திங்கள், 11 டிசம்பர், 2017

ஏலக்காயின் பயன்கள்




வாசனைக்காக மட்டும் மசாலா டீ மற்றும் பாயாசத்தில் நாம் சேர்த்துக் கொள்ளும் ஏலக்காயில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அதிலும் குறிப்பாக ஏலக்காயைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரை குடிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம், செரிமானக் கோளாறு போன்ற பல பிரச்சினைகள் தீரும்.

ஏலக்காயில் இருக்கும் கிருமி நாசினிகள் வாய்ப் புண் போன்ற வாய் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். மேலும் வாய் துர்நாற்றத்தை சரி செய்ய பல வழிகளில் முயற்சித்து ஓய்ந்து போய்விட்டீர்களா, கவலையே வேண்டாம் இந்த ஏலக்காய் தண்ணீர் துர்நாற்றத்தை நீக்குவதோடு உங்களது வாயை மணக்க வைக்கும். ஏலக்காயை அப்படியே வாயில் போட்டு மெல்வதன் மூலம் கூட செரிமான கோளாறுகள் சரியாகும், ஆனால் அதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். அதுவே ஏலக்காய் கொதிக்க வைத்த தண்ணீரை நீங்கள் குடிப்பதன் மூலம் ஒரே வாரத்தில் உங்களின் செரிமான திறன் அதிகரிக்கும் என்பது உறுதி.

சுவாசம் மற்றும் மூச்சுக் குழாய் பிரச்சினைக்கு இது ஒரு நல்ல சிகிச்சை முறையாகும்.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உள்ள வர்கள் தினமும் இந்த நீரைக் குடிப்பதன் மூலம் இதயத் துடிப்பு சீராகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஏலக்காயில் இருக்கும் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் ரத்த சோகை மற்றும் அது தொடர்பான பிற கோளாறு களை சரி செய்யும்.

இவற்றைத் தவிர மன அழுத்தத்தைக் குறைப்பது, ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை குறைப்பது, புற்றுநோய் வராமல் தடுப்பது, ரத்த அழுத்தத்தைச் சரி செய்வது என இன்னும் பல நன்மைகளை இந்த ஏலக்காய் தண்ணீரின் மூலம் நாம் பெறலாம்.

பொதுவாகவே உடலில் நீர் சத்து குறையாமல் இருக்கத் தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். வெறும் தண்ணீரை குடிப்பதை விட அதில் இவ்வாறு ஏலக்காய்  சேர்த்து குடிப்பது அதிக பலனை தரக்கூடும் என்பதை நினைவில்  கொள்ள வேண்டும்.
- விடுதலை நாளேடு,11.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக