கொழுப்பைக் குறைக்கும் திறன் கொய்யாவுக்கு உண்டு. தினமும் 2 கொய்யாப்பழங் கள்சாப்பிட்டு வந்தால் தேவை யில்லாத உடல் எடையைக் குறைக்க முடியும்.
சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா உதவும். அதேபோல், தைராய்டு பிரச்னையைத் தடுக்கவும் கொய்யா மாமருந்து. வைட்டமின் சி அதிகம் கொண்ட கனி இது.
சளித்தொல்லையிலிருந்தும், குடல் தொடர்புடைய குறைகளை நிவர்த்தி செய்யவும் கொய்யா சரியான தேர்வு. பார்வைத் திறனை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஏ-வும் கொய்யாப்பழத்தில் அதிகம்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறவர் களும், பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புகிற வர்களும் கொய்யாவோடு நட்புறவு வைத்து கொள்வது நல்லது.
உடலின் திசுக்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராக சண்டை யிடும் குணம் கொண்டது கொய்யா. கொய்யாப்பழத்தை வெட்டிச் சாப்பிடுவதைவிட கடித்துச் சாப்பிடுவதே முழுமையான பலனைத் தரும்.
-விடுதலை,13.2.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக