நாம் அன்றாட சமையலுக்கு பொதுவாக பயன் படுத்தக்கூடிய மசாலாக்கள் உணவில் சுவை கூட்டுவதாகவும், சத்து நிறைந்த உணவாகவும் கருதப்படுகிறது.
கொத்தமல்லி
சமையலுக்கு சிறந்த நண்பனாக உதவி புரிவது கொத்தமல்லி விதைகள். இதை சமையலில் தனியாக பயன்படுத்தாமல் மசாலா பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர். கொத்தமல்லி விதைகள் ஆயுர் வேதத்தில் உடல் மற்றும் மனதை சமநிலைப்படுத்து வதற்காகப் பயன்படுத்துகின்றனர்..
ஆரோக்கியமான உடலுக்கு நன்மை சேர்க்கும் கொத்தமல்லி விதைகள் செரிமான பிரச்சினையை தவிர்த்து மூச்சுப் பிரச்சினைகள், சிறுநீர் கோளாறுகள், பித்தம் அதிகமாவதால் ஏற்படக்கூடிய தோல் வியாதி ஆகியவற்றை சரி செய்கிறது. பித்தம் அதிகமாகி பித்த வாந்தி ஏற்பட்டால் கொத்தமல்லி விதைகளை இடித்து போட்டு காபி குடித்தால் பித்தம் தெளியும்.
இஞ்சி
பெரும்பாலானோர் வீட்டில் இஞ்சி இல்லா சமையலை காண்பது அரிது. சமையலறையில் இருக்கவேண்டிய மிக முக்கியமான ஒரு நறுமணப் பொருள் இஞ்சி. இது உணவிற்கு சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் பயன்படுகிறது.
சிறந்த மருந்து என அழைக்கப்படும் இஞ்சியானது கபம் மற்றும் வாதம் தீவிரமடைவதால் ஏற்படக்கூடிய மூச்சு பிரச்சினைகளுக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.
காய்கறிகள் மற்றும் பயறுகள் உட்கொள்வதால் நமது உடலில் ஏற்படக்கூடிய உற்சாகத்தை, நறுமணப் பொருளான இஞ்சி நமக்கு தருகிறது. மேலும் சளி, இருமலை குணப்படுத்தக்கூடிய மூலிகைத் தேநீராகவும் பயன்படுத்தபடுகிறது.
சீரகம்
இது பெரும்பாலும் சுவையைக் கூட்டுவதற்காக ஊறுகாய் மற்றும் குழம்பு வகைகளில் சேர்க்கப்படும் நறுமணப் பொருளாக உள்ளது. இது செரிமானக் கோளாறைப் போக்கி கிருமிநாசினியின் தூண்டியாக செயல்படுகிறது. அதாவது உடலில் திரட்டப்பட்ட நச்சு களை சுத்தப்படுத்தும்போது அவற்றிலிருந்து வெளி யாகும் சிறந்த சத்துக்களை உறிஞ்சி நமது உடலைப் பாதுகாக்கிறது. கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாட்டை இது மேம்படுத்துகிறது.
வெந்தயம்
உடல்நலத்திற்குத் தேவைப்படும் சிகிச்சைமுறை பண்புகளை மிகச்சிறப்பாக கொண்டுள்ளது வெந்தயம். இந்த வெந்தயமானது செரிமானம், மூச்சுக் கோளாறு, நரம்பு மற்றும் மாதவிடாய் கோளாறுகளை சீர்படுத்த பெரிதும் பயன்படுகிறது, மேலும் தோல்களை தூய்மைப் படுத்துகிறது.
எடைக்குறைப்புக்கு மிக எளிய முறையில் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத் தண்ணீரை குடிப்பதால் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இந்திய சமையலில் வெந் தயத்தை வாசனைப்பொருளாகவும் பயன்படுத்துவார்கள்.
மஞ்சள்
இந்தியாவின் குங்குமப்பூ என்று மஞ்சளை குறிப்பிடுகிறார்கள். கசப்பை கட்டுபடுத்தக்கூடிய காரமான வாசனை கொண்ட மஞ்சள் பல மருத்துவ குணங்களைக் கொண் டுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுப் பொருள்களை அழிப்பதில் மஞ்சளுக்குப் பெரிய பங்குண்டு. டைப் 2 நீரிழிவுக்காரர்களுக்கும் மஞ்சள் சிறந்த மருந்து.
மஞ்சளானது இன்சுலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது குளூக்கோஸ் கட்டுப்பாட்டை ஒரே அளவில் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடம்பில் எந்த இடத்தில் புண் வந்தாலும் வீக்கத்தைக் குறைத்து விரைவில் ஆற வைப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. மஞ்சள் மிகச் சிறந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட் மருந்தாகும்.
நாம் சாப்பிடுகிற உணவுப் பொருள்களின் வழியே உள்ளே செல்கிற நச்சுக் கிருமிகளை அழித்து, நம் ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது
* உணவருந்திய பின்னர் புகையிலை சேர்க்காமல், வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து அதனை வாயில் மென்று சாற்றை விழுங்குவது செரிமானத் திற்கு நல்லது. பசு நெய் அளவோடு சேர்ப்பது மிகவும் நல்லது.
-விடுதலை,25.8.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக