திங்கள், 10 நவம்பர், 2014

நோயற்ற நல வாழ்வு பெற...



நோயற்ற நல வாழ்வு பெற...

நமது தினசரி உணவு பழக்கத்தில் சில பழங்கள் மற்றும் பொருட்களை சேர்ப்பதன் மூலம் நோயற்ற ஆரோக்கிய வாழ்வை பெறலாம்.
கல்லீரல் பலப்பட ...
தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து மிக்கது.
ரத்த அழுத்தம் சரியாக....
தேநீர், காபிக்கு பதிலாக ஒரு குவளை மோரில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராகும்.
இதயத்திற்கு பலம் கிடைக்க:
மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடையும். செரிமான சக்தி அதிகரிக்கும். அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட மாதவிடாய் பிரச்சினை வயிற்று வலிகுறையும்.
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட பித்தம் குறையும்.  எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும். கறிவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளை குளிப்பாட்டிய உடன் கொடுக்க மாந்தம் குறையும். பசி  எடுக்கும்.
அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் சரியாகும்.கோவைப் பழம் தினசரி ஒன்று சாப்பிட சர்க்கரை நோய்  கட்டுப்படும்.
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் சரியாகும்.
வெங்காயத்தை நசுக்கி அதன் சாற்றை ஒரு சொட்டு கண்ணில் விட தூக்கம் வரும். வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து  குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும்.
வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது பூச புண் ஆறும்.மணத்தக்காளி கீரை  சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

முருங்கை இலை ஒருபிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் கர்ப்பிணிகளுக்கு பேறுகால வலி குறையும்.
விடுதலை,10.11.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக