந்தைகளின் வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை வெளியேற்றுவதற்கு எலுமிச்சை பயன்படுகிறது. எலுமிச்சையில் எண்ணற்ற மருத்துவ குணாதிசயங்கள் உள்ளதால், தினமும் பயன்படுத்துவோம்.
-விடுதலை16.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக