புதன், 8 ஜூன், 2016

விளக்கெண்ணெயின் மருத்துவ குணங்கள்


நமது பாரம்பரிய மருத்துவ நோக்கில், குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத் தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ நின்று பணி யாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு உறங்குவர்.
சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலியைப் போக்க அடி வயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவுவர். கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் என்னும் நம்பிக்கையில் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றுவது உண்டு. ஆனால், கண் மருத்துவர்கள் இது தவறு எனக் குறிப்பிடுகின்றனர்.
சாதாரண மலச்சிக்கலுக்கு இரவில் உறங்கப்போகும் முன்னர் நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி உண்பர். குடல் சுத்திகரிப்புக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிப்பர்.
இதே நோக்கத்தில் சிறு குழந்தைகளுக்கு வலுக்கட்டாய மாக விளக்கெண்ணெய் புகட்டுவது பண்டைய வழக்கம். குடலில் உள்ள சளி போன்ற படலத்தையும் விளக்கெண்ணெய் வெளியேற்றிவிடுவதாகக் கூறி, பேதி மருந்தாக விளக்கெண் ணெய் கொடுப்பதை ஆங்கில மருத்துவர்கள் புறக்கணிக் கின்றனர்.
புதுச்செருப்பு கடிக்காமலிருக்கச் செருப்பின் உட் பகுதி யில் தடவும் எண்ணெயில் விளக்கெண்ணெயே சிறந்ததாகக் கருதப்படுகிறது.
கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்குவிப்பதால் அனைத்து கேசத் தைலங்களிலும் முதலிடம் வகிக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவமுடிகள் வளரவும், கண்களின் மேல் பூச்சாக பயன்படுத்தினால் கண்களுக்கு குளிர்ச்சியூட்டி, தூக்கத்தை வரவழைக்கவும் வல்லது.
விளக்கெண்ணெயுடன் ஆளி விதை மாவைக் கலந்து சிறிது சூடு செய்து, உடலில் தோன்றும் கட்டிகளுக்குப் போட அவை உடைந்து ஆறிவிடும்.
விளக்கெண்ணெய் உடல், கண், மூக்கு, செவி, வாய், இவைகளிலுண்டாகின்ற எரிச்சலை நீக்கும். உடலைப் பொன்னிறமாக்கும். குழந்தைகளைத் தாய் போல் வளர்க்கும். குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் வயிறு கழியக் கெடுப்பதற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதை கைக்குழந்தை, கிழ வயதுடையவர், சூல் கொண்டவர், பிள்ளை பெற்றவர், சீதபேதியால் வருந்துபவர்களுக்கும் அச்சமின்றிக் கெடுக்கலாம்.
பசியின்மை, வயிற்றுவலி இவற்றால் துன்புறுவோருக்கும் இதைத் தரலாம்.
குளிர் காலத்தில் காலில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெயை சூடாக்கி, அதில் மஞ்சள் பொடி சேர்த்து, அந்த விழுதை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி வர சில நாட்களில் சரியாகும்.
உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும்.
கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் 2 பங்கு, தேன் ஒரு பங்கு சேர்த்து உட்கொள்ள கொடுக்க வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும்.
விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் நனைத்து விளக்கில் காட்டி சுட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர, தலைவலி, சளி முதலியன குணமாகும்.
உடலில் ஏதேனும் ஒவ்வாமை அல்லது பூச்சிக்கடியினால் ஏற்படும் தோல் அரிப்புக்கு விளக்கெண்ணையை குடிப்பது அந்த காலத்தில் இருந்த பழக்கமாகும்.


கொழுப்பு சத்தை குறைக்கும் சோம்பு

கொழுப்பு சத்தை குறைக்க கூடியதும், மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டதும், ஞாபக சக்தியை அதிகரிக்கவல்லதும், கண்களை பாதிக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியதும், நச்சுக்களை வெளியேற்ற கூடியதுமான, அத்தியாவசியமான உணவுப்பொருளாக விளங்கி வரும் சோம்பு சுவையும் மணமும் கொடுக்க கூடியது.
இதற்கு பெருஞ்சீரகம் என்ற பெயரும் உண்டு. பல்வேறு நன்மைகளை கொண்ட சோம்பு, இதய நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று கோளாறுகளை சரிசெய்கிறது. கண்களுக்கு பலத்தை தருகிறது. தோலுக்கு நிறத்தை கொடுக்கிறது.
சோம்புவை பயன்படுத்தி ரத்த அழுத்தம், கொழுப்பு சத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: சோம்பு பொடி, மஞ்சள் பொடி, தேன். அரை ஸ்பூன் சோம்பு பொடி, கால் ஸ்பூன் மஞ்சள் பொடியுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.  இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர கொழுப்புச் சத்து, ரத்த அழுத்தம் குறையும். மலச்சிக்கலை போக்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. சோம்பு மூளை நரம்புகளுக்கு பலம் கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
-விடுதலை,28.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக