ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

பீட்ரூட் - நோய் தடுக்கும் பீட்ரூட்

பீட்ரூட்டில் இருக்கும் சத்துகள்
(100 கிராம் அளவில்)
புரதம் _ 1.7 கிராம்
கொழுப்பு  _ 01. கிராம்
தாது உப்புகள்  _ 0.8 கிராம்
நார்ச்சத்து  _ 0.9 கிராம்
கால்சியம் _ 200 மி.கி.
மெக்னீசியம்  _ 9 மி.கி.
பாஸ்பரஸ்  _ 55 மி.கி.
இரும்புச்சத்து  _ 0.4. மி.கி.
சோடியம்  _ 59.8 மி.கி.
பொட்டாசியம்  _  43 மி.கி.
காப்பர்  _ 0.20 மி.கி.
சல்பர்  _ 14 மி.கி.
தயாமின்  _ 0.04 மி.கி
ரைபோஃப்ளோவின்  _ 0.09 மி.கி.
நயாசின்  _ 0.4 மி.கி.
வைட்டமின்_சி  _ 88 மி.கி. 
பீட்ரூட்டில் இருக்கும் சத்துகளின் பயன்கள்:
¨    இரத்த சுத்தி செய்யும்.
¨    இதய நோய் வராமல் தடுக்கும்.
¨    உயர் ரத்த அழுத்தம் வராமலிருக்க உதவும்.
¨    மூப்பைத் தள்ளிப்போடும்.
¨    நோய் எதிர்ப்புத் திறனைக் கொடுக்கும்.
¨    அல்ஸைமர் எனும் மறதி நோய் வராமல் தடுக்கும்.
¨    எலும்புகள் பலப்பட உதவும்.
¨    ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க உதவும்.
¨    மாதவிடாய்க்கு முன் வரும் குழப்பம், எரிச்சல் போன்றவை வராமல் தடுக்கும். (Premenstrual Syndrome)
¨    தசைகள் பலப்பட உதவும்.
¨    நரம்புத் தளர்ச்சி வராமல் இருக்க உதவும். பீட்ரூட் நோய்வளித்தாக்க எதிர்க்காரணிகள் நிறைந்தது. இதை பச்சையாக சாப்பிடும்போது அதிக பலன் கிடைக்கும்.
¨    பீட்ரூட்டில் இல்லாத வைட்டமின்_ஏ அதன் இலைகளைக் கீரைபோல உண்ணும்போது கிடைக்கும்.
வாங்கும்போது தேர்ந்தெடுப்பது எப்படி?
¨    பசுமையாக இருப்பதை வாங்குவது நல்லது.
¨    நல்ல அடர்ந்த சிவப்பு நிறம் இருக்க வேண்டும்.
¨    வாடி வதங்கி இருப்பதைத் தவிர்த்தல் நலம்.
¨    மேலே கரும்புள்ளிகள் இல்லாததை தேர்ந்தெடுக்க வேண்டும்.
வாங்கியதை அன்றே உண்ணும்போது நோய் வளித்தாக்க எதிர்க்காரணிகள் அதிகம் இருக்கும். குளிர் சாதனப் பெட்டியில் வைத்து சில நாட்கள் கழித்து உபயோகிக்கும்போது ஓரளவு குறையலாம்.
பீட்ரூட்டைக் கொண்டு என்னென்ன செய்யலாம்?
¨    சூப்பாக செய்து தரலாம்.
¨    சட்னியை அரைக்கும்போது பீட்ரூட் சேர்த்தும் செய்யலாம்.
¨    துவையல் மிகவும் சுவையாக இருக்கும்.
¨    குழம்பு மிகவும் சுவையானது. ஆனால், நிறம் மட்டும் பார்க்க சிவப்பாக இருக்கும்.
¨    துருவியோ, சிறியதாக அரிந்தோ வதக்கல் கறி செய்யலாம்.
¨    அல்வா செய்வது மிக எளிது. சுவையும் நன்கு, எல்லோரும் விரும்பும் வண்ணம் இருக்கும்.

¨    இனிப்புப் பச்சடியும் செய்யலாம். பல விருந்துகளில் இப்பொழுது பரிமாறப்-படுகின்றது.
¨    இனிப்பு சாலட், பல காய்கறிகள் கலந்த சாலட் செய்து பார்த்தால் சுவை புரியும்.
¨    பீட்ரூட் கட்லெட், டிக்கி என விதவிதமாகச் செய்யலாம்.
¨    துருவிய பிறகு சப்பாத்தி மாவில் கலந்து கார சப்பாத்தி, குழந்தைகளுக்கு இனிப்பு சப்பாத்தி என்றும் தரலாம்.

¨    குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் பூரி, சப்பாத்தி, தோசை, பணியாரம் செய்ய கீரை, கேரட் போன்றவற்றை உபயோகப் படுத்துவதைப் போல பீட்ருட்டையும் உபயோகிக்கலாம்.
¨    நேரடியாக பலவிதமான காய்கறிகளைக் கலந்து விதவிதமான ‘மாக்டெயில்ஸ்’ எனப்படும் இயற்கைச் சாறுகளை செய்ய முடியும். அதன்மூலம் அதிக சத்துகளைப் பெற முடியும்.
¨    தயிர்ப் பச்சடியும் செய்யலாம்.
¨    பீட்ருட் ரசமும் சுவையாக இருக்கும்.
¨    மத்தியில் ஸ்டப்பிங்காக வைத்து ஸ்டப்டு சப்பாத்தி செய்யலாம்.
¨    இனிப்பு போளி செய்ய பூரணத்திற்கு பீட்ரூட்டும் உபயோகப்படுத்தலாம்.
-உண்மை இதழ்,1-15.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக