ஞாயிறு, 12 ஜூலை, 2015

சீந்தில் - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘சீந்தில் சூப்’

மாற்றம் செய்த நாள்:
ஞாயிறு, ஜூலை 12,2015, 2:35 PM IST
பதிவு செய்த நாள்:
ஞாயிறு, ஜூலை 12,2015, 2:35 PM IST,தினத்தந்தி
அமிர்த்தவல்லி, சோமவல்லி என்ற பெயர்களால் அழைக்கப்படும் சீந்தில் கொடி, காய கற்ப மூலிகைகளில் ஒன்று. இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை
கொண்டதாகவும் இருக்கிறது.

சீந்தில் கொடி மரங்களில் பற்றி வளரும். இலை இதய வடிவில் இருக்கும். சிவப்பு நிறத்தில் சிறு பழங்கள் இதில் தோன்றும். இதன் இலை, தண்டு, வேர் போன்ற அனைத்து பாகங்களுமே மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

சீந்திலில் பல தாவர வேதியியல் சத்துகள் அடங்கியுள்ளன. அதில் உள்ள தாவர ஸ்டிராய்டுகள், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் போன்ற தாதுகள் இதன் சிறப்பான மருத்துவ குணத்திற்கு காரணமாக இருக்கின்றன.

சீந்தில் உடலில் உள்ள வாதம், பித்தம் மற்றும் கப தன்மையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இந்த மூலிகையில் இருக்கும் கசப்புத்தன்மை  உடலில் அதிகரிக்கும் சூட்டை (பித்தத்தை) சிறந்த முறையில் குறைக்க உதவுகிறது. நோயினால் இழந்த உடல் சக்தியை மீண்டெடுக்க சீந்தில் உதவுவதால் இதற்கு அமிர்த்தவல்லி என்ற சிறப்பு பெயர் வழங்கப்பட்டுள்ளது. இது உடலை தேற்றி, உள்ளுறுப்புகளுக்கும், இனப்பெருக்க உறுப்புகளுக்கும் பலம் அளிக்கிறது.

சிலருக்கு காய்ச்சல் விட்டுவிட்டு வந்து கொண்டிருக்கும். அவர்களுக்கு சீந்தில் சிறந்த மருந்தாகும். டைபாய்டு, மலேரியா காய்ச்சல்கள் குணமான பின்பு, உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியத்தை மீட்டுத் தரும் முக்கிய மூலிகையாகவும் இது திகழ்கிறது. காய்ச்சலை குணப் படுத்த தயார் செய்யப்படும் மருந்துகளில் இது முக்கிய மூலிகையாக சேர்க்கப்படுகிறது.

* சீந்தில் தண்டினை 20 கிராம் அளவுக்கு எடுத்து, 200 மி.லி. நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி எடுங்கள். அத்துடன் 5 கிராம்புவை பொடி செய்து கலந்து, 50 மி.லி. வீதம் மூன்று வேளை குடித்து வரவேண்டும். குடித்தால் கடுமையான காய்ச்சலால் ஏற்பட்ட சோர்வு, வலி போன்றவை நீங்கும்.

சீந்தில் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் உள்ள திசுக்களை சீரமைக்க உதவுகிறது. பசியின்மையை நீக்குகின்றது. ரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது. வயிற்று கோளாறுகள் மற்றும் அஜீரணத்தை போக்குகிறது. புற்று நோய் கட்டிகளை கரைக்கும் தன்மையும் சீந்திலுக்கு உண்டு. புற்று நோய் கீமோ சிகிச்சைக்கு முன்பும், பின்பும் சீந்தில் சார்ந்த மருந்துகளை நோயாளிகள் சாப்பிடலாம்.

* சீந்தில் கொடியை 20 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள். கொத்த மல்லி விதை மற்றும் சோம்புவை ஒரு தேக்கரண்டி வீதம் எடுங்கள். சிறு துண்டு அதிமதுரத்தையும் சேருங்கள். இவை அனைத்தையும் 200 மி.லி. நீரில் போட்டு கொதிக்கவிடுங்கள். இதனை 50 மி.லி. வீதம் பருகிவந்தால் நாள்பட்ட வயிற்று கோளாறுகள், ஈரல் நோய்கள், ஜீரண பிரச்சினைகள் நீங்கும். உடலுக்கு பலம் கிடைக்கும்.

சிறுநீரகத்தில் படியும் யூரிக் அசிட் போன்ற கழிவுகளையும் சீந்தில் சிறந்த முறையில் நீக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, நீடித்த ஒவ்வாமை காரணமாக அடிக்கடி சளி, இருமல், தும்மல், கண்களில் அரிப்பு, கண்ணீர் வடிதல் மற்றும் உடல் சோர்வு போன்றவை ஏற்படும். தொண்டை தசை வளர்ச்சி,  மூக்கடைப்பு போன்ற தோற்றுகளும் உண்டாகும். அவைகளுக்கு சீந்தில் சிறந்த மருந்து. இதை தொடர்ந்து பயன்படுத்தினால் உடலில் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும். நீடித்த ஒவ்வாமையும் நீங்கும்.



உடல் சூடு காரணமாக உண்டாகும் மேக நோய்களை சீந்தில் நீக்கவல்லது. நீடித்த தோல் நோய்கள் மற்றும் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல், சிறுநீர் பாதையில் தோன்றும் புண்கள், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், பால்வினை நோய்களுக்கும் இது மருந்தாகின்றது.

சர்க்கரை நோயாளிகளுக்கு சீந்தில் மிக சிறந்த மருந்து. இது பல ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றும். கை, கால் மரத்து போகும். பாதங்களில் எரிச்சல் தோன்றும். நரம்புகள் பலமிழக்கும். இத்தகைய பிரச்சினைகளை சீந்தில் போக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கவும் உதவும்.

சர்க்கரை நோயாளிகள் வேறு மருந்துகள் உட்கொள்ளும்போது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை சாப்பிடவேண்டும்.

சீந்தில் இலைகளை வதக்கி, மூட்டு வலிகளுக்கு ஒத்தடமிடலாம். சிலருக்கு தோள்பட்டை மூட்டுகளை சுற்றியுள்ள தசைகள் வலுவிழந்து  மூட்டுகள் நழுவி விடும். அதனால் கடுமையான வலி உண்டாகும். இதற்கு சீந்தில் இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது உளுந்து மாவு கலந்து மூட்டுகளை சுற்றி பற்று போடவேண்டும். போட்டால் தசைகள் இறுகும். வலி நீங்கும். மூட்டு வலி மற்றும் ‘கவுட்’ எனப்படும் கால் கட்டை விரல் வீக்கத்திற்கும் இந்த பற்று போடலாம்.

சீந்தில் தண்டுகளில் மாவு சத்து உள்ளது. அதிலிருந்து ‘சீந்தில் சர்க்கரை’ தயாரிக்கப்படுகிறது. இது சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும். இது பல நோய்களுக்கு சிறந்த மருந்தாகின்றது.

இதை 500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரை எடுத்து நீரில் கலந்து சாப்பிட்டால் பலவித நாள்பட்ட நோய்கள் நீங்கும். உடல் வலிமை பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் சாப்பிடவேண்டும்.

ஸ்பெஷல் டீ

சீந்தில் தண்டு – 50 கிராம்

மிளகு தூள் – ½ தேக்கரண்டி    மிளகு தூள் – ½ தேக்கரண்டி

உப்பு – தேவைக்கு

தண்ணீர் – 300 மி.லி.

செய்முறை: பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் எல்லா பொடிக

சீரகம் – 1 தேக்கரண்டி  

பனங்கற்கண்டு – 1 தேக்கரண்டி

நீர் – 500 மி.லி.  

செய்முறை: சீந்தில் கொடியை நன்கு நசுக்கி, நீரில் கொதிக்க வைத்து, அத்துடன் மிளகுதூள், சீரகம் கலந்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவேண்டும். அதனை வடிகட்டி, சுவைக்கு பனங்கற்கண்டு கலந்து பருகவேண்டும்.

இந்த டீயை பருகினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஜீரணம் மேம்படும். மலச்சிக்கல் தீரும். இதை தினம்  100 மி.லி. பருகி வரலாம்.


ஸ்பெஷல் சூப்

சீந்தில் சர்க்கரை – 1 கிராம்

வெந்தய பொடி – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலைபொடி – ½ தேக்கரண்டி

செய்முறை: பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் எல்லா பொடிகளையும் இட்டு கொதிக்க வைத்து, தினம் 100 மி.லி. பருக வேண்டும். சர்க்கரை நோயால் உண்டாகும் கை, கால் எரிச்சல், பாதங்களில் உண்டாகும் மதமதப்பு, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு போன்றவை நீங்கும். சர்க்கரையின் அளவும் குறையும்.

டாக்டர் இரா. பத்மப்ரியா (சித்த மருத்துவர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக