செவ்வாழைப் பழத்தின் மருத்துவ குணங்கள்
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில், கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மைக் குறைபாடு ஏற்படும்.
எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழையைச் சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண்தன்மை சீரடையும்.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழைப் பழம் சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழைப் பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
-விடுதலை,10.8.15
தீக்காயம் ஏற்பட்டு விட்டதா?
மருந்தை தேடி அலைய வேண்டாம்...!
-விடுதலை,10.8.15
இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
* முடக்கத்தான் இலையை சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க உடல்வலி நீங்கும்.
* இலந்தைபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர மார்பு வலி குணமாகும்.
* வசம்பு தூளை, தேங்காய் எண்ணெயில் சிவக்க கொதிக்க வைத்து, வடிகட்டி சிரங்கு மீது தடவி வர சொறி, சிரங்கு குணமாகும்.
* சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் சுகமான நித்திரை வரும்.
* மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெயில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும்.
* 40 வயதை தாண்டிவிட்டால் அதிக உணவை தவிர்த்து சத்துள்ள உணவு குறைந்த அளவும், அதிக பழச்சாறும் பருகினால் நோய் வராது.
தீக்காயம் ஏற்பட்டு விட்டதா?
மருந்தை தேடி அலைய வேண்டாம்...!
தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்...
பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக் கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்... சிறிது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது... சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும்... தொடர்ந்து செய்து வந்தால்.....
அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்....
(தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே....)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக