வெந்தயம் தமிழில் சிறப்பான இடத்தை பெற் றுள்ளது. வேக வைக்கப்பட்ட அயம் என்ற பொரு ளில் வேக வைக்கப் பட்ட இரும்பு என்று இது அழைக்கப் படுகிறது. இரும்பு சத்து மனித உட லுக்கு தேவையான ஒன்றாகும். அந்த இரும்பு சத்தை வெந்தயம் நமக்கு அளிக்கிறது.
இதனால் மனித உடலை இரும்பு போல் ஆக்க கூடிய தன்மை வெந்தயத்திற்கு உள்ளது. அதே போல் வெந்தயத்தின் கீரையும் நமக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. ட்ரேயோனெல்லா ஓயனம் கிரிக்கம் என்ற தாவர பெயரை கொண்டிருக்கும் வெந்தயம், ட்ரைகோ நெல்லின் என்ற மருத்துவ பொருளை கொண்டுள்ளது.
வெந்தயத்தை தினமும் கால் ஸ்பூன் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்பு மற்றும் கால்சியம் சத்து கிடைக்கிறது. வெந்தய கீரையை பயன்படுத்தி இருமல், வயிற்று வலி, மூலம் போன்றவற்றை குணப்படுத்தக் கூடிய மருந்தை தயார் செய்யலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் வெந்தய கீரை, தேன். வெந்தய கீரையின் இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பிடி அளவு எடுத்து இதை நீர் விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர் இதை வடிகட்டி கீரையை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் தேன் சேர்த்து தினமும் எடுத்து வருவதால், உடலில் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலி, காரத்தால் ஏற்படும் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. அதே போல் மூலத்திற்கும் வெந்தயம் மருந்தாக விளங்குகிறது.
இது நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற வற்றையும் வெந்தயம் குறைக்கிறது.
வெந்தய கீரையுடன் அத்தி பழம், உலர் திராட்சையை சிறிது சேர்த்து தேநீராக்கி சாப்பிடுவதால் மார்பு தொடர்பான பிரச்னைகள் விலகும். குறிப்பாக மாரடைப்பு, மூச்சு முட்டுதல், கார்டியாக் ஆஸ்துமா ஆகியவற்றிற்கு இது மருந்தாக பயன்படுகிறது.
செரிமாண உறுப்புகளை சரி செய்து செரிமானத்தை சீராக்குகிறது. இதனால் வயிற்றில் கழிவுகள் சேராமல் சீராவதால், இரத்த ஓட்டம் விருத்தியடைகிறது. இதய நோய் இல்லாமல் போகிறது. இதய நோய் உள்ளவர்கள் வலி ஏற்படும் போது இந்த கஷாயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் வலி குறைகிறது. இவ்வாறு வெந்தயம் நமது உடலுக்கு பல்வேறு பலன்களை அளிக்கிறது.
விடுதலை,28.3.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக