நாவல் பழத்தை இளமைபருத்தில் சுவைக்காதவர்களே இருக்க முடியாது. இனிப்பும் புளிப்பும் கலந்த
துவர்ப்பு சுவையுடன் நம்மை பிடித்து இழுக்கும். அதிகம் சாப்பிட்டால் தொண்டை கட்டிக்கொள்ளும் என தெரிந்தும் சாப்பிட்டு அவதிப்படுவோர்கள் உண்டு. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தானாகவே வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகள் கூர்மையானதாக இருக்கும். வெவ்வேறு அளவுகள் கொண்ட இலைகள் வழவழப்பாக அமைந்திருக்கும்.
நாவற்பழம் கருமை கலந்துசிவந்த நிறத்தில் உருளை வடிவத்தில் இருக்கும். தளர்ச்சி அடைந்த நாடி நரம்புகளை ஊக்கப்படுத்தும்.இதன் துவர்ப்பு ரத்தத்தை உண்டாக்கும். தாதுக்களை உரமாக்கும். பழம் குளிர்ச்சி தரும்.
தற்காலத்தில் பெரும்பாடாகபடுத்தி வரும் சர்க்கரைநோய் என்ற நீரிழிவை போக்கும் திறன் படைத்தது. நாவல் பழத்தை உண்பதால் வளிநோய்கள், கரப்பான், புண், நீரிழிவு, குருதிக் கழிச்சல், சுரம் ஆகியவை நீங்கும். இதில் வெள்ளைநாவல், கொடிநாவல், குழிநாவல், கருநாவல், சம்புநாவல் என பல வகையுண்டு.
நாவல் கொழுந்துசாறு ஒரு தேக்கரண்டி இரண்டு ஏலக்காய், லவங்கபட்டைத் தூள் மிளகு அளவு சேர்த்து சாப்பிட சூட்டினால் ஏற்பட்ட கழிச்சல் நிற்கும். செரியரிமை தன்மை மாறி உணவு செரிக்கும். வெள்ளைநாவல் பழத்தை சாப்பிட்டு வரரத்தத்தை பெருக்கும். உடலின் உள்வெப்பத்தை தணிக்கும்.கருநாவல் பழத்தின் சாற்றை பிழிந்து எடுத்து ஒரு கண்ணாடி புட்டியில் ஒரு மாதம் வரை மூடி வைத்திருந்து அதன்பின் அதை எடுத்து 15மிலி அளவில் காலையில் குடித்து வந்தால் நீரிழிவு குறைபாட்டால் உண்டான நீர் வேட்கை நீங்கும்.
சம்புநாவல் பழத்தை சாப்பிட்டு வர நீர்வேட்கையை தணிக்கும்.உடலில் அதிக வெப்பத்தை உண்டாக்கும். விதையைதூள் செய்து வேளைக்கு 2 முதல் 4கிராம் வரை நீரிழிவு நோயாளிக்கு கொடுக்கரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து குணம் ஏற்படும். நாவல்பட்டை , அதே அளவுமாம்பட்டை எடுத்து இடித்து மண்சட்டியில் போட்டு 1 லிட்டர் தண்ணீர் கால் லிட்டராக சுண்டும் வரை கசாயம் செய்து அதில் 30மிலி அளவில் காலை மாலை குடித்து வந்தால் ஆசனவாய் எரிச்சல் குணமாகும். இந்த கசாயத்தில் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும். நோய் குணமாகும் வரை புதியதாக செய்து வரவேண்டும்.
-விடுதலை,3.8.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக