திங்கள், 3 செப்டம்பர், 2018

எண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ!



வாழைப்பூவில் துவர்ப்பு சுவை கொண்ட வாழைப்பூ பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கிறது. சுவைக்கும், ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து உண்கிறோம். வாழைப்பூ குருத்தினை பச்சையாகவே சாப்பிடுகிறவர்களும் உண்டு என்கிறார் சித்த மருத்துவர் பானுமதி.

இன்றைய நவநாகரிக வாழ்க்கையில் மனிதனை வாட்டும் பல நோய்களுள் சர்க்கரை நோய் முக்கிய மானது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் தூண்டப் பெற்று சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதன் துவர்ப்பு சுவையானது, ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்றுகிறது. இதனால் சர்க்கரையின் அளவு குறைகிறது.

சிலருக்கு மலம் கழிக்கும்போது கூடவே ரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை ரத்த மூலம் என்று அழைப்பர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் ரத்த மூலம் விரைவில் குண மாகும்.

வாழைப்பூவில்  கொழுப்புச்சத்து இருப்பதால், அது ரத்தக் குழாய்களில்  கொழுப்பினால் வரக்கூடிய இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. மூளை மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதில் வாழைப் பூவானது பெரும் பங்கு வகிக்கிறது. இதில் நார்ச்சத்து மிக அதி களவில் காணப்படுவதால் மலச் சிக்கல் உண்டாகாமல் பார்த்துக் கொள்கிறது. வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும்.

-  விடுதலை நாளேடு, 3.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக