திங்கள், 20 பிப்ரவரி, 2017

வீடுகளில் வளர்க்க 6 தாவரங்களுக்கு தடை



சென்னை, பிப்.18 இந்தி யாவில் இயற்றப்பட்ட வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972-இல் வன உயிரினங்கள் எண் ணிக்கை, அவற்றின் முக்கியத் துவம் அடிப்படையில் பட் டியல்-1 முதல் பட்டியல்- 6 வரை என வகைப்படுத்தப் பட்டு அவற்றை வேட்டை யாடவே, வேட்டையாட முயன் றாலே சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த 6 வகை பட்டியல் களில் தெரிவிக்கப்பட்ட உயிரி னங்கள் அனைத்தும் பாதுகாக் கப்பட வேண்டிய வன உயி ரினங்களாகக் கருதப்படுகின்றன. இதில், 6-ஆவது பட்டியலில் 6 அரிய வகை தாவரங்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த 6 தாவரங்களும் பாதுகாக்கப்பட வேண்டிய வன உயிரினங்களாகக் கருதப் படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலரும், வன உயிரின ஆராய்ச்சியாளருமான வெங்க டேஷ் கூறியதாவது:

இயற்கைச் சூழலில் தானாக வளரும் அனைத்து உயிரினங் களையும் வன உயிரினங்கள் எனலாம். அதனால், வன விலங்குகளைப் போல் வனப் பகுதிகளில் அரிதாகக் காணப் படுவதால் சைகஸ் பெட்டேமி (மதன காமராஜா அல்லது ஏந்த பனை), புளூ வாண்டா, ரெட் வாண்டா, குத், லேடி சிலீப்பர் ஆர்கிட், குடுவை பூச்சி உண் ணும் தாவரம் (குடுவை தாவரம்) ஆகிய 6 வகை அரிய தாவரங்களும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் பட் டியல் 6-இல் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த தாவரங்களைச் சேக ரிக்க வேண்டுமெனில் தலைமை வன உயிரினக் காப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் இந்தத் தாவரங்களை வாங்கவோ, விற்கவோ, ஏற்றுமதி செய் யவோ, வீடுகளில் வளர்க்கவோ முற்றிலும் தடை செய்யப்பட் டுள்ளது. இந்த தாவரங்களை வீட்டில் வைத்திருப்பதும் குற் றமாகவே கருதப்படுகிறது.

சைகஸ் பெட்டேமி தாவரம் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி மற்றும் கடப்பா மலைப் பகுதிகளில் மட்டுமே உள்ளது. மருந்துகளுக்கு இந்தத் தாவரம் அதிகமாக பயன் படுத்தப்படுவதால் அழிந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த மலைப் பகுதிகளைச் சுற்றி தொடர்ச்சியாக ஏற்படும் காட்டுத் தீயாலும் இவை அழிந்து வருகின்றன.
மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே காணப்படும் ரெட் வாண்டா தாவரத்தின் பூக்கள் பார்ப்பதற்கு அழகாகவும், ரம்மியமாகவும் இருக்கும். இத் தாவரம் காஸ்டல் என்று மற் றொரு பெயரிலும் அழைக்கப் படுகிறது. காஷ்மீர் மலைகள் மற்றும் மேற்குத் தெடர்ச்சி மலைப் பகுதிகளில் சுமார் 2,500 முதல் 3,000 மீட்டர் உய ரத்தில் வளரும் தன்மை கொண் டது. இத்தாவரத்தின் வேர் பாரம்பரியமாக மருந்து மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிக் கவும் பயன்படுத்தப்படுகிறது.

குடுவை என்னும் பூச்சி உண்ணும் தாவரத்தின் இலை ஒரு குடுவை போல் இருக்கும். இதனுள் ஒரு வகை திரவம் நிரம்பியிருக்கும். பூச்சிகள் இந்த தாவரத்தில் அமரும்போது குடுவை போன்ற இலைக்குள் இருக்கும் திரவத்தால் ஈர்க்கப் பட்டு குடுவைக்குள் அந்த பூச்சி வழுக்கி விழுந்துவிடும். மூழ்கும் பூச்சிகள் திரவத்தில் உள்ள வேதியியல் நொதிப் பொருட்களால் கரைக்கப்படும். இந்த கரைக்கப்பட்ட கரைசல் அமினோ அமிலமாக மாற்றப் படும். இதை தாவரம் தன் வளர்ச்சிக்காக எடுத்துக்கொள் ளும். இந்தத் தாவரம் காடு களில் அரிதாக காணப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-விடுதலை,18.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக