ஞாயிறு, 16 அக்டோபர், 2016

புற்றுநோயைத் தடுக்கும் கேரட்


அல்சரை குணப்படுத்த கூடியதும், பார்வை திறனை அதிகரிக்கவல்லதும், புற்றுநோய் வராமல் தடுக்க கூடிய தன்மை கொண்டது.  அன்றாடம் ஒரு கேரட் சாப்பிட்டு வருவது நல்லது. பல்வேறு சத்துக்களை கொண்ட கேரட் கேன்சரை தடுக்கவல்லது. இதில், மருத்துவ வேதிப் பொருட்கள் அதிகம் உள்ளன. கேரட்டை பயன் படுத்தி பார்வை திறனை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம்.
கேரட்டை சுத்தப்படுத்தி, அதன் தோலை சீவிவிட்டு நீர் அதிகம் சேர்க்காமல் சாறு எடுக்கவும். 50 மில்லி கேரட் சாறுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து குடிக்கவும்.
பார்வை கோளாறு உள்ளவர்கள் கண்களை பலப்படுத்த இந்த சாறை குடித்துவந்தால் கண் நரம் புகள் பலப்படும். கண் பார்வை தெளிவாக இருக்கும். ரத் தத்தை சுத்திகரிக்கும். கேரட்டில் உள்ள கெரோட் டின் என்ற வேதிப் பொருள் கண், தோல், எலும்புகளுக்கு பலம் தருகிறது. கேரட்டை பயன் படுத்தி வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். முட்டை கோசை நீர்விடாமல் அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் கேரட் சாறு சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வயிறு உப்புசம் சரியாகும். அல்சர் குணமாகும்.
கேரட் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நச்சுக்களை வெளியேற்றி கேன்சர் வராமல் தடுக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கேரட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.
குழந்தைகளுக்கு கேரட் சாறு கொடுக்கும்போது ஏலக்காய், பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் பச்சை வாடை இல்லாமல் இருக்கும். குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். 
-விடுதலை,8.816

திங்கள், 10 அக்டோபர், 2016

தெரிந்து கொள்ளுங்கள் கொள்ளு மரு(க)த்துவத்தை...


கொள்ளு ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளு ஊற வைத்து சாப் பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள் ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த நீர்க்கோர்வை குணமா கும்.
உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக் கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும்.
பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.
குதிரைகள் பலமைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந் ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். கொள்ளு உட லில் இருக்கும் கொழுப்பு ஊளைச்சதை யைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. குழந்தை களுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போய்விடும்.
அப்படி ஒரு அருமையான மருத்துவகுணம் இந்த கொள்ளுக்கு உண்டு. வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதா னவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். குளிர்காலத்தில்தான் அதிகம் சளிபிடிக்கும். அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது. சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடை யைக் குறைக்கும். அதைவிட ராத்திரி ஒரு கைப் பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார் கள். கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
கொள்ளுவை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமை யாக இருக்கும். இப்படி செய்ய முடியாத வர்கள் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.
-விடுதலை,18.7.16

கல்லீரல் கோளாறுகளை போக்கும் பப்பாளி

உணவில் அதிகமான காரம், எண்ணெய் பொருட்கள், காலம் தவறி சாப்பிடுவது, இரவு நேரத் தில் அதிக நேரம் விழித்திருப் பது போன்றவற்றால் உடல் உஷ்ணமாகி கல்லீரல் கெட்டுப் போகிறது. மது குடிப்பது, நீரில் கலந்து வரும் நச்சுக்கள், கிருமிகள் போன்றவற்றால் ஈரல் கோளாறு ஏற்படுகிறது. எளிதில் கிடைக்க கூடிய சுக்கு, மிளகு, சீரகம், பப்பாளி, வெங் காயம் போன்றவை கல்லீரலை பலப்படுத்தும், நோயை தடுக் கும் மருந்தாக அமைகிறது.
பப்பாளியை பயன்படுத்தி கல்லீரல் நோய்களை குணப் படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பப்பாளி, சீரகம். பப்பாளி பழத்தை பசையாக அரைத்து, 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகப் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வாரம் ஒருமுறை எடுத்து கொண்டால் கல்லீரல் பாதிப் பது தடுக்கப்படும். மஞ்சள் காமாலையின் அளவு குறை யும்.
தொற்றினால் வரும் மஞ்சள் காமாலைக்கு இது மருந் தாகிறது. ஈரல் வீக்கத்தை வற் றிப்போக செய்கிறது. கல்லீரல், ஈரல் பலப்படுவதுடன் நன்றாக செயல்படும். பப்பாளியில் உள்ள வேதிப்பொருள், உட லுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
வெங்காயத்தை கொண்டு கல்லீரலில் ஏற்படும் கொழுப்பை குறைக்கும் மருந்து தயாரிக் கலாம். சின்ன வெங்காயத்தை தோல்நீக்கி பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்க வும். இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால் கல்லீரலில் உள்ள கொழுப்பு குறையும். இந்த மருந்தில் உப்பு, சர்க்கரை சேர்க்க கூடாது. ரசாயன மருந்து களால் கல்லீரல் கெட்டு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. ஈரலை பாதுகாக்கும் மருந்தாக வெங்காயம், மிளகு விளங்கு கிறது. நாவல் பழத்தை பயன் படுத்தி கல்லீரல் வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: நாவல்பழம், சுக்குப்பொடி. நாவல் பழத்தின் சதை பகு தியை எடுக்கவும். இதனுடன், கால் ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஒரு மாதம் குடித்து வந்தால், கல்லீரல் வீக்கம் குறைய ஆரம்பிக்கும். ஈரலில் வீக்கம் ஏற்பட்டால், வயிறு கனத்து போகும். உடல் சிறுத்து கை கால்கள் மெலிந்து காணப் படும்.
முகம் ஒட்டிப்போகும். வயிறு, காலில் வீக்கம் ஏற் பட்டு பசியின்மை இருக்கும். இந்நிலையில், கல்லீரல் வீக்கத்துக்கு நாவல் பழம் அற்புத மருந்தாகிது. கல்லீரல் பிரச்சினைகளை தவிர்க்க அசைவ உணவுகள், காரம் ஆகியவற்றை அளவுடன் எடுத்துக்கொள்வது அவசியம்.


ஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்

சிறுநீரகக் கல் ஒரு கடின மான படிக கனிம பொருள். சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் உருவாகும் கற்களே சிறுநீரில் ரத்தம் வருவதற்கு ஒரு பொதுவான காரணமாகும். இடுப்பு பக்கவாட்டிலும் வலி வருவதற்கு காரணமாகும். யாருக்கு வேண்டுமானலும் கற் கள் உருவாகலாம். ஆனால் சில நோய்கள் மற்றும் நிலைப் பாடு காரணமாக மருந்து எடுத்து கொள்பவர்கள் மிகவும் பாதிக் கப்படுகின்றனர்.
சிறுநீர்க் குழாய் கற்கள் பெண் களை காட்டிலும் ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது. ஏற்கெ னவே சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது, மீண்டும் உருவாகும் சாத்தியம் உள்ளது. குடும்ப வரலாறும் சிறுநீரகக் கற்கள் வருவதற்கு காரணமாகிறது. பெரும்பாலான கற்கள் கால்சியத்தால் உருவா னவை மற்றும் யூரிக் அமிலம், மெக்னீசியம், அமோனியத்தால் உருவானவை. சிறுநீர் ஓட்டத் தின் அடைப்பும் கல் உருவாவ தற்கு வழிவகுக்கும்.
கீல்வாதம் நம் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை அதிகரித்து யூரிக் அமில கற்கள் உருவாக்க வழிவகுக்கும்.  சிறு நீரகத்தில் அதிக கால்சியம் காரணமாகவும் கற்கள் ஏற்பட லாம். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள் பட்ட நோய்களும், கற்கள் வள ரும் ஆபத்தும் அதிகரிக்கும். குடல் அழற்சி நோய் இருப்ப வர்களுக்கு கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.  குடல் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் சிறுநீரகக் கற்கள் அதிகரிக்க ஆபத்துள்ளது.
-விடுதலை,18.7.16

தலைவலியை குணப்படுத்தும் கறிவேப்பிலை


நலம் தரும்  மருத்துவத்தில், கறிவேப்பிலை, சீரகம், வெந் தயம் போன்றவற்றை கொண்டு தலைவலியை போக் கலாம்.  உணவு முறை மாற்றத்தால் தலைவலி பிரச்சினை ஏற்படுகிறது. ஒற்றை தலைவலியாக இருந்தால் அது மிகவும் வேதனையை கொடுக்கிறது. இதனால் மயக்கம், வாந்தி போன்றவை ஏற்படும். முறையாக சாப்பிட்டு வந்தால் தலை வலி வராது. போதிய அளவு தூங்க வேண்டும். செரிமானம் ஆகாத பொருட்களை சாப்பிடக் கூடாது. குறிப்பாக, இரவு நேரத்தில் கீரை, தயிர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
வெந்தயத்தை பயன்படுத்தி தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், தேன். வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி செய்து, அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில், நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
களிபதத்தில் வந்தவுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை, 48 நாட்களுக்கு ஒருவேளை சாப்பிட்டுவர தலைவலி குணமாகும்.  அடிக்கடி தலைவலி ஏற்படுவதற்கு மலச்சிக்கல், தூக்கமின்மை, செரிமானமின்மை ஆகியவை காரணமாகிறது. இப்பிரச்சினைகளுக்கு வெந்தயம் மருந்தாகிறது. இது இரும்பு, நார்ச்சத்து மிகுந்தது. சீரகத்தை பயன்படுத்தி ஒற்றை தலைவலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: சீரகம், நெல்லி வற்றல், பனங்கற்கண்டு. அரை ஸ்பூன் சீரகம் எடுக்கவும். இதனுடன் ஊறவைத்த நெல்லி வற்றல் தண்ணீருடன் சேர்க்கவும். அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர தலைவலி குணமாகும்.
ரத்த அழுத்தத்தினால் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது. இதற்கு சீரகம், நெல்லி வற்றல் மருந்தாகிறது. சீரகத்தால் ரத்த அழுத்தம் சீராகி தலைவலி சரியாகிறது.   கறிவேப்பிலையை பயன்படுத்தி தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம்.  தேவை யான பொருட்கள்: கறிவேப்பிலை, பேரிச்சம் பழம், தேன்.
கறிவேப்பிலையை நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த பசையை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில், 2 பேரிச்சம் பழத்தை துண்டுகளாக்கி போடவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி சிறிது தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர தலைவலி குண மாகும்.  கறிவேப்பிலையில் மிகுதியான இரும்பு சத்து உள்ளது. உடலுக்கு ஊட்டச்சத்தாக விளங்குகிறது. திடீரென அடிபடும் போது வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அதற்கு தீர்வுகாணும் மருத்துவத்தை பார்க்கலாம்.
புளியை சிறிது எடுத்து கரைத்து, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை அடிபட்ட இடத்தின் மேலே பூசுவதால் வெகு விரைவில் ரத்தக்கட்டு கரையும். வலி, வீக்கம் குறையும். 
விடுதலை,11.7.16

அவரையின் மருத்துவ குணங்கள்


ஒரு கப் அவரையில் நாள் ஒன்றுக்கு நமக்குத் தேவையான  எனும் Folate வைட்டமின்சத்து 44% உள்ளது. இந்த Folate   சத்துதான் மரபணுக்களின் உற்பத்திக்கும், செல்களின் வளர்ச் சிக்கும், அமினோ அமிலங்களின் தயாரிப்புக்கும் உதவுகிறது. கருவில் வளர்கிற குழந்தைகளுக்கும் ஊட்டச் சத்தினை தருவதற்கு Folate அவசியம்  என்பதை மருத்துவர்கள் அறிவார்கள்.
இதனால் கரு உருவாவதற்கு முன்போ, கருவுற்ற பின்போ தாய்மார்கள் அவரைப்  பிஞ்சினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும். குறைப் பிரசவம், குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள், முதுகுத்தண்டு வளர்ச்சியில் ஏற்படும்  குறைபாடுகள் போன்ற வற்றை இதனால் வராமல் தடுக்க முடியும்.
கருவிலிருக்கும் குழந்தைக்கும் ஆரோக்கியம் தரும்  உணவு அவரை என் பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.  Folate  சத்து நிறைந் திருப்பதைப் போலவே, நாள்  ஒன்றுக்கு நமக்குத் தேவைப் படும் இரும்புச்சத்திலும் 33% அளவு ஒரு கப் அவரையில் இருக்கிறது. இதனுடன் உடல் முழுவதும் பிராண வாயுவைக் கொண்டு செல்லும் பணிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி தரவும், உடல்  உஷ்ணம் பெருக்கவும்,
மூளையினின்று செல்லும் மின் சமிக்ஞைகளை சீராகச் செலுத்தவும் அவரை முக்கிய காரணியாக  விளங்குகிறது என்று கூறினால் அது மிகையில்லை. மேலும், அவரையில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்த சிவப்பு  அணுக்கள் உருவாகவும் பெரும் உதவி செய்கிறது. பாக்டீரியா எனும் நோய் செய்யும் நுண் கிருமிகளை அழிக்கும் பணிக்கு உதவும் ரத்த வெள்ளை அணுக்களுக்குப்  புத்துணர்வு தருவதாகவும் இரும்புச்சத்து விளங்குகிறது என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.
உடல் சீராக  இயங்குவதற்குத் தேவையான என்ஸைம் எனும் மருத்துவ வேதிப் பொருட்கள் துத்தநாகச்சத்தை அடிப் படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. இதனால்தான் சீரான வளர்ச்சி பெறுவதுடன், உடல் ஊனம் மற்றும் நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் வராமல்  காப்பதற்குத் துத்தநாகச் சத்து உதவுகிறது.
அந்த துத்தநாகம் அவரையில் மிகுந்து உள்ளது. இறுதியாகச் சொல்ல வேண்டும்  என்றால் ஒரு கப் அவரையில் ஒரு மனிதனுக்குத் தேவையான 15% சத்தினை பெறலாம் என்பது ஆய்வுகளின் முடிவு. ஒரு கப் அவரையில் 36 கிராம் நார்ச்சத்து உள்ளது எனத் தெரிய வருகிறது.
இந்த நார்ச்சத்து  உறுப்புகளைச் சீராக இயங்க வைக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதோடு, உடலில் தன்னிச்சையாகச் செயல்பட்டு நாளடைவில் புற்று நோயாக  உருவாகும் மாசுக்கள் உடலில் தங்காத வண்ணம் வெளியேற்ற உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கே உரித்தான  மலச்சிக்கல் தீரவும் அவரை அருமருந்தாகிறது.அவரையில் பொதித்துள்ள புரதச்சத்தும், நார்ச்சத்தும் ஒருங்கே சேர்ந்து  உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. இது உடலில் சேர்ந்த கொழுப்புச்சத்தை வெளியேற்றவும் உதவுகிறது. இதனால்  இதய நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் இதயம் சீராகச் செயல்படுவதற்கும் ஏதுவாகிறது.
அவரை மருந்தாகும் விதம்
* அவரை இலையைச் சாறு எடுத்து அதை ஒரு துணியில் நனைத்து நெற்றிப் பற்றாகப் போட்டு வைத்திருக்க சிறிது  நேரத்தில் தலைவலி தணிந்து போகும்.
* அவரை இலையை அரைத்துப் பசையாக்கி நாட்பட்ட ஆறாப் புண்களின் மேல் பற்றாகப் போட்டு வைத்தாலோ அல்லது  அவரை இலையைச் சாறு பிழிந்து புண்களைக் கழுவி வந்தாலோ புண்கள் விரைவில் ஆறிப் போகும். * அவரை இலைச்சாற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து நன்றாகக் கலந்து அதனோடு போதிய விளக்கெண்ணெய்  சேர்த்துக் குழைத்து புண்கள், அடிபட்ட காயங்கள், வீக்கங்கள் இவற்றின் மேல் பூசி வைக்க விரைவில் வந்த வடு  தெரியாமல் காயங்கள் மறைந்து போகும்.
* அவரை இலையைச் சாறு பிழிந்து அதனுடன் கற்கண்டு சேர்த்து இனிப்பாக்கி 10 முதல் 15 கிராம் அளவுக்கு உள்ளுக்கு  அந்தி சந்தி என இருவேளை சாப்பிட்டுவர ஓரிரு நாட்களில் சீதபேதி, நாட்பட்ட வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு  ஆகியன குணமாகும்.
* அவரை இலையை நசுக்கிச் சாறு பிழிந்து அதனோடு சிறிது மஞ்சள் சேர்த்துக் குழைத்துப் பூசி வைக்க நமைச்சல், எரிச்சல், சிவந்த நிறம் போன்ற தொல்லைகள் தருகிற சரும நோய்கள் பலவும் குணமாகும். வேர்க்குரு போன்ற  துன்பங்கள் கூட விலகி ஓடும்.
* அவரைக்காயைச் சமைத்தோ அல்லது சூப்பாகவோ செய்து வளரும் இளஞ்சிறார்களுக்குக் கொடுத்து வர நல்ல  ஞாபகசக்தியும் உடல் ஆரோக்கியமும் பெற்று வளர் வார்கள்.நம் வீட்டுத் தோட்டத்தில் சாதாரணமாக செழித்து வளரும்  அவரைக்கு இத்தனை சக்தியா என்று ஆச்சரியம் எழுகிறதுதானே?!

உடல் வலியை போக்கும் மஞ்சள்பொடி
உடல் சோர்வு அடையும்போது, வலி ஏற்படும். நீர் வற்றாமல் பார்த்துக் கொண்டால் உடல் வலியை போக்கலாம். ஓய்வில்லாத உழைப்பு, கிருமிகள் தொற்றால் வரும் காய்ச்சல் போன்றவற்றால் உடல் வலி ஏற்படும்.
மேலும், தசைகளுக்கு அதிக வேலை கொடுப்பதாலும், ஊட்டச்சத்து இல்லாததாலும் உடல் வலி ஏற்படுகிறது. மஞ்சள் பொடியை பயன்படுத்தி உடல் வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் மஞ்சள் பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து இரவு நேரத்தில் குடித்துவர நல்ல உறக்கம் ஏற்படும். உடல் வலி சரியாகும்.
மஞ்சள் மகத்தான மருத்துவ குணங்களை பெற்றது. புத்துணர்வு தர கூடியது. மஞ்சள் பொடி வலி நிவாரணியாக விளங்குகிறது.
-விடுதலை,11.7.16