ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

முருங்கையின் பயன்கள்!

 

உணவே மருந்து! : முருங்கையின் பயன்கள்!

2022 மருத்துவம் ஜூன் 1-15 2022

முருங்கைக்காய்
முருங்கையில் கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் நார்ச்சத்து, புரதச் சத்து ஆகியவை உள்ளன.
பெண்கள் வாரம் ஒருமுறை முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் அடி வயிற்றுவலி, மேகநோய், ரத்தச்சோகை சரியாகும். மலச்சிக்கலைக் குணமாக்கும் ஆற்றல் முருங்கைக்காய்க்கு உண்டு. உடல் சூட்டைக் குறைக்கும். மூலநோய் உள்ளவர்கள், முருங்கைக்காயை நெய் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.
முருங்கைக்காயில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு, பல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். பித்தப்பை சீராகச் செயல்பட உதவும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. சளி, ஆஸ்துமா, இழுப்பு மற்றும் சுவாசம் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த நிவாரணியாகச் செயல்படும்.
முருங்கை கீரையின் பயன்கள் கோடி..!
முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் விலகியே இருக்கும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், மூட்டு வலிகள், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், செரிமானக் கோளாறு உள்ளிட்ட-வற்றைக் குணப்படுத்தும்.
கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி ஆகியவை நிறைந்திருக்கின்றன. முருங்கைக் காய், இலை, பூ மட்டுமன்றி, பட்டை, வேர், விதை, பிசின் ஆகியவை நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்ப காலத்தி-லேயே நீரிழிவு நோய் அறிகுறிகளில் இருந்து முற்றிலும் காப்பாற்றும். முருங்கை இலை, விதை, வேர் இவற்றில் காயங்களை ஆற்றும் தன்மைகள் உள்ளன. காயங்களில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது. முருங்கை இலையைப் பொடி செய்து உண்டு வந்தால், அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்கள் செல்களில் சேதத்தை தடுக்கிறது. மன அழுத்தம், வீக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது – உயிர் அணுக்கள் சேதமா-வதைத் தடுக்கவும் உதவுகிறது. முருங்கை இலைப் பொடியில் பல்வேறு வகையான அழற்சி எதிர்ப்பு மூலக்கூறுகள் இருப்பதால் இதய நோய்கள் ஈ ஆர்த்தரிட்டிஸ், எடை அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்குத் தீர்வாக உள்ளது.முருங்கை இலைப் பொடி மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
முருங்கைப் ‘பூ’வின் மருத்துவப் பயன்கள்
முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இரு வேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும். அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்புத் தளர்ச்சி உண்டாகும். முருங்கைப் பூ கொதிநீர் வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
முருங்கைப் பிசின்
உடலை வலுப்படுத்த, உடலை இறுக்க, உடலை நல்ல ஒரு கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இந்த முருங்கை பிசின் மிகவும் நல்லது. முருங்கைப் பிசினை ஒன்றிரண்டாகப் பொடித்து, நெய்யில் வறுத்து தூள் செய்வது மிக எளிது. இந்தத் தூளை இரவு நேரத்தில் கொதிக்கின்ற நீரில் போட்டு அப்படியே வைத்திருந்து அதிகாலையில் வடித்து சாப்பிட்டால், உடல் வலுப்பெறும்.
நாம் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று உடலைத் தேற்றக்கூடிய ஒரு சூழல் உண்டு. இது எதுவுமே செய்யத் தேவையில்லை அதிகாலை ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி செய்து இந்த முருங்கைப் பிசினை ஊறவைத்து அப்படியே சாப்பிட்டுவிட்டு, பழ உணவை காலை உணவாக எடுத்து வந்தீர்கள் என்றால் அற்புதமான உடற்கட்டு, உடல்வாகு கிடைக்கும்.ஸீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக