*சுண்டைக்காயை காய்ச்சல் நேரத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன், காயங் களையும், புண்களையும் ஆற வைக்கும். மேலும் வாயுப்பிடிப்பு பிரச்சினை உள்ளவர் களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.
*ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புச் சளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள் தினம் இருபது சுண்டை வற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட வேண்டும். நோய் கட்டுப்படும்.
*வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்றுக் கோளாறு களுக்கு சிறந்த மருந்தாகும்.
*சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்புச் சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது.
*பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும். பெண்களுக்கு நல்லது.
*குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச் சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக் காய் உதவும். குழந்தையாக இருக்கும் போதே அவர்களுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிடப் பழக்க வேண்டும்.
*சுண்டைக்காயை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டு விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக