நமது சித்த மருத்துவத்தில் ஏராளமான மூலிகைகளுக்கு சிறப்பான இடம் உள்ளது. உடலில் ஏற்படும் நோய்களை பொறுத்து அவற்றின் தனிப்பட்ட குணங்களுக்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் சித்தரத்தையின் பயன்பாடு பற்றி பார்ப்போம்:
நம்மிடையே காணப்படும் சைனஸ் தொல்லை, சளி தொந்தரவு, வயிற்று கடுப்பு, வயிற்று கோளாறு மற்றும் வாயு கோளாறுகளை அகற்ற சித்தரத்தை மிகவும் பயன்படுகிறது. சித்தரத்தை, நமது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. அத்துடன், புற்றுநோய் மற்றும் பிளட் பிரஷர் தாக்கத்தை வெகுவாக குறைக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் சித்தரத்தை காய்ந்த கிழங்காகவும் பொடியாகவும் கிடைக்கிறது.
அரை தேக்கரண்டி சித்தரத்தை பொடியுடன், அதிமதுர பொடி அரை தேக்கரண்டி, சுக்கு, மிளகு, திப்பிலி அடங்கிய திரிகடுக பொடி அரை தேக்கரண்டி கலந்து, அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க விடவும். பின்னர், நன்கு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டவும். அவை காரமாக இருக்கும் என்பதால், அவற்றுடன் சிறிது தேனை கலந்து குடிக்கலாம்.இவற்றை தொடர்ச்சியாக குடித்து வந்தால் மூக்கடைப்பு, நெஞ்சக சளி, ஒற்றை தலைவலி உட்பட சைனஸ் தொந்தரவுகள் அறவே நீங்கும்.
அதேபோல், இவை நம்மிடம் உள்ள கொழுப்பு சத்தை கரைக்கவும், பிளட் பிரஷரை குறைக்கவும் உதவுகிறது. மேலும், நம்மிடையே காணப்படும் நாக்கு வறட்சியை அறவே நீக்கும்.கால் தேக்கரண்டி சித்தரத்தை பொடியுடன் 4 பல் பூண்டு, ஒன்றரை தேக்கரண்டி சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் சர்க்கரையுடன் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டி, அத்துடன் தேன் கலந்து குடிக்கலாம்.
இவற்றை தொடர்ச்சியாக குடித்து வந்தால் வயிற்றுக் கோளாறு, வயிற்று புண், வாயு கோளாறு உள்ளிட்ட பல்வேறு நெஞ்சக கோளாறுகள் நீங்கும். விந்தணுக்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கேழ்வரகு
மிகக்குறைந்த கொழுப்புப் பொருட்கள் கொண்டது கேழ்வரகு. 100 கிராம் கேழ்வரகில் 1.3 சதவீதமே கொழுப்புச்சத்து காணப்படுகிறது. உடலுக்கு அத்தியாவசிய தாதுப் பொருட்களான கால்சியம், இரும்பு அதீத அளவில் உள்ளன. நியாசின், தயாமின், ரீபோபிளேவின் போன்றபி குழும வைட்டமின்களும் கணிசமாக காணப்படுகின்றன.
இவை ஒவ்வொன்றும் வளர்ச்சிதை மாற்றம், சுரப்பிகளின் செயல்பாடுகள் ஊக்குவிப்பு என பல்வேறு உடற் செயல்களில் பங்கு வகிக்கின்றன. கேழ்வரகில் வலைன், அய்சோலியோசின், டிரையோனைன், லியோசின், மீத்தை யோனைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் வலைன் அமினோ அமிலம் திசுக்களின் சீரான செயல்பாட்டிற்கு உதவி தசைகளை வலுவூட்டுகிறது. உணவு செரிமானத்திற்கும் உதவுகிறது.
அய்சோலியோசின் அமிலமானது ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. டிரையோனைன் அமிலங்கள் உடலில் புரதப் பொருள்களை வளப்படுத்தப் படுகின்றன. மேலும் கல்லீரலில் கெட்ட கொழுப்புகளை சேர விடாமல் பாதுகாக்கின்றன.
-விடுதலை,3.8.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக