ஞாயிறு, 16 அக்டோபர், 2016

புற்றுநோயைத் தடுக்கும் கேரட்


அல்சரை குணப்படுத்த கூடியதும், பார்வை திறனை அதிகரிக்கவல்லதும், புற்றுநோய் வராமல் தடுக்க கூடிய தன்மை கொண்டது.  அன்றாடம் ஒரு கேரட் சாப்பிட்டு வருவது நல்லது. பல்வேறு சத்துக்களை கொண்ட கேரட் கேன்சரை தடுக்கவல்லது. இதில், மருத்துவ வேதிப் பொருட்கள் அதிகம் உள்ளன. கேரட்டை பயன் படுத்தி பார்வை திறனை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம்.
கேரட்டை சுத்தப்படுத்தி, அதன் தோலை சீவிவிட்டு நீர் அதிகம் சேர்க்காமல் சாறு எடுக்கவும். 50 மில்லி கேரட் சாறுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து குடிக்கவும்.
பார்வை கோளாறு உள்ளவர்கள் கண்களை பலப்படுத்த இந்த சாறை குடித்துவந்தால் கண் நரம் புகள் பலப்படும். கண் பார்வை தெளிவாக இருக்கும். ரத் தத்தை சுத்திகரிக்கும். கேரட்டில் உள்ள கெரோட் டின் என்ற வேதிப் பொருள் கண், தோல், எலும்புகளுக்கு பலம் தருகிறது. கேரட்டை பயன் படுத்தி வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். முட்டை கோசை நீர்விடாமல் அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் கேரட் சாறு சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வயிறு உப்புசம் சரியாகும். அல்சர் குணமாகும்.
கேரட் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நச்சுக்களை வெளியேற்றி கேன்சர் வராமல் தடுக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கேரட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.
குழந்தைகளுக்கு கேரட் சாறு கொடுக்கும்போது ஏலக்காய், பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் பச்சை வாடை இல்லாமல் இருக்கும். குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். 
-விடுதலை,8.816

திங்கள், 10 அக்டோபர், 2016

தெரிந்து கொள்ளுங்கள் கொள்ளு மரு(க)த்துவத்தை...


கொள்ளு ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளு ஊற வைத்து சாப் பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள் ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த நீர்க்கோர்வை குணமா கும்.
உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக் கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும்.
பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.
குதிரைகள் பலமைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந் ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். கொள்ளு உட லில் இருக்கும் கொழுப்பு ஊளைச்சதை யைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. குழந்தை களுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போய்விடும்.
அப்படி ஒரு அருமையான மருத்துவகுணம் இந்த கொள்ளுக்கு உண்டு. வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதா னவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். குளிர்காலத்தில்தான் அதிகம் சளிபிடிக்கும். அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது. சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடை யைக் குறைக்கும். அதைவிட ராத்திரி ஒரு கைப் பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார் கள். கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
கொள்ளுவை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமை யாக இருக்கும். இப்படி செய்ய முடியாத வர்கள் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.
-விடுதலை,18.7.16

கல்லீரல் கோளாறுகளை போக்கும் பப்பாளி

உணவில் அதிகமான காரம், எண்ணெய் பொருட்கள், காலம் தவறி சாப்பிடுவது, இரவு நேரத் தில் அதிக நேரம் விழித்திருப் பது போன்றவற்றால் உடல் உஷ்ணமாகி கல்லீரல் கெட்டுப் போகிறது. மது குடிப்பது, நீரில் கலந்து வரும் நச்சுக்கள், கிருமிகள் போன்றவற்றால் ஈரல் கோளாறு ஏற்படுகிறது. எளிதில் கிடைக்க கூடிய சுக்கு, மிளகு, சீரகம், பப்பாளி, வெங் காயம் போன்றவை கல்லீரலை பலப்படுத்தும், நோயை தடுக் கும் மருந்தாக அமைகிறது.
பப்பாளியை பயன்படுத்தி கல்லீரல் நோய்களை குணப் படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பப்பாளி, சீரகம். பப்பாளி பழத்தை பசையாக அரைத்து, 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகப் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வாரம் ஒருமுறை எடுத்து கொண்டால் கல்லீரல் பாதிப் பது தடுக்கப்படும். மஞ்சள் காமாலையின் அளவு குறை யும்.
தொற்றினால் வரும் மஞ்சள் காமாலைக்கு இது மருந் தாகிறது. ஈரல் வீக்கத்தை வற் றிப்போக செய்கிறது. கல்லீரல், ஈரல் பலப்படுவதுடன் நன்றாக செயல்படும். பப்பாளியில் உள்ள வேதிப்பொருள், உட லுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
வெங்காயத்தை கொண்டு கல்லீரலில் ஏற்படும் கொழுப்பை குறைக்கும் மருந்து தயாரிக் கலாம். சின்ன வெங்காயத்தை தோல்நீக்கி பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்க வும். இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால் கல்லீரலில் உள்ள கொழுப்பு குறையும். இந்த மருந்தில் உப்பு, சர்க்கரை சேர்க்க கூடாது. ரசாயன மருந்து களால் கல்லீரல் கெட்டு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. ஈரலை பாதுகாக்கும் மருந்தாக வெங்காயம், மிளகு விளங்கு கிறது. நாவல் பழத்தை பயன் படுத்தி கல்லீரல் வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: நாவல்பழம், சுக்குப்பொடி. நாவல் பழத்தின் சதை பகு தியை எடுக்கவும். இதனுடன், கால் ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஒரு மாதம் குடித்து வந்தால், கல்லீரல் வீக்கம் குறைய ஆரம்பிக்கும். ஈரலில் வீக்கம் ஏற்பட்டால், வயிறு கனத்து போகும். உடல் சிறுத்து கை கால்கள் மெலிந்து காணப் படும்.
முகம் ஒட்டிப்போகும். வயிறு, காலில் வீக்கம் ஏற் பட்டு பசியின்மை இருக்கும். இந்நிலையில், கல்லீரல் வீக்கத்துக்கு நாவல் பழம் அற்புத மருந்தாகிது. கல்லீரல் பிரச்சினைகளை தவிர்க்க அசைவ உணவுகள், காரம் ஆகியவற்றை அளவுடன் எடுத்துக்கொள்வது அவசியம்.


ஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்

சிறுநீரகக் கல் ஒரு கடின மான படிக கனிம பொருள். சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் உருவாகும் கற்களே சிறுநீரில் ரத்தம் வருவதற்கு ஒரு பொதுவான காரணமாகும். இடுப்பு பக்கவாட்டிலும் வலி வருவதற்கு காரணமாகும். யாருக்கு வேண்டுமானலும் கற் கள் உருவாகலாம். ஆனால் சில நோய்கள் மற்றும் நிலைப் பாடு காரணமாக மருந்து எடுத்து கொள்பவர்கள் மிகவும் பாதிக் கப்படுகின்றனர்.
சிறுநீர்க் குழாய் கற்கள் பெண் களை காட்டிலும் ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது. ஏற்கெ னவே சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது, மீண்டும் உருவாகும் சாத்தியம் உள்ளது. குடும்ப வரலாறும் சிறுநீரகக் கற்கள் வருவதற்கு காரணமாகிறது. பெரும்பாலான கற்கள் கால்சியத்தால் உருவா னவை மற்றும் யூரிக் அமிலம், மெக்னீசியம், அமோனியத்தால் உருவானவை. சிறுநீர் ஓட்டத் தின் அடைப்பும் கல் உருவாவ தற்கு வழிவகுக்கும்.
கீல்வாதம் நம் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை அதிகரித்து யூரிக் அமில கற்கள் உருவாக்க வழிவகுக்கும்.  சிறு நீரகத்தில் அதிக கால்சியம் காரணமாகவும் கற்கள் ஏற்பட லாம். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள் பட்ட நோய்களும், கற்கள் வள ரும் ஆபத்தும் அதிகரிக்கும். குடல் அழற்சி நோய் இருப்ப வர்களுக்கு கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.  குடல் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் சிறுநீரகக் கற்கள் அதிகரிக்க ஆபத்துள்ளது.
-விடுதலை,18.7.16