திங்கள், 22 ஜனவரி, 2018

இரத்தத்தில் கொழுப்பைக் குறைக்கும் கரும்பு


மஞ்சள் காமாலை நோய்க்குக் கரும்புச் சாறு அருந்தச் சொல்வது தொன்றுதொட்டு பின்பற்றப் படுகிறது.

கரும்பு கசத்தால் வாய்க்குற்றம் எனும் வழக்கு மொழியே உண்டு. அதாவது, கரும்புச் சாறு இனிப்பாக இருக்க, அதைச் சுவைக்கும்போது கசப்புச் சுவை தட்டினால் செரிமான சுரப்புகளின் செயலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனப் பொருள்.

பெரும்பான்மையான செரிமானச் சுரப்புக்கள் சுரக்க, கல்லீரலே முதல் காரணமாய் இருக்கும். கல்லீரல் நன்கு செயல்புரியவும், செரிமானச் சுரப்புக்கள் நன்கு சுரக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது.

மேலும், கரும்பில் உள்ள பாலிகோசனால் எனும் இயற்கையான வேதிப்பொருள் ரத்தத் தட் டணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக் கூடிய ரத்த உறைவைத் தடுப்பதுடன், ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் பண்பையும் கொண்டுள்ளது.

உடலில் அதிகரித்த பித்தத்தை கரும்பு சமநிலைப்படுத்தும். சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும். உடல் சூட்டைக் குறைக்கும் குணம் உடையது கரும்பு.

செங்கரும்பினில் முழுமையாக குளுக்கோஸ் மட்டுமே நிறைந்திருக்கும். வெண் கரும்பில் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை அதிகம் உள்ளது. ஆக வெண்கரும்பு, நீரிழிவு நோ யாளிகள் உட்பட எல்லோருக்குமான தேர்வாக இருக்கும். செங்கரும்பு, சிறுவர்களுக்கும் நீரிழிவு நோய் இல்லாதவர்க்கும் ஏற்றது.

கரும்பில் வைட்டமின் சத்தும் கனிமச் சத்தும் பெருமளவில் இல்லை என்றாலும் நம் உடலுக்குத் தேவையான அளவு கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன. இவை தவிர, உடலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கரும்பில் அதிக அளவில் உள்ளன.ஆலும் வேலும் மட்டுமல்ல கரும்பும் பல்லுக்கு உறுதிதான்.
- விடுதலை நாளேடு, 22.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக