தகவல் களஞ்சியம்
மாணவர்களுக்கு ஞாபகசக்தி அதிகரிக்க...
வல்லாரை, வில்வ இலை இரண்டையும் சம அளவு எடுத்து, நன்றாக சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி, பொடி செய்யவும். இதை 5 கிராம் வீதம் 50 மில்லி பசும்பாலில் கலந்து, காலை, மாலை என இரு வேளையும் உண்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.
தினமும் 5 வல்லாரை இலைகள் எடுத்து, அதனுடன் ஒரு மிளகை சேர்த்து நன்றாக மென்று தின்று வந்தாலும் ஞாபகசக்தி அதிகரிக்கும்.
******
கருப்பை கோளாறு நீங்க...
அசோக மரத்துப் பட்டையை நன்றாக அரைத்து, சாறு பிழிந்து அதை வடிகட்டி, ஒரு டேபிள் ஸ்பூன் வீதம் தினமும் இரண்டு வேளைகள் அருந்தி வந்தால், கருப்பை கோளாறுகள் நீங்கும். அசோக மரத்திலிருந்து சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் ‘அசோக அரிஸ்டம்’, ஹோமியோபதி மருத்துவத்தில் தயாரிக்கப்படும் ‘அசோக ஜானேசியா’ உள்ளிட்டவை, கருப்பை கோளாறுகளைப் போக்க வல்லன.
******
தேமல் மறைய...
வெற்றிலையையும் வெள்ளைப் பூண்டையும் சம அளவு எடுத்து, நீர்விட்டு அரைத்து, அதைத் தேமலின் மீது பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இவ்வாறு சில நாள்கள் செய்து வந்தால் தேமல் மறையும்.
******
சிறுநீரகக் கற்கள் கரையணுமா?
தொட்டாஞ்சிணுங்கி இலைகள், காய்களை சிறிதளவு பறித்து, அப்படியே அதை பச்சையாக உண்டால் சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும். வாழைத்தண்டுச் சாறும் தினமும் காலையில் அருந்தலாம். வாழைத்தண்டில் கூட்டு, பொரியல், சாலட் என்று செய்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தில் ‘சிஸ்டோன்’ எனும் மாத்திரையால் சிறுநீரகக் கற்கள் சீக்கிரம் கரையும். தவிர, வாழைத்தண்டை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகா.
******
தகுந்த வயது வந்தும் பருவம் அடையாத பெண்களுக்கு...
வேலிப்பருத்தி இலைகள் 10, அதனுடன் 10 மிளகைச் சேர்த்து அரைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் ஏழு நாள்கள் விழுங்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், பருவம் அடையாத பெண் பருவமடைவாள். ஹோமியோபதி மருத்துவத்தில் ‘பல்சடில்லா’ என்னும் மருந்து உள்ளது. இந்த மருந்தை இரண்டு வாரங்கள் எடுத்துக் கொண்டாலும் பெண் பருவமடைவது நிச்சயம். ஹோமியோபதி மருத்துவரை அணுகி, அவரிடம் இந்த மருந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
- உண்மை இதழ் 16 -30. 10 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக