உணவில் சிறந்தது முள்ளங்கி. வெள்ளை, சிவப்பு ஆகிய இரு நிறங்களில் விளைச்சலாகின்றது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் பல நோய்களுக்கு மருந்தாகிறது. முள்ளங்கியில் ஒரு வித காரத்தன்மையும் நெடியும் இருக்கும். இத்தன்மை கந்தகச்சத்தால் உண்டாகிறது. இந்த கந்தக்க கூறுகளே அதன் மருத்துவத் தன்மைக்கு காரணமாகின்றன. முள்ளங்கியில் உள்ள நார் சத்து மலச்சிக்கலை நீக்கவல்லது. குடலில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கும் முள்ளங்கி சிறந்த மருந்தாகும். இதில் வைட்டமின் ஈ சத்து அதிகமுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சிறந்த கிருமி நாசினியாகவும் உடல் வலிகளை நீக்கும் சக்தி கொண்டதாகவும் இருக்கிறது. புற்றுநோய் உள்ளவர்கள் முள்ளங்கியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவேண்டும். சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்க உதவுகிறது. முள்ளங்கியில் உள்ள நீர் சத்தானது உடலுக்கு குளிர்ச்சியையும், வெப்பத்தை தாங்கும் தன்மையையும் அதிகரிக்கிறது. ஆஸ்துமா, மூச்சிரைப்பு, சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு கபம் தோன்றும். அதனை முள்ளங்கி வெளியேற்றும். தொண்டைக் கட்டையும், மூக்கு தொண்டை பகுதியில் ஏற்படும் தொற்றுநோய்களையும் முள்ளங்கி குணப்படுத்தும். முள்ளங்கி சாறு 30 மில்லியுடன் சிறிது நீர் கலந்து அரை சிட்டிகை மிளகு தூளும் சேர்த்து பருகினால் கபம் வெளியேறும்.
நமது உடலில் முக்கிய பங்காற்றும் கல்லீரலுக்கு முள்ளங்கி சிறந்த நண்பன். இதிலுள்ள கந்தக சத்துக்கள் பித்த நீரை சீராக சுரக்கச் செய்யும். இதனால், கொழுப்பு மற்றும் மாவு சத்துகள் நன்றாக சீரனமாகும். பித்தப்பையில் கற்களும் தோன்றாது.
இரத்ததில் கெட்ட கொழுப்புகள் சேர்வதும் தடுக்கப்படும் இரத்தத்தில் பிராணவாயுவும் அதிகமாகும். ஜீரண தொந்தரவு இருப்பவர்கள் அடிக்கடி உணவில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளவேண்டும். சிறுநீரக செயல்பாட்டுக்கு முள்ளங்கி அவசியமானதொன்று. தினமும் 50 மி முள்ளங்கி சாற்றை சிறிது நீர் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் வெளியேறும். சிறுநீரக தொற்றும் நீங்கும். இதிலுள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரை அதிகப்படுத்தி வெளியேற்றும் அதனால் உடலில் உள்ள கழிவுகள் நீங்கும். வீக்கம், உடல் வலியும் போக்கும். இதில் போலிக் ஆசிட் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பக்காலத்தில் உண்டாகும் இரத்த அழுத்தம் நீங்கும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவை மட்டுப்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் முள்ளங்கியை ‘சாலட்’ செய்து சாப்பிடலாம். உடல் எடையை குறைக்க வேண்டியவர்கள் இதனை அதிகம் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். சருமத்தை பொலிவாக்கி இளமையை பாதுகாக்கவும் செய்கிறது. எளிதில் வாங்கக்கூடிய இக்காயை வெயிலில் உழைக்கும் மக்கள் அதிகம் சாப்பிட்டு கோடைக்காலத்தில் வரும் நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம் சிவப்பு முள்ளங்கியிலும் மேற்கண்ட அனைத்துச் சத்துகளும் இருக்கின்றன.
- உண்மை இதழ், 1-15.5.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக