திங்கள், 27 நவம்பர், 2023

காந்தள், செங்காந்த மலர் ஒர் அலசல்

#காந்தள் , #செங்காந்தள் , 
                    #வெண்காந்தள்_மலர் :
                        🔥 ஓர் அலசல்🔥
                                  🧧🧧🧧

🧧#சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகையில் 
அனைத்து நூல்களிலும் 64 இடங்களில் 
இடம் பெற்றுள்ளது #காந்தள்மலர் .

🧧#பத்துப்பாட்டில், மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, நெடுநெல்வாடை நீங்கலாக மற்ற 7 நூல்களிலும் ,
12 இடங்களிலும் இடம் பெற்றுள்ளது.

🧧#தமிழ்நாட்டின் அரசுமலராகவும் 
இது ஏற்கப்பட்டுள்ளது.

🧧#கண்களைப் பறிக்கும் ஒளிரும் வண்ணங்களை உடைய கொடியினம் இது.. இத்தாவரத்தை ‘#கண்வலிப்பூ’ என்றும்
அழைக்கின்றனர். 

🧧#மேலும் இக்கொடியின் வேர்ப்பாகம் 
கலப்பையைப் போன்றிருப்பதால் இதைக்
 ‘#கலப்பைக்_கிழங்கு’ எனவும் அழைக்கின்றனர்.

🧧#இத்தாவரத்தின் கிழங்கினை கார்த்திகை 
மாதங்களில் தோண்டி எடுப்பதால் இதனை ‘#கார்த்திகைக் கிழங்கு’ எனவும் அழைப்பார்கள்.

🧧#இலக்கியங்கள் காந்தல் மலர்களை 
அடையாளம் காட்ட  கீழ்க்கண்டவாறு 
குறிப்பிடுகின்றன :

🧧*வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள்.

🧧*தீயின் அன்ன ஒண் செங்காந்தள்.

🧧*செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்.

🧧*கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்.

🧧*உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்

🧧#சங்க இலக்கிய ஆசிரியர்கள்  காந்தள் மலரை அடைமொழியுடன் இருசொல் பெயரில் 
கீழ்கண்டவாறுபதிவு செய்துள்ளனர் 

🧧#அப்பெயர்களைக் கீழே காணலாம் :

*ஒண்செங் காந்தள்        கபிலர்
*கமழ்பூங் காந்தள்         கபிலர்
*நறவுகுலை காந்தள்      கபிலர்.
*நாறுகுலைக் காந்தள்     கபிலர்

*போது அவிழ் காந்தள்     மருதனார்.

*அலங்குகுலைக் காந்தள்  தங்காற் 
பொற் கொல்லனார்.

சினைஒண் காந்தள் ,மதுரைக் கணக்காயனார்.

*சுடர்ப்பூங் காந்தள்          நக்கீரர்.

*முகைஅவிழ்ந்த காந்தள்   கம்பூர் கிழான்.

*வள்இதழ்க் காந்தள்         பெருங்கௌசிகனார்

*தண்நறுங் காந்தள்          பரணர்

                            
🧧#சங்கஇலக்கியங்களில் காந்தள் பெயர் 
உள்ள  பாடல் அடிகள் : 

🧧#பத்துப்பாட்டு
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1.குறிஞ்சிப் பாட்டு
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம் - 62
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள் - 196
பட்டினப்பாலை
காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன - 153
மலைபடுகடாம்
தீயின் அன்ன ஒண் செங் காந்தள் - 145
காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஒச்சி - 336
வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள் – 519

2.பெரும்பாணாற்றுப்படை
நாடு பல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்குப் - 371,371

3.திருமுருகாற்றுப்படை
சுரும்பும் மூசாச் சுடர்பூங் காந்தட் – 143

4.சிறுபாணாற்றுப்படை
செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும் – 167

5.பொருநராற்றுப்படை
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் - 33
கொழுங் காந்தள் மலர் நாகத்து - 209

🧧#எட்டுத்தொகை
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1.அகநானூறு:

நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தள் -4-15
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில் -18-15
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் -78-8
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண் -92-9
வேங்கை விரிஇணர் ஊதி காந்தள் -132:11
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்  - 108:15
திருமணி உமிழ்ந்த நாகம் காந்தள் -138-17
கடவுட் காந்தளுள்ளும், பலஉடன் -152-17
போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள் -238-17
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது -312-5
சினையொண் காந்தள் நாறும் நறு நுதல்- 338:7
உயர் வரை மருங்கின் காந்தள்அம்சோலைக்368:8

2.ஐங்குறுநூறு:

நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள் - 226:2
நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும் -25:2
மலர்ந்த காந்தள் நாறிக் -259:5
சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன - 293:1
கலித்தொகை
காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின் -39(3):15
எடுத்த நறவின் குலை அலங்காந்தள்  - 40(4):11
தகையவர் கைச் செறித்த தாள்போல் காந்தள்  - 43(7):8
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை- 45(9):2
உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன - 53(17):5
அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் - 59(23):3

3.குறுந்தொகை

குருதிப் பூவின் குலைக் காந்தட்டே  - 1.-4
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் - 76-1
வேங்கையும் காந்தளும் நாறி - 84-4
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக் - 100-3
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் - 167:1
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள் - 185:6
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் - 239:3
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள்  -  259:2
காந்தள்அம்  கொழு முகை, காவல்செல்லாது - 265:1
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்    - 284:3
காலை வந்த முழுமுதற் காந்தள் - 361:4
காந்தள் அம் சிறுகுடிக் கமழும் - 373:7

4.நற்றிணை

மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல் - 14:7
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி - 17:10
நின்ற வேனில் உலந்த காந்தள் - 29:1
பறியாக் குவளை மலரொடு காந்தள் 34-2
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் - 85:10
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப - 161-7
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும் - 173:2
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் - 176:6
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து - 185:8
மெல் விரல் மோசை போல, காந்தள் - 188 -4
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் - 294:7
யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள்
   கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் - 313:6,7
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்
   குலைவாய் தோயும் கொழு மடல் வாழை - 355:2,3
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக - 359:2
காந்தள்அம் கொழு முகை போன்றன சிவந்தே - 379:13
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தன்  - 399:2

5பதிற்றுப்பத்து
சிவந்த காந்தள் முதல்சிதை மூதில் - 15:11
அலங்கிய காந்தள் இலங்குநீரழுவத்து - 21:36
காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் - 30:9
மலர்ந்த காந்தள் மாறாதூதிய - 67:19
காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர் - 81:22

5.பரிபாடல்

மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற - 8:26
சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் - 11:20
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள் - 14:13
போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ--கார் தோற்றும்
    காந்தள் செறிந்த -18:34-35
கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள் - 19:76

6.புறநானுறு

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் - 90:1
யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள் - 144:8
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் - 168:2

7.முல்லைப்ப் பாட்டு *

 'கோடற் குவிமுகை அங்கை அவிழ' -முல்லைப் பாட்டு, வரி 95. கோடல்= காந்தள் ( நன்றி: பேரசிரியர் கு.இராமகிருட்டினன் பேராசிரியர் இராமகிருட்டினன் கு)

எனக்கூறப்பட்டுள்ளது. 

🧧#மேற்கண்ட ‘காந்தள்’ Gloriosa superba என்னும் தாவரவியல் பெயரைக் கொண்டதாகக்
கண்டறியப் பட்டுள்ளது.

🧧#காந்தள் மலரை அதன் தோற்றத்தை
ஒப்பு நோக்கி , கை விரலாகப் பாவித்து
கம்பன் தன் இராமகாதையில் இப்படிக்
குறிப்பிடுகிறான்.
"காந்தளின் மலர்ஏறிக் கோதுவ கவின் ஆரும்
மாந்தளிர் நறு மேனி மங்கை நின்மணிக்கை
ஏந்தின எனல் ஆகும் இயல்பின (2003)

🧧மேலும் சில இடங்களிலும் இந்த ஒப்புமையைக்
கையாண்டிருக்கிறான் கம்பன்.

🧧#காந்தள்மலர் #தமிழ்ஈழத்தின் தேசிய மலராக
அறியப்படுகிறது. மாவீரர்களுக்கு இம்மலர் மூலம்
அஞ்சலி செலுத்தப்படுகிறது.

🧧#தமிழ்நாட்டின் தனிச்சிறப்புமிக்க இம்மலர்
கார்த்திகைத் திங்களில் புத்துக்குலுங்குகின்ற
#குறிஞ்சி நிலப்பூவாகும்.

🧧#இம்மலர் மட்டுமல்லாமல் இதன்,செடி, தண்டு , 
வேர் ஆகியவை
மருத்துவ குணம் கொண்டவை என்றும் 
கூறப்படுகிறது.
.
🧧#இம்மாமலர் போற்றுவோம்.

          🔥(பல்வேறு தரவுகளின் தொகுப்பு இது)🔥
                              🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

                           ⚖️ #துலாக்கோல்/28.11.2023⚖️

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக