பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம் என்பது பழமொழி. அப்படியா மிளகில் அவ்வளவு விஷயம் இருக்கா என ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த மருந்து பொருளாக மிளகு விளங்குகிறது.
இவை இந்தியாவில் அதிகளவு பயிரிடப்படுகிறது. மிளகில் உள்ள வேதிப் பொருள்கள் அனைத்தும் நம்மை நோயில் இருந்து காக்கும் வேலைகளை செய்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கத்தை குறைக்கும் வாதத்தை அடக்கும். பசியை அதிகரிக்கும்.
நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு மிளகு சிறந்த நல்ல மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு. நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோயும் நெருங்கியதில்லை. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.
மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக் குளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினை களை சரி செய்கிறது.
அதாவது சரியான செரிமானம் வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.
தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன்மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சினை எட்டிப் பார்க்காது. மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே, மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன்மூலம் எடையை குறைக்கலாம். மிளகு தோல் நோயை குணப் படுத்துவதற்கும் பயன்படுகிறது.
இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின்படி மிளகு வெண் புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.
ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய் இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சினையை எதிர்த்து செயல்படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது.
காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சினைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி, பல் சிதைவு போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் மிளகு மருத்துவத்தைத் தான் பயன்படுத்தி வந்தனர்.
உடல் வெப்பத்தை குறைக்கும். இப்படி பல பண்புகளை கொண்டது மிளகு. நரம்புத்தளர்ச்சி, கைகால் நடுக்கம், உதறல், ஞாபகமறதி, முதுமையில் ஏற்படும் தலை சுற்றல் ஆகிய வற்றிற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுபகுதியில் என்சைம்களை தூண்டி அதிகம் சுரக்கச் செய்கிறது.
செரிமானத் தன்மையையும் அதிகரிக்க செய்கிறது. நச்சுக் கழிவுகளை உடலில் தங்க விடாமல் செய்வதால்தான் நம் முன்னோர்கள் பத்து மிளகு இருந்தால் என்ற பழமொழியை பயன்படுத்தியிருக்கிறார்கள். என்ன மிளகு வாங்கக் கிளம் பிட்டீங்களா.
உற்சாகமாக இருக்க
குளிர்ந்த நீரில் குளிக்கலாம்
குளிர்ந்த நீரில் குளிக்கலாம்
மனித உடலுக்குத் தண்ணீர் வைத்தியம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் உற்சாகமளிக்கக் கூடியதாகும். உங்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் சக்தி தேவை என்று நீங்கள் எண்ணினால், உற்சாகமின்மையால் அவதிப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு தேவையானது குளிர்ந்த நீர் வைத்தியம்தான்.
தண்ணீரில் வைத்தியம் என்றால் குளிக்கும் தொட்டியில் குளிர்ந்த நீரை நிரப்பிக் கொள்ளுங்கள். அதற்குள் இறங்கி படுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நிமிடம் தண்ணீருக்குள் உங்கள் உடல் முழுவதும் இருக்கும் விதத்தில் வைத்துக் கொண்டு உடலை ஆங்காங்கே உங்கள் கைகளால் தேய்த்து விடுங்கள். ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது.
குளித்ததும் உடலை நன்கு துடைத்துவிடுங்கள். இதனால் அடுத்த பல மணி நேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம்.
-விடுதலை,30.3.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக