ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

கசப்பான பாகற்காயின் இனிப்பான தகவல்கள்!

 


2022 ஜூன் 16-30 2022

சமையலில் பயன்படுத்தும் பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்கள் விரும்பும் படி அதை எவ்வாறு சமைக்கலாம் மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
பாகற்காயில் மிதிபாகல், கொடிப் பாகல் என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டும் ஒரே மாதிரி பலன்கள் தருகின்றன. பாகற்காய் வயிற்றில் உருவாகும் பூச்சிகளை அழித்துவிடும். குடல் புழுக்களை நீங்க வைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
கல்லீரல், கண்நோய், பக்கவாதம் ஆகிய நோய்களைக் கட்டுக்குள் வைக்கும். தினமும் பாகற்காய் சாற்றோடு, சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தி வர, ரத்தம் சுத்தமாகும். சொறி, சிரங்கு இருந்தால் ஆறிவிடும்.
பாகற்காய் சாறு, தேன் சிறிது கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, ரத்த சோகை, காச நோய் கட்டுக்குள் வரும். நிவாரணம் கிடைக்கும்.
பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள் பொடிபோட்டுப் பிசறி சிறிதுநேரம் கழித்து எடுத்துப் பிழிந்தால் கசப்புச் சுவை போய்விடும். பிறகு சமைக்கலாம்.
நறுக்கி, மோரில் உப்பு சேர்த்து ஊற வைத்து, காய வைத்தால் சுவையான பாகற்காய் வற்றல் தயார். சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது கடலை மாவு, அரிசி மாவு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்துப் பிசைந்து, போண்டாவோ, பக்கோடாவோ செய்யலாம்.
மற்ற ஊறுகாய்கள் செய்வது போன்றே, பாகற்காயிலும் ஊறுகாய் செய்யலாம். பல மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காயை விதவிதமாகச் சமைத்து சாப்பிட்டால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக