கபம், வீக்கம், குளிர்ச் சுரம் இவைகளைத் தணிக்க... ஆமணக்கு எண்ணெய் இனிப்பானது. இது விபாகத்திலும் இனிப்பு. இது சீக்கிரமாக வேலை செய்கிறது. இது உஷ்ண மானதும், கனமானதும் ஆகும்.
இது கபம், வீக்கம், குளிர்ச் சுரம் இவைகளைத் தணிப்பதில் பயனுடையதாக இருக்கிறது. உபயோகங்கள்: குழந்தைகளுக்குப் பேதிக்கு கொடுக்கின்ற மருந்துகளில் மிக உத்தமமானது இது. இதை நாள்தோறும் ஒரு தேக்கரண்டி அளவு தாய்ப்பாலிலேனும், பசும் பாலிலேனும் கலந்து கொடுக்கலாம். வயிற்றினுள் ஏற்படும் வீக்கமான நிலையில், இதை மிகவும் பாதுகாப் பான மலப் போக்கியாகக் கொடுக்கலாம்.
ஆயுர்வேத மருத்துவர்கள், சிற்றாமணக்கு எண்ணெயை ஆமவாத நோயில், நோய்க்குரிய மருந்தாகக் கருதப்படுவது ஏனெனில், அது உடலினுள்ள விஷத்தன்மையை வெளிப்படுத்த உதவி செய்கின்றது. வெளிப் பிரயோகத்தில், தோலின் வெடிப்புகட்கும், பிளவுகட்கும், பாதங்களின் எரிச்சலுக்கும் பயன்படுகிறது.
சுண்ணாம்பையும், விளக் கெண்ணெயையும் கலந்து பசையாக சிரங்குகட்கு வெளிப்பிரயோகமாகப் போடலாம். கட்டிகளுக்குப் போட அவை பழுத்து உடையும். சிற்றாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டிவரப் பெண்களுக்குப் பால் சுரக்கும்.
இலைகளைச் சிறுக அரிந்து, சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வதக்கித் தாங்கக்கூடிய சூட்டில், வேதனையுடன் கூடிய கீல்வாதங்கட்கும், வாத ரத்த வீக்கங்கட்கும் ஒற்றட மிடலாம். இதனால் வேதனை தணியும். சிற்றாமணக்கு இலையையும், கீழா நெல்லியையும் சமபாகமெடுத்து அரைத்துச் சிறு எலுமிச்சங்காய் அளவு மூன்று நாளைக்குக் காலையில் மாத்திரம் கொடுத்து, நான்காம் நாள் 3 அல்லது 4 முறை வயிறு போவதற்குரிய அளவு சிவதைச் சூரணம் கொடுக்க காமாலை தீரும்.
மலக்கட்டும், வயிற்று வலியும் உள்ளபோதும், சூதகக் கட்டு அல்லது சூதகத் தடையுடன் அடிவயிற்றில் வலி காணும்போதும், அடிவயிற்றின்மீது சிற்றாமணக்கு எண்ணெயை இலேசாகத் தடவி, அதன் மீது சிற்றாமணக்கு இலையை வதக்கிப் போட்டுவர, அவைகள் குணப்படும்.
முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதை தடுக்கலாம்
மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகிவிட்டது. இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரிசமப்படுத்தி சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதய நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள். அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களைவிட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது. அதன்மூலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக